சந்தனக்கூடு ! கூடுமா இது ?

Go down

சந்தனக்கூடு ! கூடுமா இது ?

Post by srivai.khader on Sat Apr 11, 2015 10:55 am

சந்தனக்கூடு ! கூடுமா இது ?

அறியாத காலம் அது – முன்னோர்கள்
தெரியாமல் செய்து வந்தது

இது தவறு என்று தெரிந்ததுமே
திருந்த வேண்டும் தெளிவு கொண்டு

மூதையார்கள் கனவில் வந்தார்கள்
முன்னோர்கள் இதை செய்தார்கள்

கண் மூடி நம்பிக்கை கொண்டு
தர்ஹா நோக்கி ஒரு கூட்டம்

வழி வழியாய் தொடர்ந்து வந்து
இது வலம் வரும் நிகழ்காலம்

நல்லது ஓன்று நடந்து விட்டால்
நாதாக்கள் மீது ஒரு நீயத்து

கெட்டது ஓன்று நடந்து விட்டால்
குடும்பம் எல்லாம் ஒரு நீயத்து

இவர்கள் பிறை கணக்கே தனி கணக்கு
மார்கத்தில் இல்லா கந்தூரி கணக்கு

குடும்ப சகிதம் புத்தாடை உடுத்தி
புளிசோறுடன் பொறித்த மாசி எடுத்து

கத்தூரி விழாவில் கலந்து கொள்ள
தர்ஹா நோக்கி இவர்கள் பயணம்

பிற நாட்களை விட பெரும் கூட்டம்
மனதெல்லாம் மண்ணறை மீது நாட்டம்

பள பளக்கும் போர்வை போர்த்தி
தர்ஹாவில் பச்சை நிற அடக்கஸ்தலம்

பரம்பரை நிர்வாகிகள் எல்லாம்
தூய பட்டுடுத்தி நுழைவாயிலில்

எண்ணெய் விளக்கு எரியும் ஒரு புறம்
பக்கீர் மார்கள் கூட்டம் மறு புறம்

அரண்மனை கொடி ! இதோ ரெடி !!
பூக்கள் சந்தனம் தடவி துவாவுடன்

அலங்கரித்த யானை மேல் சுமந்து
இசையோடு ஊரையே வலம் வர

கடந்த வருட வசூலை பொறுத்து
இசை நிகழ்ச்சி ஓன்றும் இருக்கும்

இசையோடு பாடல்களை பாட
இஸ்லாமிய பாடகரும் மேடை ஏறுவார்

தர்காவின் சரித்திரத்தை பிழை இன்றி
சரியாக பாடி முடிப்பார்

மழையாக மக்கள் கண்ணீர் சிந்தி
விழாவின் ஒரு பகுதி முடிந்து விடும்

நலம் வேண்டும் செல்வம் கொண்டு என்று
மக்கள் நாதாக்களிடம் அழுது கேட்கும் காட்சி

நாமெல்லாம் அல்லாஹுவின் படைப்பு
எண்ணி திருந்த இன்னும் ஏன் மனமில்லை

விழா என்று ஓன்று இஸ்லாத்தில் இல்லை
விலகி வாருங்கள் திருமறையில் தெளிவுண்டு

தவறு என்று தெரிந்து திருந்தியவர்கள் கோடி
தவறாமல் பலர் தர்ஹாவை இன்று வரை நாடி

பரம்பரை பகட்டை ஒழித்து வாருங்கள் மீண்டு
இணை வைக்காதீர்கள் ! இறைவனுக்கு இனியும்

இம்மைக்கும் ,மறுமைக்கும் அதிபதி அவனே- நம்
தேவைகளை நிறைவேற்றுவது அவன் ஒருவனே !

சந்தனக்கூடு ................... மார்க்கத்தில் கூடாது !!

கவிஞர்.கவிநேசன்.மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum