தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹஸாரேக்குப் பணம் கொட்டுகிறது - பால் தாக்கரே!

Go down

ஹஸாரேக்குப் பணம் கொட்டுகிறது - பால் தாக்கரே!  Empty ஹஸாரேக்குப் பணம் கொட்டுகிறது - பால் தாக்கரே!

Post by முஸ்லிம் Sun Oct 09, 2011 1:27 pm

"ஒரு பக்கம் தொழிலதிபர்களிடம் பணம்
வாங்கிக் கொண்டு, மறுபக்கம் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கும் ஹஸாரே,
பொய்யான நோக்கத்துடன் செயல்படுகிறார்" என சிவசேனா தலைவர் பால் தாக்கரே
ஹஸாரேமீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.




மும்பையில் நேற்று தசரா பேரணி நடந்தது.
அதில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே கலந்து கொண்டு பேசும்போது, "ஹசாரேயின்
ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு தமாஷ். ஒருபக்கம் இவர் தொழிலதிபர்களிடம் பணத்தை
வாங்குகிறார். இன்னொரு பக்கம் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கிறார். இவர்
உண்ணாவிரதம் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது."
என்று குற்றம்சாட்டியவர்,

"இப்படி பொய்யான நோக்கத்துடன் செயல்படும்
இவரால் இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. இதைச் சொல்லும் எங்களுடன்
ஹஸாரே விரோதம் பாராட்டுவது தேவையற்றது. மேலும் அவர் மீதான என்
விமர்சனங்களைக் கிண்டலடித்துள்ளார் ஹஸாரே. அவர் என்னைவிட வயதில் இளையவர்.
அதனால்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்." என்று கூறினார்.

மேலும், "இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க
முடியாது. காரணம் இங்கே இருப்பவை பெரிய திமிங்கிலங்கள். ஹஸாரேயின் வலை
கிழிந்து விடும்" என்றும் அவர் கூறினார்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்
» பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு
»  ஷாருக்கானை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு: தாக்கரே
» மொஹாலி மைதானத்தில் பாக்.வீரர்கள் ‘தொழுகை’ :தாக்கரே எதிப்பு!
» பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum