தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து

Go down

ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து  Empty ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து

Post by முஸ்லிம் Sun Oct 23, 2011 4:25 pm

பெங்களூர்:எல்.கே.அத்வானியின் ஜனசேதனா
யாத்திரையையொட்டி இம்மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் நடத்த திட்டமிட்டிருந்த
பேரணியை பா.ஜ.க ரத்துச் செய்துள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கி கர்நாடகா முன்னாள்
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா சிறையில் அடைக்கப்பட்டு மற்றும் சில தலைவர்கள்
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சூழலில் பெங்களூர் பேரணி ரத்துச்
செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 31-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தின்
மங்களூர், உடுப்பி, ஹோன்னவாரா ஆகிய கடலோர பிரதேசங்களில் ஜனசேதனா யாத்திரை
நடக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நவம்பர் ஒன்றாம் தேதி
அங்கோலாவில் பொதுக்கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனவும் கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

நிலபேர ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள்
முதல்வர் எடியூரப்பாவும், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டியும்
சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அத்வானியின் யாத்திரையின் புகழை
கெடுத்துள்ளது. பெங்களூர் பேரணியை ரத்துச்செய்ய இதுதான் காரணம்.

கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் உள்துறை
அமைச்சர் ஆர்.அசோகாவின் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தா நீதிமன்றம்
போலீஸிற்கு உத்தரவிட்டதும் பா.ஜ.கவை சோர்வடையச் செய்துள்ளது. சட்டத்தை மீறி
அசோகா அரசு நிலத்தின் விலைக் குறித்து மறு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்
என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.




ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி
» அத்வானியின் 38 நாள் ரத யாத்திரை தொடங்கியது!
»  அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங்
» அத்வானியின் ரதயாத்திரை ஒரு ஏமாற்று வேலை! அன்னா ஹசாரே
» சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum