தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மலேகான்:சிறைக் கைதிக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பிய ஏ.டி.எஸ் போலீஸ் கான்ஸ்டபிள்

Go down

மலேகான்:சிறைக் கைதிக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பிய ஏ.டி.எஸ் போலீஸ் கான்ஸ்டபிள்  Empty மலேகான்:சிறைக் கைதிக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பிய ஏ.டி.எஸ் போலீஸ் கான்ஸ்டபிள்

Post by முஸ்லிம் Wed Nov 16, 2011 8:30 pm

மும்பை:2006 ஆம் ஆண்டு மலேகான்
குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட நபருக்கு மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்)யை
சார்ந்த கான்ஸ்டபிள் மணி ஆர்டர் வழியாக பணம் அனுப்பிய விபரம் தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் படி பெறப்பட்ட ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

தற்பொழுது மும்பை சிட்டி சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அப்ரார் அஹ்மத் என்ற நபருக்கு 2008-ஆம் ஆண்டு
ஏ.டி.எஸ்ஸின் நாசிக் யூனிட்டில் போலீஸ் காரர் சதாசிவ் அபிமன்யூ பாட்டீல்
என்பவர் 3000 ரூபாய் அனுப்பி கொடுத்தார் என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

ஜம்மியத்துல் உலமாவின் மஹராஷ்ட்ரா
சட்டவிவகார பொதுச்செயலாளர் குல்ஸார் அஸ்மி அளித்த தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் அடிப்படையிலான மனுவில் இவ்வாறு பதில் கிடைத்துள்ளது.

மும்பை நகர பைக்குளா சிறை
அதிகாரிகளிடமிருந்து மனுதாரருக்கு மணி ஆர்டர் அனுப்பியது தொடர்பான அனைத்து
விபரங்களும் கிடைத்துள்ளன. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர்
ஆகிய மாதங்களில் ரூ.1000 வீதம் பாட்டீல் நாஸிக் போலீஸ் தலைமையகத்தின்
அனுப்புநர் முகவரியில் பணத்தை அனுப்பிக் கொடுத்துள்ளார்.

ஏ.டி.எஸ்ஸின் உண்மை முகம் வெளியாகியுள்ளது
என தெரிவித்த ஜம்மியத்துல் உலமாவின் குல்ஸார் அஸ்மி, இவ்வழக்கில் பொய்யாக
சேர்க்கப்பட்ட அப்ராரை காப்பாற்றலாம் என வாக்குறுதியளித்துவிட்டு அவரை
அப்ரூவராக மாற்றி ஏ.டி.எஸ் அவருக்கு பணம் அனுப்பி கொடுத்துள்ளது என குற்றம்
சாட்டியுள்ளார். இத்தகைய மோசமான செயலை புரிந்த ஏ.டி.எஸ் அதிகாரிகள்
மீதும், கான்ஸ்டபிள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என
அப்ராரின் சகோதரரும், வழக்கறிஞருமான ஜலீல் அஹ்மத் வலியுறுத்தியுள்ளார்.


மலேகான்:சிறைக் கைதிக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பிய ஏ.டி.எஸ் போலீஸ் கான்ஸ்டபிள்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum