கத்தருக்கு போன மச்சான் !

View previous topic View next topic Go down

கத்தருக்கு போன மச்சான் !

Post by srivai.khader on Thu Jul 23, 2015 4:43 pm

கத்தருக்கு போன மச்சான் !

கத்தருக்கு போன மச்சான்- வந்த
என் கனவெல்லாம் நீங்க மச்சான்

போன கப்பலும் கர திரும்பி வந்திருச்சு
என் ஆசை மட்டும் மனசுலே தங்கிருச்சு

வெளி நாட்டு மாப்பிளைன்னு வேண்டி
விரும்பி என்னை கொடுத்தாங்க

காலமெல்லாம் என்ன கலங்காம நீங்க
காபாற்றுவேன்னு கையை புடிச்சீங்க

போய் நீங்க வருஷம் ரெண்டு- இன்னும்
ஊரு வர மனசில்லையா ?

சொந்தமெல்லாம் வந்து கேட்க்க
எனக்கு சொல்லி மாள முடியலையே !

என் கண் நிறைஞ்ச பொண்சாதி-என்
மனசெல்லாம் மரியம் பீவி நீதாண்டி

இறைவனை நாடி என் பயணம்
மாத இறுதியில் நான் அங்கு வருவேன்

சுட்டெரிக்கும் பாலைவனம் – இங்கே
கொட்டும் வேர்வையும் பட்டு போகும்

உன்ன நினைச்சு வேதனையில் உள்ளம்
வேகுதடி கருகி தினம் தோறும்

பட்ட கடனை அடைக்கதானே உன்ன
விட்டிட்டு இங்கே வந்து கெடக்கேன்

சுன்னது தொழுது நீயும் மறக்காம
துவா கேட்டிடு நின்னு நமக்காக

பாலைவனம் இங்கே சோலை வளமானது
கஷ்டப்பட்ட பல பேர் தந்த உழைப்பால

தூங்க போனா என் மனசு ஏக்கம்
உன்ன நினச்சு கனவா வந்திடுமே

நான் கடல் கடந்து வரும் நாள் தான்
உன் கனவெல்லாம் இனி நிஜமாகும் !

கவிஞர்.இறைநேசன்.

கத்தருக்கு போன மச்சான்- வந்த
என் கனவெல்லாம் நீங்க மச்சான்

போன கப்பலும் கர திரும்பி வந்திருச்சு
என் ஆசை மட்டும் மனசுலே தங்கிருச்சு

வெளி நாட்டு மாப்பிளைன்னு வேண்டி
விரும்பி என்னை கொடுத்தாங்க

காலமெல்லாம் என்ன கலங்காம நீங்க
காபாற்றுவேன்னு கையை புடிச்சீங்க

போய் நீங்க வருஷம் ரெண்டு- இன்னும்
ஊரு வர மனசில்லையா ?

சொந்தமெல்லாம் வந்து கேட்க்க
எனக்கு சொல்லி மாள முடியலையே !

என் கண் நிறைஞ்ச பொண்சாதி-என்
மனசெல்லாம் மரியம் பீவி நீதாண்டி

இறைவனை நாடி என் பயணம்
மாத இறுதியில் நான் அங்கு வருவேன்

சுட்டெரிக்கும் பாலைவனம் – இங்கே
கொட்டும் வேர்வையும் பட்டு போகும்

உன்ன நினைச்சு வேதனையில் உள்ளம்
வேகுதடி கருகி தினம் தோறும்

பட்ட கடனை அடைக்கதானே உன்ன
விட்டிட்டு இங்கே வந்து கெடக்கேன்

சுன்னத்து  தொழுது நீயும் மறக்காம
துவா கேட்டிடு நின்னு நமக்காக

பாலைவனம் இங்கே சோலை வளமானது
கஷ்டப்பட்ட பல பேர் தந்த உழைப்பால

தூங்க போனா என் மனசு ஏக்கம்
உன்ன நினச்சு கனவா வந்திடுமே

நான் கடல் கடந்து வரும் நாள் தான்
உன் கனவெல்லாம் இனி நிஜமாகும் !

கவிஞர்.இறைநேசன்.


Last edited by srivai.khader on Tue Aug 11, 2015 1:30 pm; edited 2 times in total (Reason for editing : பிழை திருத்தம்)


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2521
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum