தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

Go down

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு  Empty ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

Post by முஸ்லிம் Sun Sep 25, 2011 4:21 pm






ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு  Flag-Pins-India-Palestine-270x170ஐ.நா.பொதுச்சபை:அமெரிக்கா
ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும்
நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு தன்னுடைய முழுமையான
பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழனன்று ஐ.நாவிற்கு வருகை
புரிந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19 ஆம் தேதி ஃபலஸ்தீன அதிகார
சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தின்
ஐ.நா சபை உறுப்பினர் கோரிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக
கூறியுள்ளார்.

ஐ.நா வின் இந்திய பிரதிநிதியான ஹர்தீப்
சிங் தெரிவிக்கையில் அப்பாஸ் ஐநாவின் பொதுச் சபையில் கடந்த வெள்ளியன்று
தனது கோரிக்கையை வைத்ததின் மூலம் ஃபலஸ்தீன அதிகாரச் சபை தனது பொறுப்பை
உணர்ந்து கொண்டுள்ளது என்று அறிகுறிகள் தெரிவதாக தாம் ஐ.நா வின் பொதுச்
செயலாளர் பான் கி மூனிடம் தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

மேலும் அப்பாஸ் ஐ.நா வின் பொது சபையையோ
அல்லது ஐ.நா பாதுகாப்பு சபையையோ அணுகாத அளவுக்கு முயற்சிகள் நடந்து
வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் ஃபலஸ்தீன நேரடி
பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பிரச்சனை ஐ.நா வில் விவாதிக்கப் படும்பொழுது அமெரிக்கா தனது
வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாகவும். வேறு
வழியின்றி போனால் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை ஃபலஸ்தீனத்திற்கு எதிராக
பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஃபலஸ்தீனத்தை
ஆதரிக்கும் முதல் அரபு அல்லாத ஒரே நாடு இந்தியா என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் ஹர்தீப் சிங் கூறியதாவது; பிரதமர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில்
எந்த நிலையிலும் இந்தியா ஃபலஸ்தீன தேசத்தை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.
வீட்டோ அதிகாரம் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டாலும் இந்தியா ஃபலஸ்தீனத்தை
தொடர்ந்து ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு ஃபலஸ்தீன பிரச்சனையை பொறுத்த
வரை இந்தியா எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாகாது என்றும் நூறு சதவீதம்
இந்தியா ஐ.நாவில் ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்கு அளிக்கும் என்றும்
தெரிவித்துள்ளார்.


ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா பாதுகாப்பு சபை ஃபலஸ்தீனத்தை அங்கீகரிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டம்
» பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: இந்தியா முழு ஆதரவு
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா
» 1967 எல்லையை அங்கீகரிக்க முடியாது-நெதன்யாகு பிடிவாதம்
» இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்தை அங்கீகரிக்க முடியாது – ஐ.நா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum