தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடையநல்லூர் விவகாரம் - கருத்துச் சுதந்திரமா? கறுத்த சுதந்திரமா?

Go down

கடையநல்லூர் விவகாரம் - கருத்துச் சுதந்திரமா? கறுத்த சுதந்திரமா?   Empty கடையநல்லூர் விவகாரம் - கருத்துச் சுதந்திரமா? கறுத்த சுதந்திரமா?

Post by முஸ்லிம் Wed Feb 01, 2012 4:34 pm

இந்நேரம் ஆசிரியர் அவர்களுக்கு...

ஐயா,

எங்கள் ஊரில் இன்று நடைபெற்ற ஜமாஅத்
விலக்கம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய
என்கருத்தை இங்கு எழுதி அனுப்பியுள்ளேன். தங்கள் தளத்தில் வெளியிடும்படி
கேட்டுக்கொள்கிறேன்.




கருத்துச் சுதந்திரமா? கறுத்த சுதந்திரமா?

அவன் அப்பாவி. எந்த வம்புதும்புக்கும்
போகாதவன். ஆனாலும் தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து தற்காத்துகொள்வதற்கான
திராணியும் தெம்பும், வீரமும் விவேகமும் உடையவன்.

அவனுக்கு ஒரு பக்கத்துவீட்டுக்காரன். அவனும் நல்லவன் தான். ஆனால் பணத்துக்குப் பல்லிளிக்கும் மனித பலவீனம் கொஞ்சம் ஜாஸ்தி.

அப்பாவி'க்கு
ஒரு பங்காளி இருந்தான் வேறொரு ஊரில். அப்பாவியை சிக்கலில் மாட்டிவிட்டு
அதில் இன்பம் காண்பது அவனது குணம். பக்கத்துவீட்டுக்காரனின் பணத்தாசை
பற்றியும் பங்காளி அறிந்திருந்தான்.

தெருவில்
நடந்துசென்றுக்கொண்டிருந்த அப்பாவியை நோக்கி எதிர்பாராதவிதமாக
பக்கத்துவீட்டுக்காரன் ஏசத் தொடங்குகிறான். ஏச்சென்றால் சின்ன ஏச்சல்ல;
அவன் தன் உயிரினும் மேலாகப் போற்றும் தாயை, தமக்கையை, மனைவியைப் பற்றி
கொச்சையாக ஏசத் தொடங்குகிறான். ஆண்மகனான அந்த அப்பாவியால் அதைப்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஏசியவனை
நோக்கிப் பாய்கிறான். காரணமேயில்லாமல், கன்னாபின்னாவென்று பேசிய அந்த நாவை
அறுத்துப்போட்டாலும் அவன் ஆவேசம் அடங்காது. அதற்காக அவன் எதற்குமே தயாராக
இருக்கிறான்.

அப்படி தெண்டத்துக்கு ஏசியவனை நோக்கிப் பாய்கின்ற அந்த
அப்பாவியைத் தடுத்து நிறுத்துகிறார்கள் அந்தத் தெருவிலிருக்கும்
அறிவுஜீவிகள் சிலர். அந்த அப்பாவிமீதே குற்றமும் சாட்டுகிறார்கள்.

"எப்படி ஒரு மனிதனை அடிக்கப் போகலாம்?"

"நீ சரியான பயங்கரவாதியாய் இருப்பாய் போலிருக்கிறதே?, உன்னைப் போலிசில் பிடித்துக் கொடுத்தால் தான் சரிப்பட்டு வரும்."

அந்த அதிபுத்திசாலி அறிவுஜீவிகள்
ஒருவருக்குக்கூடத் தோன்றவேயில்லை, இந்தப் பக்கத்துவீட்டான் அந்த
அப்பாவியின் தாய், தமக்கையைப் பற்றி ஏன் மோசமாகப் பேசவேண்டும் என்று
கேட்பதற்கு.

அதையே கேள்வியாய் கேட்டான் அப்பாவி - "முதலில் அவன் ஏன் என் உயிருக்குயிரானவர்களைப் பத்தி தப்பா பேசுறான்னு கேட்டீங்களா? நீங்க?"

அதற்கு அந்த அதிமேதாவி அறிவுஜீவிகள்
பதிலளிக்கிறார்கள் "நீ கவலப்படாதே, பக்கத்துவீட்டுக்காரன் கழிசடைத்தனமா
நடந்துக்கறான்னு நாம் கேஸ் போடலாம்"

"அதுசரி, அவன் என் தாய், தமக்கை, தந்தையை மோசமாக திட்டிக்கிட்டே இருப்பான், நானு பொறுமையா கேஸ் போடணும். போங்கய்யா, நீங்களும்..."

இன்னும் சிலர், "அவன் திட்டினா நீயும் திட்டிட்டுப் போயேன், அதுக்கு ஏன் அடிக்கறே?"

"அடப்பதர்களா! தீயினால் சுட்டப் புண்
உள்ளாறும் குறள் தெரிஞ்சவங்க தானே நீங்க. எனக்கு, யாரையும், கொச்சையா
திட்டத் தெரியாது, அது எனக்குத் தேவையுமில்ல!"

இன்று கடையநல்லூரில்
இஸ்லாமிய கொள்கைகளில் நம்பிக்கையில்லாத முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த
இளைஞனொருவன் முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான இறைத்தூதர்களைப் பற்றி யாரோ
துவேஷமாக எழுதிவைத்ததை தானும் கேடுகெட்டு பதிவு செய்தமைக்காக அந்த ஊர்
ஜமாஅத் அவனைத் தங்கள் வட்டத்திலிருந்து விலக்கி விட்டுள்ளது. அதாவது,
"எங்கள் தாயினும், மனைவி பிள்ளைகளினும் மேலான எங்கள் இறைத்தூதர்கள் பற்றி
துவேஷமாக கொச்சையாகத் திட்டுகிற நீ எங்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூடாது"
என்பது தான் அதற்கு அர்த்தம்.

ஆனால், இந்த ஜமாஅத் விலக்கத்திற்கு,
ஒரு மோசமான நடத்தைக்கு எதிர்வினையாற்றியதற்கு எதிராக கருத்துச்
சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று இந்த அறிவுஜீவிகள் உடனே
பொங்குகிறார்கள். இந்த அ.ஜீக்களுடைய ஆத்தா, அப்பன், தமக்கைமீது கொச்சையாகப்
பேசினாலும் அப்படித்தான் நடந்துகொள்வார்களா இந்த சுரணையற்றவர்கள்?

சரி,
நக்கீரன் அலுவலகத்தை, கேவலம் ஒரு 'மாட்டுக்கறி'க்காகத் தாக்கிய
ஜெஜேக்களுக்கு ஏன் இதே அறிவுரையை இந்த மாய ஜீவிகள் தரவில்லை? "அவன் என்ன
வேணுமானாலும் எழுதட்டும், நாம கேஸ் போட்டுக்கலாம்?" ஏன் சொல்லவில்லை?
அப்போது மட்டும் எங்கே மாயமானீர்கள்?

கருத்துச் சுதந்திரம் என்பது
கன்னாபின்னாவென்று பேசுவதற்கல்ல; ஒரு மதத்தில், ஒரு கட்சியில், ஒரு
கொள்கையில் இன்னின்ன அம்சம் சரியில்லை என்று உணர்வதை வெளிப்படையாகப்
பேசுவது. அப்படி பேசுவதற்கு எந்த முஸ்லிமும் கோபப்படமாட்டான். அறிந்த அளவு
விளக்கம் தான் தருவான். ஆனால் கொள்கைகளில் குற்றம் சுமத்த வழியற்றுப்போய்
ஒருமனிதரின் ஆளுமையை கருத்துரிமை காரணம் காட்டி சிதைக்க, கொலை செய்ய
முற்படுவது, உலக்கையை மடியில் கட்டுகிற மலடியின் கதையாகிவிடும்.

கருத்துச் சுதந்திரத்தைப் பொருத்த அளவில்
முஸ்லிம்களுடைய நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியானதுதான். இஸ்லாம் மீது,
அதன்கொள்கை கோட்பாடுகள் மீது எந்தவிதமான விமர்சனமும் செய்யலாம். அதற்கு
விளக்கமளிக்க எப்போதும் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால்
நபிமார்கள் போன்ற புனிதர்கள் மீது அவதூறைச் சேறாக வீசி அதைக் கருத்துச்
சுதந்திர முகமூடி போட்டுக்காண்பித்து, ஆளுமைக் கொலை (கேரக்டர் அஸாசினேஷன்)
செய்வதை சுயபுத்தியுள்ளவர்களால் பொருத்துக்கொள்ள முடியாது.

சல்மான் ருஷ்தியாக இருந்தாலும்,
எம்.எஃப். உசேனாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்.
சுதந்திரமாக உன் கையை எப்படி வேண்டுமானாலும் வீசிக்கொள். ஆனால்
அடுத்துள்ளவனின் மூக்கில் இடிக்காமல் இருக்கட்டும்.

எம்.எஃப்.உசேனை ஆதரித்த ஒரே ஒரு (சரியான)
முஸ்லிமைக் கூட காட்ட இயலாது. ஆனால் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால்
கூப்பாடு போடும் பலருக்கும் சல்மான் ருஷ்டிக்கு ஒரு நிலைப்பாடு,
எம்.எஃப்.உசேனுக்கு வேறு நிலைப்பாடு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலே சொன்ன கதையில், அவன் என்று குறிப்பிட்ட அப்பாவி நம் இந்திய
முஸ்லிம்களைக் குறிப்பிடலாம். பக்கத்து வீட்டுக்காரன் என்பது 'பணத்துக்கு'
ஆசைப்பட்டு பலியாடுகளாக 'புரட்சி' செய்வதாக நினைத்துக்கொண்டு தேவையே
இல்லாமல் ஆளுமைக் கொலைகளைச் செய்யும் அற்பர்களைக் குறிப்பிடலாம்.
அப்படியானால், அந்தப் பங்காளி...?

அண்மையில் கர்நாடகாவின்
மங்களூர் அருகே முஸ்லிம் ஏரியாவில் புகுந்து பாகிஸ்தான் கொடியேற்றி
'கலவரத்துக்குக்' காத்திருந்தார்களே, அந்த ஓநாய்கள்தான்.
கூகுளிட்டுப்பாருங்கள் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பு உட்பட தெரிய
வரும். அப்படியேனும், அறிவுஜீவிகள் இந்த 'மனு'சச் சதிப் பின்னலைப்
புரிந்துகொள்கிறார்களா, பார்க்கலாம்.

- கடையநல்லூரான்

கடையநல்லூர் விவகாரம் - கருத்துச் சுதந்திரமா? கறுத்த சுதந்திரமா?   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்
» விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!
» தெஹல்கா விவகாரம்: வழக்கை ரத்துசெய்ய பங்காரு லக்ஷ்மன் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு
» சஞ்சீவ் பட் கைது விவகாரம் – களம்காணுகிறார் காந்தியவாதி – மாநில அளவில் போராட்டம் நடத்த அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum