உன்னால் மட்டுமே சாத்தியமாகும் !!

Go down

உன்னால் மட்டுமே சாத்தியமாகும் !!

Post by srivai.khader on Thu Jul 23, 2015 3:06 pm

உன்னால் மட்டுமே சாத்தியமாகும் !!

யா அல்லாஹு !

அன்றும் ஒவ்வொரு பருக்கையை கொண்டும்
எனக்காக நீ தான் உணவளித்தாய் !

இன்றும் அந்த உணவை கூட தொடர்ந்து
நீ தான் தந்து கொண்டிருக்கிறாய் !

இன்ஷா அல்லாஹு என்றும் உன்னால் மட்டுமே
தர முடியும். படைத்தவன் உன் ஒருவனால்
மட்டுமே அது சாத்தியமாகும் !

ஆனால் ! நீ அற்ப துளியில் படைத்த மனித இனங்கள்
இந்த பூமியில் பெருமை அடித்து கொள்கின்றன.

இப்படியாக .............

நான் தான் அன்று உதவி செய்தேன் என்று கர்வமாக !

அன்று என்னால் உண்ட அரிசியை கொண்டு இன்று நீ !
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று அகந்தையாக !

இனியும் நான் தான் உனக்கு தர வேண்டும் வேண்டும்
என்று பெருமையாக !

யா அல்லாஹு !

இவர்களின் கர்வத்தை கரைத்து !

இவர்களின் பெருமையை அகற்றி !

இவர்களின் அகந்தையை ஒழித்து !

இவர்களையும் நேர் வழி படுத்துவாயாக !

ஆமீன் !யாரப்பில் ஆலமீன் !!

கவிஞர்.இறைநேசன்
.


மு.அ.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum