தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்

Go down

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்  Empty திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்

Post by முஸ்லிம் Sat Jan 28, 2012 8:28 pm

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்  Ramiz-Vohraநாதியாத்(குஜராத்):இறைவன்
நாடினால் எதுவும் சாத்தியமே! ஒருவர் தனது நோக்கத்தை அடைய இடைவிடாது
தொடர்ந்து உறுதியான மனதுடன் போராடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு
எடுத்துக்காட்டாக 16 வயது மாணவன் ரமீஸ் வோரா திகழ்கிறார்.

இவர் தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை
மனனம் செய்யத் துவங்கி 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார்.
ஆச்சரியதக்க விஷயம் என்னவெனில், இவருக்கு பிறவியிலேயே கண் தெரியாது.

குஜராத் மாநிலத்தில் கஞ்சாரி கிராமத்தில்
வசிக்கும் ஏழைக் குடும்பத்தில் ரமீஸ் 1996-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது
தந்தை ஃபாரூக் வீடு, வீடாகச் சென்று துணிகளை விற்று வாழ்க்கையை
நடத்துகிறார். ரமேஷ் பிறந்தபொழுது அவருக்கு கண்பார்வை தெரியாது என
தெரிந்தவுடன் ஃபாரூக் மனம் உடைந்து போனார். ஆனால், தனது தந்தையின் கவலையை
போக்கி தனது 16-வது வயதில் அவரை உவகை கொள்ள வைத்துள்ளார் ரமீஸ்.

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்  Ramiz-Vohra-with-his-father-and-mother

ரமீஸ்,பிறவியிலேயே கண் பார்வை
தெரியாவிட்டாலும் புத்திசாலியான மாணவன். அவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று
கல்வி பயில்வதுடன், மதரசாவுக்கும் செல்கிறார். தனது 13-வது வயதில்
திருக்குர்ஆனை மனனம் செய்ய துவங்கினார். 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம்
செய்துவிட்டார்.

தனது அனுபவங்களை ரமீஸ் பகிர்ந்துகொள்கிறார்:
“எனது நண்பர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்யும் வேளையில் நானும் அவர்களுடன்
இருப்பது வழக்கம். ஆசிரியர் பாடத்தை கேட்பார். நானும் அவர்களுடன் இருந்து
மனனம் செய்ய துவங்கினேன். எனது தவறுகளை ஆசிரியர் திருத்துவார்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! நான் 3 ஆண்டுகளில் திருக்குர்ஆனை முழுமையாக
மனனம் செய்துவிட்டேன்”.

ரமீஸின் சாதனையை கண்டு அவரது குடும்ப
உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும்
கொள்கின்றனர். அவரது தாயார் ஸல்மா வோரா கூறுகையில், “ரமீஸை நினைத்து
பெருமையாக இருக்கிறது. முஃப்தி அஹ்மத் காபூரி அவர்கள் ரமீஸை கெளரவித்தார்”
என கூறுகிறார்.

ரமீஸ் கூறுகையில், ‘அடுத்த 9 ஆண்டுகளில்
ஆலிம் மற்றும் முஃப்தி(உயர் படிப்பு) பட்டங்களை படித்து முடிப்பதே எனது
குறிக்கோளாகும். எனது மூத்த சகோதரர் ஆலிம் பட்டப்படிப்பை பயின்று
வருகிறார்.’ என தெரிவித்தார்.

ஹாஃபிஸ்(திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்)ரமீஸ் வரும் ஆண்டுகளில் முஃப்தி ரமீஸாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
» கல்வியறிவு அற்ற 85 வயது மூதாட்டி குர்-ஆன் மனனம்
» ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி! – அமெரிக்காவில் பரபரப்பு!
» அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
» போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum