தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை

Go down

உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை Empty உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை

Post by முஸ்லிம் Sun Oct 16, 2011 3:27 pm

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் போராட்டம் தற்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது.இந்த
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம்
சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள்,
அரசியல்வாதிகளைக் கண்டித்தும் போராட்டங்கள் உலகளவில் துவங்கியுள்ளன.

வால் தெரு ஆக்கரமிப்பு இயக்கம் கடந்த செப்டம்பர் 17ம் திகதி
நியூயோர்க்கில் துவக்கிய போராட்டம் தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும்
மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள
தனியாருக்குச் சொந்தமான ஜூகோட்டி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை
வெளியேற்றும் நோக்கில் அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக பூங்கா
உரிமையாளரான ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ் நிறுவனம் அறிவித்தது.

தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும்
தங்கலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை
நசுக்க நியூயோர்க் பொலிசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவில் நேற்று திரண்டு அங்கிருந்து
செல்ல முடியாது என தெரிவித்தனர்.

உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை Wall_street_protest_001

உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை Wall_street_protest_002

இதன் பின் கடைசி நேரத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்
பூங்காவை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் உலகளவில் பரவி
வருகிறது. தென்னாப்ரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியா,
தெற்காசியா, ரஷ்யா என உலகம் முழுவதும் போராட்டங்கள் நேற்று முதல் துவங்கின.


இதற்காக http://15october.net/
என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட
82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு” போராட்டம்
நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை Wall_street_protest_003

உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை Wall_street_protest_004

முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும்,
நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களிலும்,
தைவான் தலைநகர் தாய்பெய்யிலும், ஜப்பானின் டோக்கியோ, ரோப்போங்கி
நகரங்களிலும், தென்கொரியத் தலைநகர் சியோலிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.


அதேநேரம் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும்,
தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும்,
ஜேர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர்
ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடந்த
போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள்
அடித்து நொறுக்கப்பட்டன.


உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தொடரும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள்: முக்கிய நகரங்களில் பலர் கைது
» ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
» சீனாவிலும் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்
» பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு?
» இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum