தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!

Go down

குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!  Empty குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!

Post by முஸ்லிம் Mon Oct 31, 2011 5:56 pm

"குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களை மட்டும்
தொடர்புபடுத்திச் செய்தி வெளியிடுவது பிரித்தாளும் சூழ்ச்சி" என பிரஸ்
கவுன்சில் தலைவரான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.




பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான‌ கருத்தரங்கில் பேசியதாவது:

"நண்பர்களே,

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை
தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில்தான் பத்திரிக்கை
கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட
உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும்
இருந்தேன்.

தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால்
என்னுடைய பணியைச் சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல்
மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தக் கூட்டத்தை நான்
ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து
கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில்
இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற
முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்றும்
விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் மத்திய அரசாங்கம்
புதிதாக தொடங்கப்பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள
கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இந்திய
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு
ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளதுசானால் அந்தச் சுதந்திரம்
கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது. நியாயமான சில கட்டுப்பாடுகள்
வேண்டும். பாரபட்சமில்லாமல் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர
வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை. ஆனால், இந்திய ஊடகங்கள்
இந்தச் செயலை பொறுப்போடு செய்கின்றனவா?

பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயல்படுவது குறித்த சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஊடகங்கள் பல நேர்வுகளில் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன.

உச்ச
நீதிமன்ற நீதிபதி க்யான் சுதா மிஷ்ராவோடு நான் உச்ச நீதிமன்ற டிவிஷன்
பெஞ்சில் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறேன். ஒரு நாள் இந்தியாவின் முக்கிய
செய்தித் தாள் ஒன்று முதல் பக்கத்தில் நீதிபதி மிஷ்ராவின் புகைப்படத்தை
வெளியிட்டு "தன் மகள்கள் கடன் சுமை (liability) என்று உச்ச நீதிமன்ற
நீதிபதி தெரிவிக்கிறார்" என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச்
செய்தி முழுக்க முழுக்க திரிக்கப் பட்ட உண்மைக்குப் புறம்பான செய்தி;
அதுவும் பிரபலமான ஆங்கில செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வந்தது.

உண்மை
நிலவரம் என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களையும்
கடன்களையும் வெளியிட வேண்டும். கடன்கள் என்ற பிரிவில், நீதிபதி மிஷ்ரா
"இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும்" என்று
குறிப்பிட்டிருந்தார். மிகச் சரியாகப் பார்த்தால், இதைக் குறிப்பிட
வேண்டியதே இல்லை. கடன்கள் என்றால் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைதான்
அடங்கும். ஆனால் நீதிபதி மிஷ்ரா எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தன்னுடைய
இரண்டு மகள்களின் திருமணத்துக்கு ஏராளமான பணம் செலவு ஆகும் என்ற பொருளில்
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
ஒருவருக்குத் திருமணம் ஆகி விட்டது. மற்ற இருவருக்கும் இனிதான் திருமணம்
செய்ய வேண்டும். நீதிபதி மிஷ்ரா நிச்சயமாக தன்னுடைய மகள்களைக் கடன் சுமை
என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிடவேயில்லை. பிரசுரிக்கப் பட்ட அந்தச் செய்தி
முழுக்க முழுக்க பொய்யானதும், ஆட்சேபகரமானதும், பரபரப்பை ஏற்படுத்த
வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசுரிக்கப் பட்ட செய்தி.

இந்தச்
செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கு மட்டும் துயரத்தையும் தர்ம சங்கடத்தையும்
ஏற்படுத்த வில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கும் அவர் குடும்பத்துக்கும் எத்தனை
வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை அநக்ச் செய்தித்தாளின்
பொறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. அவரின் நோக்கம்
செய்தியைத் திரிப்பதன் மூலமாக பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே.

அப்படியே
தன் மகள்களைப் பற்றி நீதிபதி மிஷ்ரா எழுதியது தவறு என்று வைத்துக்
கொண்டாலும், அடுத்தவருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்தும் என்று உணராமல்
இந்தத் தவறை திரித்து செய்தியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக
இருக்க முடியும்? இங்கே குழுமியிருக்கும் ஊடகத்துறையினரே நீங்களே
சுயபரிசோதனை செய்து இதற்கான விடையைத் தேடிக் கொள்ளுங்கள்.

சமீப
காலமாக, பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் போக்கு வளர்ந்து வருகிறது.
2009 தேர்தலில் இது பெரிய சர்ச்சையானது. இதை எப்படித் தடுப்பது என்பதை
நாம் விவாதித்து முடிவு காண வேண்டும். 19.09.2011 நாளிட்ட தலைமை தகவல்
ஆணையரின் உத்தரவுப் படி பிரனஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் ஸ்ரீநிவாஸ்
ரெட்டி ஆகியோர் அடங்கிய, இந்த விவகாரம் குறித்து ஏற்படுத்திய ஆய்வுக்
கமிட்டியின் அறிக்கை ப்ரஸ் கவுன்சிலின் இணைய தளத்தில் ஏற்றப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ப்ரஸ் கவுன்சில் தனது 26.04.2010 நாளிட்ட கூட்டத்தில்
நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அடுத்ததாக ஊடகங்கள்
உண்மையான விவகாரங்களைச் செய்தியாக்காமல், அவசியமற்ற விவகாரங்களைச்
செய்தியாக்குவது அடிக்கடி நடக்கிறது. நம் நாட்டில் கவனிக்கப் பட வேண்டிய
விஷயங்கள், வறுமை, வேலையின்மை, போதுமான வீட்டு வசதி சுகாதார வசதியின்மை, 80
சதவிகித மக்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் வாழ்வது ஆகியவையே கவனிக்கப்
பட வேண்டிய செய்திகள். ஆனால் இந்த விவகாரங்களை புறந்தள்ளி விட்டு,
ஊடகங்கள் சினிமா நடிகரின் மனைவி கர்ப்பமானது, அவர் ஒரு குழந்தை
பெற்றெடுப்பாரா, இரட்டை குழந்தை பெற்றெடுப்பாரா என்பது போன்ற விஷயங்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பது. இதுவா இந்தத் தேசத்தை பீடித்திருக்கும் முக்கிய
பிரச்சினைகள்?

லாக்மே இந்திய ஃபேஷன் விழா நடக்கையில் அரசு
அங்கீகாரம் பெற்ற 512 செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடல்கள் பருத்தி ஆடைகளை அணிந்து அணி
வகுப்பதைக் கவனமாக செய்தியாக்கும் செய்தியாளர்கள் அந்த விழா நடக்கும்
இடத்திலிருந்து விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் இந்த
பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை
வசதியாக மறந்து விட்டார்கள். ஓரிருவரைத் தவிர விவசாயிகள் பிரச்சினையைப்
பற்றி யாருமே கவலைப் படுவதில்லை.

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும்
முறையா? இந்தியாவின் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் மோசமான
பொருளாதார சூழலைக் கண்டுகொள்ளாமல், கவர்ச்சியும் பரபரப்பும் இருக்கும்
போலியான இடங்களில் தங்கள் கவனத்க்ச் செலுத்துவது முறையான செயலா? மக்களுக்கு
ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்ன ராணி மேரி
அன்டோனியெட் போல ஊடகங்கள் நடந்து கொள்ளவில்லை?

ஊடகங்கள்
விவசாயிகளின் தற்கொலைகள், விலைவாசி உயர்வு, என முக்கியப் பிரச்சினைகளைப்
பற்றி எழுதுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இது 5 முதல் 10
சதவிகிதமே. மொத்த ஊடகத்தின் கவனமும், திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை,
பாப் இசை, பேஷன் பரேடுகள், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்திலேயே இருக்கிறது.

சமீபத்தில்
டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அருகேயும், மும்பாய், பெங்களுரிலும் குண்டு
வெடிப்புகள் நடந்தன. குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே டிவி
சேனல்கள் இந்தியன் முஜாஹிதீன் அல்லது ஜெய்ஷ் ஏ முகம்மது அல்லது ஹர்கத்துல்
ஜிஹாத் ஏ இஸ்லாம் போன்ற அமைப்புகள் ஈமெயில் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும்
குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டன என்று செய்திகள்
வெளியிடுகின்றன. இது போன்ற இயக்கங்களின் பெயர்கள் எப்போதுமே இஸ்லாமியப்
பெயர்களாக இருக்கும். ஒரு ஈமெயிலை யாரோ ஒரு விஷமி எளிதாக அனுப்பமுடியும்.
ஆனால் இதை டிவிக்களில் செய்தியாக காட்டுவதும், செய்தித் தாள்களில்
அச்சிடுவதும் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது
போன்ற போக்கு உள்ளது.

உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும்,
இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச்
சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள்
வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற
கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக எஸ்எம்எஸோ
ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும்
முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான். இது பிரிட்டிஷார்
கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி. தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத்
தந்திரத்தைக் கையாளுவது சரியா?

ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை
சுட்டிக் காட்டினேன். ஊடகத்தில் மட்டுமல்லாமல், நீதித் துறை அரசு நிர்வாகம்
போன்ற துறைகளிலும் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம்
அனைவரும் இணைந்து இந்தக் குறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

ஊடகத்துறையில்
உள்ள குறைகளைப் போக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பேச்சுவார்த்தை
மற்றும் விவாதம் மூலம் தீர்க்கும் ஜனநாயக வழி. மற்றொன்று அரசு விளம்பரங்களை
நிறுத்துவது, கடுமையான அபராதம் விதிப்பது என்ற கடுமையான வழி.

என்னுடைய
கருத்தில் ஜனநாயகபூர்வமான வழியை முதலில் கடைபிடிக்க வேண்டும். இதன்
பொருட்டு, நான் ஊடகத் துறையினரை, தொலைக்காட்சி மற்றும் அச்சு
ஊடகத்துறையினரை அடிக்கடி சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.
அந்த விவாதங்களின் போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், நாமே
சுயபரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக்
கண்டறியலாம். இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கோ, மூன்று
மாதங்களுக்கோ ஒரு முறை நடக்கலாம். அப்போதுதான் மக்களுக்கு ஊடகம் மீதான
நம்பிக்கை அதிகரிக்கும்.

ப்ரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள்
தொலைக்காட்சி ஊடகம் வராது என்றாலும் கலந்து உரையாடுவதில் தவறேதும் இல்லை.
அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இரண்டுக்கும் சமமான பொறுப்பு உள்ளது.

ஒரு
வேளை ஊடகங்கள் ஒத்துழைக்க மறுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துத்
தான் ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக
விவாதங்களின் மூலம் சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ளலாம். இதன் ஒரு
பகுதியாக மத்திய அரசு தொலைக்காட்சிகளுக்குக் கொண்டு வந்துள்ள
கட்டுப்பாடுகளைக் கூட தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது
வரை ப்ரஸ் கவுன்சிலின் பணி தாவாக்களை தீர்த்து வைப்பது மட்டுமே. ஆனால் நான்
ப்ரஸ் கவுன்சிலைச் சமரச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதுவே
ஜனநாயகபூர்வமான வழி என்றும் கருதுகிறேன். இதற்கு உங்கள் அனைவரின்
ஒத்துழைப்பும் அவசியம்.

இந்தியா மிக முக்கியமான மாற்றத்தைச்
சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயச் சமூகமாக இருந்து வந்த இந்தியா
தற்போது தொழில் சார்ந்த சமூகமாக மாறி வருகிறது. 16 முதல் 19ம் நூற்றாண்டு
வரையிலான ஐரோப்பிய வரலாற்றைப் படித்திருப்பீர்களேயானால் தொழில் புரட்சி
நடந்த அந்தக் காலகட்டத்தில் கடும் கலவரமும், குழப்பங்களும், போர்களும்
நடந்தது என்பதைக் காண முடியும். அந்த நெருப்பில் குளித்த பிறகே ஐரோப்பா
தற்போது உள்ளது போல நவீன சமுதாயமாக மாறியது. தற்போது இந்தியா அந்த
நெருப்பில் இறங்கியுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா ஒரு நவீன
தொழில் சார்ந்த சமூகமாக மாறும் வரை மிகுந்த வேதனையான காலகட்டமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்
சமூகத்திற்கு உதவ வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு போன்றவற்றுக்கு எதிராக
எழுதி நவீன விஞ்ஞான உணர்வுகளை வளர்க்கலாம்.

முடிக்கும் முன்பாக
அஜ்மீர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் டாக்டர் கலீல்
க்ரிஸ்டியை விடுவிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன்.
கலீல் சிஸ்டி 80 வயதானவர். அவர் இன்னும் நீண்ட நாள் வாழப் போவதில்லை. அவர்
மிகச் சிறந்த மருத்துவர். கராச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு,
எடின்பர்க் பல்கலைகழகத்தில் பிஎச்டி முடித்தவர். அவர் ஒரு இதய நோயாளி.
மேலும் பல்வேறு நோய்களும் அவருக்கு இருக்கிறது. அவரால் நடக்க முடியாது.
மனிதத்தன்மையோடு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுதலை
செய்யப் பட்டால் அவர் கராச்சியில் உள்ள தனது மனைவியோடும் மகளோடும் அவர்
இறுதிக் காலத்தை கழிக்க முடியும். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த
கோபால் தாஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று
பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது. ஆனால் இந்திய அரசு பல மாதங்களுக்கு
முன்னால் உள்துறை அமைச்சர், பிரதமர், ராஜஸ்தான் மாநில ஆளுனர் ஆகியோருக்கு
நான் எழுதிய கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நாம் இவரை விடுதலை
செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும். ஆனால் இவர் இந்தியச் சிறையில்
இறந்தால், நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும்."

இவ்வாறு அவர் பேசினார்.




இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10932
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக வலைத்தளங்கள் குறித்த கபில் சிபலின் நடவடிக்கைக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜு ஆதரவு
» பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு?
» ப்ரெவிக்குடன் தொடர்பு:பிரிட்டீஷ் அமைப்பு ஒப்புதல்
» மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு
» இஸ்ரேல்-ஃபலஸ்தீன்: இன்று ஜோர்டானில் பேச்சு வார்த்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum