தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நம்பிக்கை துரோகம் !

Go down

நம்பிக்கை துரோகம் !   Empty நம்பிக்கை துரோகம் !

Post by srivai.khader Thu Aug 08, 2013 6:09 pm

நம் மீது பிறர் கொண்டுள்ள நம்பிக்கை ! –இதை
கடுகளவு மாற்றம் இல்லாமல் பார்த்துக்கணும்

முழுமையாக நம்மை நம்பி இருப்பவனை –நாம்
முழு மனதோடு பாத்துக்கணும் முதலில் நினை

உன்னையே முழு மனதில் நம்பிக்கை கொண்டு
உறவாடும் அந்த மனதை நினைவில் கொள்ளு

நீ கூறிய வார்த்தையை வாக்காய் எண்ணி –அவன்
நிறைவோடு தொடர்ந்து வரும் நிலையை எண்ணு

காலங்கள் மாறும் இது இயற்கையின் விதி –ஆனால்
நம்பிக்கையின் ஆழம் உன் மீது கொண்டுள்ளவன் கதி

மனவருத்தம் மாற்றம் வந்துவிட்டால் –இன்னும்
முறையாக கலந்தது பேசி உன் முடிவை ஏடு

இது தவிர்த்து பணம் கொண்ட மமதையோடு –நீ
தவறு செய்ய நினைக்கும் மனதை விட்டு விடு

நீதான் என்று ஆழமான அவன் நினைப்பில் –இனி
துரோகம் மட்டும் செய்ய என்றும் எண்ணாதே

நீ அறிவு இழந்து செய்யும் இந்த கேடு செயல் –நாளை
கெதி இழந்து நிற்க செய்யும் உன் வாழ்கை சூழ்நிலை

வேண்டாம் நம்பிக்கை துரோகம் என்றும் –முடிந்தால்
நல்லது செய்வோம் நம் வாழ்வும் சிறந்து விளங்கும்


நம்பிக்கை இது காப்பாற்ற வேண்டியது !
துரோகம் இது செய்ய கூடாத ஓன்று !!


-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4865
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum