தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா

Go down

ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா Empty ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா

Post by முஸ்லிம் Sun Oct 16, 2011 3:33 pm

ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா Usa_iran_001

சவுதி
அரேபியத் தூதரைக் கொல்ல தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் ஈரான்
மத்திய வங்கி மீது தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவைத் திரட்டும்
முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.அதே நேரம் ஈரான் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அதிகாரிகள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஈரானின் மத்திய வங்கி மீது பொருளாதாரத்
தடைகளை விதித்திருக்கிறது. ஆனால் பலதரப்பு பொருளாதாரத் தடைகளை விதிப்பதில்
மேற்கத்திய நாடுகளின் ஆதரவை அமெரிக்காவால் கடந்த 20 ஆண்டுகளாகப் பெற
முடியவில்லை.

ஈரான் மத்திய வங்கி, எண்ணெய் உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் முதலீடு
செய்து வருகிறது. பலதரப்பு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஒரு
வெளிநாட்டு நிறுவனம் ஈரான் மத்திய வங்கியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது
அமெரிக்காவுடன் செயல்படுவதா என முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும்.
அதாவது வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஈரான் மத்திய வங்கியுடனான
தொடர்பைத் துண்டிக்க நேரிடும்.

இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை அதிகாரி டேவிட் கோஹென் நேற்று அளித்த
பேட்டியில்,"ஈரான் மத்திய வங்கி மீது பலதரப்பு பொருளாதாரத் தடை விதிக்க
நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதைச் செய்து முடிப்போம்”
என்றார்.

இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அமெரிக்கா
ஈடுபட்டுள்ளது தெளிவாகியுள்ளது. அதேநேரம் ஈரான் மீதான அமெரிக்காவின்
குற்றச்சாட்டு உள்நாட்டிலேயே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் சிலர் இதுகுறித்துக் கூறுகையில்,"ஈரான் மீது மேலும்
தடைகளை விதிக்க அமெரிக்கா மிகத் தீவிரமாக செயல்படுவது மக்கள் மத்தியில்
சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே தடைகள் விதிக்கப்பட்ட
அந்நாட்டின் மீது மேலும் தடைகள் விதிப்பது சர்வதேச உறவுகளைச்
சீர்குலைக்கும். இந்த நடவடிக்கைகள் ஒபாமாவின் அடுத்தாண்டு தேர்தலுக்காகவே
நடத்தப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்” எனத் தெரிவித்தனர்.


ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum