தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம்.

Go down

"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம்.  Empty "சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம்.

Post by முஸ்லிம் Fri Oct 14, 2011 4:11 pm

"குஜராத்
முதலமைச்சர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தினைத் தானே
முன்வந்து தூண்டினார்" என்று சாட்சியமளித்ததால், குஜராத் அரசால் சிறை
பிடிக்கப்பட்டுள்ள இ.கா.ப அதிகாரி (IPS Officer) சஞ்சீவ்பட்டை விடுதலை
செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள், சினிமா கலைஞர்கள் ஆதரவு அதிகரித்து
வருகிறது.




அகமதாபாத்தின்
மேம்நகரில் சஞ்சீவ் பட் வீட்டுக்கெதிரே கூடிய அவரது ஆதரவாளர்களிடையே
பாலிவுட் திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் பேசினார். அப்போது அவர் "நான்
வெளியே புறப்பட்டு வந்த போது, வீட்டில் 'எங்கே போகிறீர்கள்' என்று
கேட்டார்கள். அதற்கு நான், 'திரையில் எத்தனையோ நிழல் கதாநாயகர்களை
உருவாக்கினேன், இன்றுதான் ஒரு உண்மையான ஒரு நேர்மையான காவல் அதிகாரியை,
இலஞ்ச ஊழலுக்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் களம் காணும்
நாயகனைக் காணச் செல்கிறேன்' என்று பதிலளித்தேன், சஞ்சீவ் பட் தான் அந்த
உண்மையான நாயகன்" என்று பேசினார்.

மேலும் மகேஷ் பட், சஞ்சீவ்
பட்டின் மனைவி, பிள்ளைகளைச் சந்தித்து , "இந்தப் போராட்டத்தில் உங்களுடன்
நாங்களும் இருக்கிறோம்" என்று சொன்னதாகத் தெரிவித்தார்.



சஞ்சீவ்வின் தாயாரையும் சந்தித்து "உங்கள் பிள்ளை தான் உண்மையான ஹீரோ" என்றும் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

சஞ்சீவ்
பட்டின் வீட்டுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் கூடிய ஆதரவாளர்கள்
'மெழுகுவர்த்தி' ஏற்றினர். கல்லூரி மாணவர்கள், கலைஞர்கள் என்று சஞ்சீவ்
பட்டின் ஆதரவாளர் படை அதிகரித்துக்கொண்டே போகிறது.

"சஞ்சீவ் பட் ஒரு
நேர்மையான அதிகாரி, அரசாங்கத் தில்லுமுல்லுகளுக்கு வளைந்து கொடாததால்,
அவரைப் பழி வாங்குகிறார்கள். எனினும், சத்தியம் நிச்சயம் வெல்லும்,
குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது"
கல்லூரி மாணவர் பிரிஜேஷ் கருத்தளித்தார்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை குண்டுவெடிப்பு: கைதானது உண்மையான குற்றவாளிகளா?
» மன்மோகன்சிங்கின் அழைப்பு: பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்
» டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்
» பாலிவுட் திரைப்படங்கள் இளைய தலைமுறையினரை புகைப்பிடிக்க தூண்டுகின்றன-ஆய்வில் தகவல்
» ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum