தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?

Go down

 கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்? Empty கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?

Post by முஸ்லிம் Sun Jan 16, 2011 7:29 pm

 கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்? Dr.ZakirNaik1

தமிழில் : அபு இஸாரா

கேள்வி



கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால்
இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில்
கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?



பதில்:



சைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும்
இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல
கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை.
ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு
உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும்
என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.



உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும்
இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.
அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில்
மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும்
படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட
பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது
மனிதனிடம்தான் இருக்கிறது.




இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.



1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக
இருக்க முடியும்.

சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல
இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ
உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம்
இஸ்லாத்தில் இல்லை.



2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை
குர்ஆன் அனுமதி அளிக்கிறது.



இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன்
அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது
அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது
வசனம்இ'முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட)
உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள்
மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால்
பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்
பட்டுள்ளன.' என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.



மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன்
நஹ்லின் ஐந்தாவது வசனம் 'கால்நடைகளையும் அவனே
படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள
ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன.
அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.'
எனவும்

அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன்
முஃமினூன் 21ஆம் வசனம் 'நிச்சயமாக உங்களுக்கு
பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின்
வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப்
புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக
பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து
நீங்கள் புசிக்கிறீர்கள்.'
எனவும் கால்நடைகளின் பயன்
பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.


3. மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர்
முழு உணவாகும்.



உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு
மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி
செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான
அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில்
இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும்
நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.



4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண
தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.


நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை
ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு
ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை
அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி -
சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள்
மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை
மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள்
மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் -
மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய
பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு
தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள்
தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று
இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச
உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக
ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர
வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான்
இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான
பற்களையும் படைத்திருக்கிறான்.



5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர
வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.


தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை
மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு
அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான
அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம்
செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான
அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை
உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக
அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை
மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன்
எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை -
இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும்
செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க
வேண்டும்?.




6. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி
அளித்திருக்கிறது.


இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு
உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது
அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று
கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள்
மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள்
அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு
உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.

இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின்
ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு
கூறுகிறது:

'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் -
அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும்
அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும்
சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில
படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'.

மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து
ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:




'மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு
ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'.


மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம்
முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும்
கீழக்கண்டவாறு கூறுகிறது:

'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை
படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை
அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'


இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் -
இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக
கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.




7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால்
பாதிக்கப்பட்டுள்ளது.

இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு
அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான
இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே
உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ
உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து
மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.



8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு
உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள்
உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற
கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான். ஒரு
உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும்
எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில்
முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய
காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள்
நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல்
யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது
அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு
உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல்
இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை
விளங்கிக் கொள்ள முடியும்.



9. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:


தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை
கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த
பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் -
தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக்
கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான
சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட
சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால்
தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது.
அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து
தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு
மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார்.
மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக
அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த
வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி -
வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை
கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு
தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம்
போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை
என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.



10. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு
உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம்
செய்வது ஆகாது.


ஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு
வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை.
ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை
கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட
- இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது
குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு
உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக
இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது
அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான்.
வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை -
ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக்
கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு
ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு -
குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள்
நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன
சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத
அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை
கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.



11. கால்நடைகள் பெருகும்:


உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம்
உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம்
உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக
பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில்
எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை
அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம்
- மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி
அளித்திருக்கிறான்.



அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது
வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:



'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில்
அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும்
உண்ணுங்கள்.'



நன்றி : ஒற்றுமை

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10889
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

 கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்? Empty Re: கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?

Post by முஸ்லிம் Sun Oct 04, 2015 6:59 pm

mashaAllah
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10889
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum