தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா

Go down

உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா  Empty உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா

Post by முஸ்லிம் Wed Sep 21, 2011 4:05 pm




ஆமதாபாத்:மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி
மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில்
சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம்
அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் வகேலா
கூறியதாவது; ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்
உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை
அதிகரித்துக் கொள்வதற்காக, இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.

இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க
வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில்
தரை இறங்கிவிட்டதா? குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை
விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உயர்
நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவே இல்லையே.
உண்ணாவிரததின் மூலம் தன்னை நிரபராதி என காட்ட முயற்சிதுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின்
வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் 3000 க்கும் அதிகமான
முஸ்லிம்களை கொன்று விட்டு இப்பொழுது இல்லை என்று மத சார்பு நாடகம்
ஆடுகிறார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை.

குஜராத்துக்கு தொழி்ல் தொடங்க வரும்
தொழிலதிபர்களை, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று
கூறுமாறு நிர்பந்திக்கப்படுவதாகவும், மோடி ஆட்சியில் ஊழல்
அதிகரித்துவிட்டதாகவும், மேலும் நான் தான் உண்மையான் காந்தியவாதி, நான்
எந்த அரசியளுக்க்காகவும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மக்களின் நலனுக்காக
மட்டுமே உண்ணாவிரதம் இருந்துள்ளேன் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர்
சிங் வகேலா கூறியுள்ளார்.

மேலும் ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் கூறும்போது; தன்னை
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம்
என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற
தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை
துவக்கியுள்ளார். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச்
சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பாஜகவின் கூட்டணிக்
கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரத்தை விமர்சித்துள்ளது.
அதுபற்றி அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாட்டில் 78 சதம்
மக்கள் தினசரி 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள். 80 சதம் மக்கள் தினசரி
பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டு, மீதி நேரம் பட்டினியால்
தவிக்கும் அவர்களைப் பற்றி விவாதிக்க யாரும் இல்லை” மேலும் தேவை இல்லாத
ஒன்று என்று மோடியின் உண்ணாவிரதத்தை விமர்ச்சித்துள்ளார்.

குல்லா அணிய மறுப்பு: மோடி இரண்டாவது நாள்
உண்ணாவிரதம் இருந்த போது, ஆமதாபாத் புறநகரில் உள்ள பிரானா கிராமத்தைச்
சேர்ந்த இமாம் ஷாகி சையத் என்பவர், முஸ்லிம் குல்லாவை மோடிக்கு அணிவிக்க
முயன்றார். இதை ஏற்க மறுத்த மோடி, சால்வையை மட்டும் அணிவிக்கும்படி
வேண்டினார். பின்னர், சையத் சால்வை அணிவித்ததும் அதை ஏற்றுக் கொண்டார்.

இது குறித்து சையத் குறிப்பிடுகையில், “குல்லா அணிய மறுத்த மோடி என்னை அவமதிக்கவில்லை; இஸ்லாமை அவமதித்து விட்டார்” என்றார்.


உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum