தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல: பாகிஸ்தான் பிடிவாதம்

Go down

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல: பாகிஸ்தான் பிடிவாதம் Empty காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல: பாகிஸ்தான் பிடிவாதம்

Post by முஸ்லிம் Wed Oct 12, 2011 1:35 pm

ஜம்மு-காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த
பகுதியாக இருந்ததில்லை என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாகிஸ்தான்
பிரதிநிதி அந்த்ரபி செவ்வாய்க்கிழமை பேசினார்.
ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு
நடத்தி அதன் மூலம் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் இந்தப் பேச்சுக்கு இந்தியா கடும் ஆவேசத்துடன் பதிலடி கொடுத்திருக்கிறது.

ஐ.நா.பொதுச் சபையின் மீள்குடியேற்றக் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடந்தது. இதில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் தாஹீர் ஹுசைன் அந்த்ரபி, ராஸ்
பஷீர் தரார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அந்த்ரபி, "ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த
பகுதி இல்லை. அப்படி இதற்கு முன் எப்போதும் இருந்ததும் இல்லை” என்றார்.

தரார் பேசும்போது, "தங்களது பகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதைத்
தீர்மானிக்கும் உரிமை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இருக்கிறது என்பதை
ஐ.நா.பாதுகாப்பு சபையின் பல்வேறு தீர்மானங்கள் உறுதி செய்திருக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் ஐ.நா. மீள்குடியேற்றத்
திட்டமே முழுமையடையாது. காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீர்வு காண
வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது. அதுவே நீடித்த
அமைதிக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும்” என்றார்.

பாகிஸ்தான் கூறிய கருத்துகளுக்கு இந்தியப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரா
கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். பாகிஸ்தானின் மேற்கோள்கள் இந்தக் குழுவின்
செயல்பாட்டுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதது என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான்
பிரதிநிதிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய அரசியல் சட்டம் அதன்
குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் கிடைப்பதற்கு உத்தரவாதம்
அளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்களது கருத்துகளை குறிப்பிட்ட இடைவெளியில்
நடத்தப்படும் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்த
முடியும் என்றார்.

பாகிஸ்தான் மீண்டும் பிடிவாதம்: ரவீந்திரா பதில் அளித்த பிறகும்
பாகிஸ்தான் பிரதிநிதி அந்த்ரபி தனது கருத்தில் தொடர்ந்து பிடிவாதமாக
இருந்தார்.

இந்தியப் பிரதிநிதி தனது பதிலில் எடுபடாத சில கருத்துகளைத்
தெரிவித்திருக்கிறார். ஐ.நா. பாதுகாப்பு சபையின் பல்வேறு தீர்மானங்களில்
ஜம்மு-காஷ்மீர் ஒரு "பிரச்னைக்குரிய பகுதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் மேற்பார்வையில் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு மூலம் மக்களின்
கருத்தை அறிந்து அதன்படியே ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட
வேண்டும் என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவால் நடத்தப்படும் தேர்தல்கள் ஐ.நா.வின் மேற்பார்வையில்
நடத்தப்படும் சுதந்திரமான நேர்மையான பொது வாக்கெடுப்புக்கு ஈடாகாது.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஐ.நா.வின் பல தீர்மானங்கள்
அங்கீகரித்திருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் பாகிஸ்தானையும் இந்தியாவையும்
கட்டுப்படுத்தக்கூடியவை.

ஆனாலும் கடந்த 63 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை
மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த விவகாரத்தை இந்த விவாதத்தில்
குறிப்பிடுவது பொருத்தமானதுதான் என்றார் அந்த்ரபி.


காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல: பாகிஸ்தான் பிடிவாதம் Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 1967 எல்லையை அங்கீகரிக்க முடியாது-நெதன்யாகு பிடிவாதம்
» இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும் பட்டினி மாறாதது ஏன்? – உச்சநீதிமன்றம் கோபமான கேள்வி
» இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!
» கர்நாடகா நிலபேர ஊழல்:பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு
» இந்தியாவின் 8 மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum