தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!

Go down

ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!  Empty ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!

Post by முஸ்லிம் Mon Oct 17, 2011 5:11 pm

மவுன விரதம் செல்லும் முன்னர்,
"காங்கிரஸ், பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை கூட்டாக சதி செய்து, எனது குழுவைக்
களங்கப்படுத்தி வருகின்றன" என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.



ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதப் போராட்டம்
ஆரம்பித்தச் சமூக சேவகர் அன்னா ஹஸாரே, ஒரு கட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக
தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அவரின் இச்செய்கை, இதுவரையில் அன்னா
ஹஸாரேமீது பொது மக்கள் வைத்திருந்த மதிப்புக்குக் களங்கத்தை
ஏற்படுத்தியதோடு, அவர்மீது கடும் விமர்சனத்தையும் கொண்டுவந்து சேர்த்தது.
காங்கிரஸுக்கு எதிராக அவர் குழு செய்த
தேர்தல் பிரச்சாரம் பாஜகவை ஹஸாரே குழு மறைமுகமாக ஆதரிக்கிறது என்பதற்கு
ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஹஸாரே குழுவுக்கு ஆர்.எஸ்.எஸ்
கொடுத்திருந்த ஆதரவும் ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர்
எடியூரப்பா கைது செய்யப்பட்டது குறித்து ஹஸாரே கருத்தேதும் தெரிவிக்காமல்
நழுவியதும் ஹஸாரே மீதான மக்களின் நம்பிக்கையினை முழுமையாக நீர்த்துப் போக
செய்தது.

இதற்கிடையில், அவர் குழுவிலுள்ள முன்னாள்
சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூசனின் மகனும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த்
பூசன்மீது சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். காஷ்மீர் குறித்து அவர்
தெரிவித்திருந்த கருத்துகளுக்கு எதிராக ஹஸாரே குழுவினரே கருத்து
தெரிவித்திருந்தனர். பால் தாக்கரேயின் மிரட்டலுக்குப் பயந்து, பிரசாந்த்
பூசனை அன்னா ஹஸாரே குழுவிலிருந்து நீக்குவதற்கும் முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் தனது
சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே நேற்று காலவரையற்ற மவுன
விரதத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர்
அளித்த பேட்டியில்,

"பிரதமர் எழுதிய கடிதத்தால், வலுவான லோக்பால்
மசோதா கொண்டுவரப்படும் என்ற ஊக்கம், என்னுள் எழுந்துள்ளது. பாராளுமன்ற
குளிர்கால கூட்டத்தொடரில், வலுவான லோக்பால் மசோதா கொண்டு வருவதுடன்,
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், நான்
ஏன் காங்கிரசை எதிர்க்கப்போகிறேன்? இன்னும் சொல்லப்போனால், காங்கிரசுடன்
இணைந்து செயல்படுவேன்.

அதே சமயத்தில், வலுவான லோக்பால் மசோதா
கொண்டுவரப்படாவிட்டால், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில்
காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். எனது குழு, காங்கிரசுக்கு
எதிரானது என்பதோ, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டளைப்படிதான் நான்
காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன் என்பதோ தவறு.

நான்
ஆர்.எஸ்.எஸ். தலைவரை நேரில் பார்த்தது கிடையாது. பேசியதும் கிடையாது. பாஜக
மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுடன் எனக்கு சம்பந்தம் இல்லை. காங்கிரஸ், பாஜக,
ஆர்.எஸ்.எஸ் ஆகியவை கூட்டாக சதி செய்து, எனது குழுவைக் களங்கப்படுத்தி
வருகின்றன.

மேலும், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ராம் மாதவை எனக்கு
அடையாளம் தெரியாது. எனது உண்ணாவிரத மேடையில் பாஜக தலைவர் நிதின்
கட்காரிக்கு நான் நன்றி சொல்லவில்லை. என் குழுவைச் சேர்ந்த வேறு யாராவது
சொல்லி இருந்தால், அதுபற்றி எனக்கு தெரியாது.

என்னை ஜனாதிபதி
தேர்தலுக்கு நிறுத்த பாஜக திட்டமிடுவதாக கூறுகிறார்கள். எனக்கு ஜனாதிபதி
ஆவதற்கான திறமையோ, விருப்பமோ கிடையாது. ஒருவேளை, நான் ஜனாதிபதி ஆனால் கூட,
இப்போது சமூகத்துக்குச் செய்யும் வேலையைக் கூட செய்ய முடியாமல் போய்விடும்.

காஷ்மீர்
பற்றிய பிரசாந்த் பூஷனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாட்டைக்
கூறுபோடும் எந்த கருத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். பிரசாந்த் பூஷன்,
எங்கள் குழுவில் நீடிக்கலாமா? என்பது பற்றி எங்கள் குழுவின் உயர்மட்டக்
குழு ஆலோசனை செய்யும். அதன்பிறகு, நான் முடிவு எடுப்பேன்.

அதுபோல்,
நான் நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதையும்
நான் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தை விட மக்கள்தான் உயர்ந்தவர்களே தவிர, நான்
அல்ல.

இனிமேல், எல்லா பிரச்சினைகள் பற்றியும் கருத்து சொல்ல வேண்டாம் என்று எனது குழுவினரிடம் சொல்லப்போகிறேன்."

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

இதையடுத்து,
ராலேகான் சித்தியில், அன்னா ஹசாரே மவுன விரதம் தொடங்கினார். அங்குள்ள
பத்மாவதி கோவில் அருகே உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து அவர் மவுன விரதத்தைத்
தொடங்கினார். இந்த விரதத்தின்போது, அவர் ஒரு குடிசையில் தங்க
திட்டமிட்டுள்ளார்.

ஒரு வார கால மவுன விரதம் என்று முதலில்
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது காலவரையற்ற மவுன விரதம் என்று
ஹசாரேவின் உதவியாளர் தத்தா அவாரி அறிவித்தார்.

அன்னா ஹஸாரே குழுவினரின் நடவடிக்கைகளும்
காங்கிரஸுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம், பாஜக ஊழல், ஆர்.எஸ்.எஸ் தொடர்பு
என தொடர் பிரச்சனைகளால் மக்களுக்குப் பதில் சொல்ல முடியாத நெருக்கடி
ஏற்பட்டதால் அதிலிருந்து விலகியிருக்கவே அன்னா ஹஸாரே திடீரென இந்த மவுன
விரத முடிவு எடுத்ததாகவும் கால வரையற்ற மவுன விரதம் என அறிவித்ததற்கும்
அதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹஸாரே மீது ஆர்.எஸ்.எஸ் கோபம்
» அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!
» பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஹஸாரே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
» அன்னா ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை வெளியிட்டார் திக்விஜய்சிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum