தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா

Go down

சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா  Empty சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா

Post by முஸ்லிம் Tue Jan 17, 2012 5:24 pm

புதுடெல்லி:ஜனநாயக நாடான இந்தியாவுக்கு சீனாவைப் போல ஏகாதிபத்திய நாடாக முடியாது என கூகிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்சேபகரமான போஸ்டுகள் தொடர்பாக க்ரிமினல்
நடவடிக்கையை எதிர்கொள்ளும் 20 சமூக இணையதளங்களுடன் டெல்லி
உயர்நீதிமன்றத்தில் தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வேளையில் கூகிள்
இந்தியா இக்கருத்தை தெரிவித்தது.

கூகுள் இந்தியா தரப்பில் ஆஜரான
வழக்கறிஞர், என்.கே.கவுல் கூறியதாவது: ‘இந்த விவகாரம், பேச்சுரிமை மற்றும்
கருத்துக்களை வெளியிடும் உரிமை குறித்த அரசியல் சட்ட விதிமுறைகள்
தொடர்புடையது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு பேச்சுரிமை உள்ளது. சீனா
போன்ற கட்டுப்பாடுமிக்க, ஜனநாயகமற்ற நாடல்ல இந்தியா. எனவே, தகவல்களை
வெளியிடுவதைத் தடை செய்ய முடியாது. இணையம் என்பது, சர்வதேச அளவிலான ஒரு
தொழில்நுட்பம். உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் இவற்றை
பயன்படுத்துகின்றனர்.

நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், அரசுகள்,
அரசில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்துகின்றனர். சில
நொடிகளிலேயே, பல கோடி பேர், இணையதளங்களில் பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.
இந்நிலையில், இவற்றுக்கு தடை விதிப்பதால், இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு
தேவையான தகவல்களை பெற முடியாத சூழல் ஏற்படும்.

கூகுள் இந்தியா என்பது, ஒரு தேடு பொறியோ
(சர்ச் இன்ஜின்) அல்லது இணையதளங்களை உருவாக்கும் தளமோ அல்ல. இது,
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின், இந்திய பிரிவு.
சட்டப்பூர்வமாக செயல்படக் கூடியது. எனவே, கூகுள் இந்தியாவுக்கு எதிராக,
குற்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, கூகுள்
இந்தியா நிர்வாகிக்கு கீழ் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு தடை
விதிக்க வேண்டும்.’ இவ்வாறு, என்.கே. கவுல், தன் வாதத்தின்போது
தெரிவித்தார்.

வலைத் தளங்களுக்கு எதிராக கோர்ட்டில் மனு
தாக்கல் செய்த வினய் ராய் கூறுகையில், கூகுள் இந்தியா என்பது தேடு பொறி
அல்ல என கூறியதை கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்.

அதேவேளையில் அரசு சார்பாக ஆஜரான
வழக்கறிஞர் ஹரிஹரன் கூறுகையில்; ‘வெளியிடும் போஸ்டுகளுக்கு நிறுவனங்கள்தாம்
பொறுப்பு. அதில் இருந்து கூகிள் இந்தியா, ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு
லாபம் கிடைக்கிறது’ என்றார்.

இவ்வழக்கின் விசாரணை வருகிற வியாழக்கிழமை
தொடரும். வழக்கு தொடர்பாக 2000 க்ரிமினல் புகார்கள் கிடைத்துள்ளதாக நீதிபதி
கெய்த் கூறினார்.

சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum