தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்காவில் பரவும் போராட்டம்!

Go down

அமெரிக்காவில் பரவும் போராட்டம்!  Empty அமெரிக்காவில் பரவும் போராட்டம்!

Post by முஸ்லிம் Tue Oct 11, 2011 4:30 pm

செல்வந்தர்களுக்கு மட்டுமே உபயோகமான
வகையில் தீட்டப்படும் அமெரிக்கப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராக
நியூயார்க்கிலுள்ள வால்ஸ்டிரீட்டை மையமாக கொண்டு மக்கள் போராட்டம் வலுத்து
வருகிறது.



அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக
வால்ஸ்டிரீட்டில் மூன்று வாரங்களுக்கு முன்னர் இளைஞர்கள் ஒன்றுகூடி
போராட்டம் ஆரம்பித்தது. இப்போராட்டம் இப்போது அமெரிக்காவின் பல பரவி
வருவதோடு, வால்ஸ்டிரீட் முறையிலான தெரு கையகப்படுத்தும் போராட்டம் ஐரோப்பிய
நாடுகளிலும் பரவி வருகிறது.
அமெரிக்கப் பொருளாதார சரிவின்போது
வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அரசு, அதே சமயம் வேலை இழந்தோரைத் தவிக்க
விட்டு விட்டது என்பதே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் முக்கியமான
குற்றச்சாட்டு!

"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்"
எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம்
சோம்ஸ்கி உள்ளிட்ட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வால்ஸ்டிரீட்டில்
ஆரம்பித்த இந்தப் போராட்டம், நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான்
பிரான்சிஸ்கோ, சிகாகோ, மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர்,
மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ்
மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களிலும் பரவியுள்ளன. இப்போராட்டத்தை
அமெரிக்கா முழுவதும் எடுத்துச் செல்ல இணையத்தின் சமூகவலை தளங்களும்
பயன்படுத்தப்படுகின்றன.

கிட்டத்தட்ட எகிப்தில் நடந்த மக்கள்
போராட்டத்துக்கு இணையான வகையில் அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டம்,
அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்க அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறும் எனக்
கருதப்படுகிறது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வால்ஸ்ட்ரீட் போராட்டம்: அமெரிக்காவில் ஏராளமானோர் கைது
» அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம்
» ஈரான் மீதான நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» அமெரிக்காவில் பாதி முஸ்லிம்களும் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum