இறைவனிடம் கையேந்துங்கள் !

Go down

இறைவனிடம் கையேந்துங்கள் !

Post by srivai.khader on Sat Apr 11, 2015 10:52 am

இறைவனிடம் கையேந்துங்கள் !

நாம் வேண்டி கேட்பது எல்லாம்
இறைவனிடத்தில் மட்டுமே உதவி

நாம் விரும்பாமல் நமக்கெல்லாம்    
இறைவன் தருவான் மரணம்

ஒரு அடியான் ஒரு அடியானுக்கு
செய்யும் அநீதிகள் யாவையும்  

இறைவன் இதை மட்டும் ஒரு போதும்  
மன்னிப்பதில்லை திண்ணம்

இன்னும் தீங்கு இழைக்கப்பட்ட அடியான்
அந்த தவறை மன்னிக்காதவரை ........

நாவினால் பிறரை நோவிப்பது – நாம்  
நன்மைகளை இழந்த நிலை மறுமையில்

நாம் செய்த நல்ல அமல்கள் மட்டுமே  
நாளை பரிந்துரைக்கும் தீர்ப்பு நாளில்  

நாம் செய்து வைத்த தீமைகளால் – நாம்        
நன்மைகளை இழந்து கொடிய நரகில்

பிறருக்கு செய்த உதவிகளை என்றாவது  
நாம் சொல்லி காட்டினாலே போதும்  

செய்த உதவியின் பலனை இன்னும்  
இழந்து நிற்ப்போம் மறுமை நாளில்  

இறைவனை மறந்து பிறருக்கு – நாம்  
செய்யும் துரோகம் நமக்கு மகிழ்வு  

நாளை இறைவன் தரும் சோதனை  
மீள முடியாதா கொடிய நிகழ்வு  

பிறரை துன்பம் செய்து பார்பதே  
நமக்கெல்லாம் கிடைக்கும் இன்பம்

நாளை இறைவன் கூலியாய் தருவான்    
துன்பம் அது நிரந்தரமாக என்றும்  

பிறரை பழிவாங்க நமக்கோ துடிப்பு  
இறைவன் பிடிப்போ மீள முடியாது  

ஈமானை இழக்காதே எந்த ஒரு நிலையிலும்
இறைவன்தான் நமக்கு என்று பொறுமையோடு
 
உலக வாழ்கையில் இனி மூழ்கிடாமல் எழுந்திடு  
மறுமை வாழ்வே நிரந்தரம் என்று நினைத்திடு

தீர்ப்பு நாளின் அதிபதி அவன் முன்பு –நமது    
கணக்குகளை நேர் செய்வான் ஒரு கணமே

வணங்கிடுவோம் மாண்போடு ரஹுமானை !  
இரு கை ஏந்தி கேட்டிடுவோம் கோமானை !!

கவிஞர்.கவிநேசன்


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum