தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆர்.எஸ்.எஸ்.சிடம் பணிந்தார்; பிரதமர் பதவிக்கு போட்டியில்லை! அத்வானி அறிவிப்பு

Go down

ஆர்.எஸ்.எஸ்.சிடம் பணிந்தார்; பிரதமர் பதவிக்கு போட்டியில்லை! அத்வானி அறிவிப்பு  Empty ஆர்.எஸ்.எஸ்.சிடம் பணிந்தார்; பிரதமர் பதவிக்கு போட்டியில்லை! அத்வானி அறிவிப்பு

Post by முஸ்லிம் Wed Sep 21, 2011 4:01 pm

நாக்பூர்:
பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
துணைபிரதமருமான எல்.கே.அத்வானி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




நாட்டில்
நடைபெறும் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தவுள்ள பாஜக தலைவர் அத்வானி
தனது தாயகமான ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதரவைக் கோரி அந்த அமைப்பின் தலைவர்
மோகன் பகவத்தை சந்தித்தார். அத்வானி பகவத் சந்திப்பையடுத்து
செய்தியாலர்களிடம் பேசிய அத்வானி தாம் பிரதமர் பதவிக்கு போட்டியிட
போவதில்லை என்று கூறினார்


கடந்த சில
நாட்களுக்கு முன் ரத யாத்திரை நடத்தப் போவதாக அத்வானி அறிவித்திருந்தார்.
ஆனால், நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்க ஆர்.எஸ்.எஸ்
திட்டமிட்டிருந்த நிலையில் தங்களை கலந்தாலோசிக்காமலேயே, வரும் தேர்தலில்
தன்னை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்திக் கொள்ளும் திட்டத்துடன் இந்த
யாத்திரையை அத்வானி அறிவித்ததால் ஆர்எஸ்எஸ் உஷாரானது.


இதனால், 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று அத்வானி வெளிப்படையாக அறிவிக்க
வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அத்வானியை வலியுறுத்தியது. அப்படி அறிவிக்கும்
பட்சத்தில் மட்டுமே யாத்திரைக்கு ஆதரவு தரப்படும் என்றும் ஆர்எஸ்எஸ்
திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனால் வரும் அக்டோபர் 11ம் தேதி தனது ரத
யாத்திரையைத் தொடங்கத் திட்டமிட்டிருந்த அத்வானி அதிர்ந்து போனார்.



மேலும்
2014ல் வரும் தேர்தலில் ராகுல் காந்தியை காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முன்
நிறுத்தும் நிலையில் அவருக்கு சரியான எதிரணி வேட்பாளராக மோடியை நிறுத்தலாம்
என ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. பிரதமர் பதவிக்கு அத்வானி மீண்டும் குறி
வைப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை இதை அத்வானியிடம் தெரிவிக்க முடிவு செய்த
ஆர்எஸ்எஸ் தலைமை அவரை நாக்பூருக்கு வருமாறு அழைத்தது.


நாக்பூரில்
இன்று ஆர்எஸ்எஸ் தலைவரை நேரில் போய் சந்தித்தார் அத்வானி. சந்தித்த சற்று
நேரத்தில் பிரதமர் பதவிக்கு தாம் போட்டியிவில்லை என்று மோகன் பகவத்
மற்றும் இந்துத்துவா தலைவர்களிடம் விளக்கினார். இவர்களுடனான
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, நான் பிரதமர்
பதவிக்குப் போட்டியிடவில்லை என்றார்.


அத்வானி
இதுவரை 5 ரத யாத்திரைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊழலுக்கு எதிரான
இந்த யாத்திரையை மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி,
குஜராத்தில் இருந்து அத்வானி தொடங்குவார் என்றும், ஜெயப்பிரகாஷ் நாராயணன்
பிறந்தநாளான அக்டோபர் 11ம் தேதி தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வந்த
நிலையில் அத்வானியின் ரத யாத்திரை பிகாரில் இருந்து தொடங்கும் என்று
தெரிகிறது.


கடந்த
1990-ம் ஆண்டு அத்வானியின் ராம் ரத யாத்திரை, பிகார் மாநிலத்துக்குள்
நுழைந்தபோது அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் யாதவால் தடுத்து
நிறுத்தப்பட்டது. பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் உத்தரவின்பேரில்
அத்வானியை கைது செய்தார் லாலு. அதன் நினைவாக அத்வானி இந்த முறை பிகாரில்
இருந்தே தனது ரத யாத்திரையை தொடங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள்
வலியுறுத்தி உள்ளனர்.


இதற்கு
அத்வானியும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அத்வானியின் ரத யாத்திரை
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த தினமாக அக்டோபர் 11ம் தேதி, அவரது பிறந்த
இடமான பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாரா என்னும் இடத்தில்
இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குஜராத்
முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தைப் புறக்கணித்த ஐக்கிய ஜனதா தள
தலைவர்கள் அத்வானியின் ரத யாத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள
மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10945
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் ரத யாத்திரை அத்வானி அறிவிப்பு!
» தேசியக் கொடியேற்றக் கூடாது என்பதன் மூலம் தீவிரவாதிகளிடம் சரணடைகிறார் பிரதமர்-அத்வானி
» எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா
» பிரதமர் வேட்பாளர்:விட்டொழிக்க அத்வானிக்கு மனமில்லை
» சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் – பிரதமர் மன்மோகன் சிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum