தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் – துனீசியா அறிவிப்பு

Go down

இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் – துனீசியா அறிவிப்பு  Empty இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் – துனீசியா அறிவிப்பு

Post by முஸ்லிம் Sat Feb 11, 2012 6:11 pm

துனீஸ்:இஸ்ரேலை ஒருபோதும் துனீசியா
அங்கீகரிக்காது என ஆளுங்கட்சியான அந்நஹ்ழாவின் உயர் தலைவர் ராஷித் அல்
கன்னோஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீன் விவகாரத்தில் அந்நஹ்ழா
கட்சிக்கு உள்ளே கருத்து வேறுபாடுகள் இல்லை என கன்னோஷி கூறியுள்ளார்.

முன்னாள் சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின்
அலியின் 23 ஆண்டுகள் நீண்ட ஏகாதிபத்திய ஆட்சி முல்லைப்பூ புரட்சியின்
மூலம் முடிவுக்கு வந்ததையொட்டி நடந்த தேர்தலில் அந்நஹ்ழா கட்சி வெற்றி
பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

துனீசியாவில் புதிய அரசின் இஸ்ரேலுடனான
அணுகுமுறை குறித்து ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில் கன்னோஷியின் அறிவிப்பை
தொடர்ந்து ஊகங்களும், சந்தேகங்களும் முடிவுக்கு வந்துள்ளன. பின் அலியின்
அரசு இஸ்ரேலுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

துனீசியாவில் மதசார்பற்ற அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் கன்னோஷி நிராகரித்துள்ளார்.

இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் – துனீசியா அறிவிப்பு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum