மத்திய காஸாவில் இஸ்ரேலிய அடாவடி: சிறுவன் படுகாயம்!
Page 1 of 1

கடந்த செவ்வாய்க்கிழமை (27.12.2011) மத்திய காஸாவின் மஸ்தார் கிராமத்தினுள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, அக்கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் முஹம்மத் தல்பானியைத் துப்பாக்கியால் சுட்டது.
படுகாயமடைந்த சிறுவன் உள்ளூர்வாசிகளால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தற்போது அவனது உடல்நலம் தேறிவருவதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதே தினத்தில், மத்திய காஸாவின் மகாஸி அகதி முகாமைக் கையகப்படுத்துமுகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கைகள் பலஸ்தீன் விடுதலைப் போராளிகளால் முற்றாக முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் நடவடிக்கை வெற்றியின் மூலம், காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தம் நடந்து முடிந்து மூன்று வருடகாலம் நிறைவுற்ற நிலையில், எஞ்சியிருக்கும் பலஸ்தீன் பிரதேசங்கள் மீதான எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்துவதில் விடுதலைப் போராளிகள் எப்போதும் முன்னெச்சரிக்கையோடு தயாராக இருப்பது சந்தேசகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என விடுதலைப் போராளிகள் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

Similar topics
» பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி
» கணக்கின்றித் தொடரும் கைதுகள்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை அடாவடி
» ஆக்கிரமிப்பு இராணுவத் தாக்குதலில் 9 பலஸ்தீனர்கள் படுகாயம்
» ஆக்கிரமிப்புப்படைத் தாக்குதலில் மூன்று பலஸ்தீன் மீனவர் படுகாயம்
» டெல்லி உயர்நீதிமன்றதில் குண்டுவெடிப்பு 12 பேர் பலி 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum