தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சதாமின் வலது கரமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை

Go down

சதாமின் வலது கரமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை Empty சதாமின் வலது கரமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை

Post by முஸ்லிம் Wed Oct 27, 2010 3:40 pm

சதாம் உசேனின் வெளிநாட்டு முகமாக திகழ்ந்தவரும், ஈராக் அரசின் குரலாக பன்னாட்டு அரங்குகளில் பல காலம் ஒலித்தவரும், ஈராக் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை விதித்துள்ளது ஈராக் கோர்ட்.

அவரை சாகும் வரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டு- ஷியா முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டார். ஷியா முஸ்லீம்களின் கட்சிகளை ஒடுக்கினார். ஷியா பிரிவினைச் சேர்ந்தவர்களை கொலை செய்தார் என்பதாகும்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து உள்ளே புகுந்த சிலகாலத்திற்குள் சதாம் உசேன் உள்ளிட்ட தலைவர்கள் பிடிபட்டனர். அதன் பின்னர் விசாரணை கோர்ட்டை அமைத்து அவசரம் அவசரமாக விசாரணை நடத்தி சதாம் உசேனை முதல் ஆளாக தூக்கிலிட்டுக் கொன்றது அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த ஈராக் அரசு.

பின்னர் சதாமின் ஒன்று விட்ட சகோதரரான கெமிக்கல் அலியை சில மாதங்களுக்கு முன்பு தூக்கிலிட்டுக் கொன்றனர். 5000க்கும் மேற்பட்ட குர்து இன மக்களை விஷ வாயு செலுத்திக் கொன்றார் கெமிக்கல் அலி என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இந்த நிலையில் தற்போது சதாம் உசேனின் நெருங்கிய நண்பரும், அந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கும் மரண தண்டனை அளித்துள்ளது ஈராக் அரசு.

சதாமைப் போலவே தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் தாரிக் அஜீஸ். ஈராக்கின் சர்வதேச முகமாக திகழ்ந்தவர். சதாம் காலத்தில் ஈராக் சார்பில் பன்னாட்டு அரங்குகளில் இவர்தான் ஈராக்கின் குரலாக ஒலித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்திய போக்கை கடுமையாகவும், பகிரங்கமாகவும் கண்டித்தவர். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் போர் வெறியை தொடர்ந்து கண்டித்து வந்தவர்.

இந்த நிலையில் தற்போது அஜீஸுக்கு மரண தண்டனைவிதித்துள்ளது ஈராக் உயர் டிரிப்யூனல். இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் முகம்மது அப்துல் சாஹிப் கூறுகையில், 74 வயதான தாரிக் அஜீஸை சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது முடிவு செய்யப்படவில்லை. அவர் அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது என்றார்.

ஒரே கிறிஸ்தவர்

தாரிக் அஜீஸ் அடிப்படையில் கிறிஸ்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மைக்கேல் யூஹனா. வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சர் என்ற ஊரில் 1936ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். சைதியான் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.

தான் கிறிஸ்தவராக இருந்தாலும் ஒரு முஸ்லீமாகவே வாழ்ந்து வந்தவர். இதற்காக தனது பெயரையும் தாரிக் அஜீஸ் என மாற்றிக் கொண்டார். சதாம் உசேனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். சர்வதேச அளவில் பல அமெரிக்க ஆதரவு நாடுகளாலும் மதிக்கப்பட்ட ஈராக் தலைவர் இவர் மட்டுமே.

தாரிக் அஜீஸ் தவிர முன்னாள் உள்துறை அமைச்சர் சதான் சகேர், அபித் ஹமூத் ஆகியோரையும் தூக்கிலிடுமாறு நேற்று ஈராக் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஷியா முஸ்லீம்களை வடக்கு ஈராக்கிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வழக்கில் தாரிக் அஜீஸுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சித்திரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு கொலைகளைச் செய்தார் என்று கூறி தூக்குத் தண்டனை விதித்து விட்டனர்.

நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின்போது சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் வாட்பன் இப்ராகிம் அல் ஹசன் என்பவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இவரும் உள்துறை அமைச்சாரக இருந்தவர்தான்.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்து ஊடுறுவிய பின்னர் ஒரு மாதம் கழிந்த நிலையில், 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார் அஜீஸ். அதன் பின்னர் பாக்தாத் நகரில் அமெரிக்கா அமைத்த சிறையில் அஜீஸ் அடைக்கப்பட்டார். பின்னர் ஜூலை மாதம் அஜீஸை, ஈராக் படைகளிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

அவருடன்மேலும் பல ஈராக் தலைவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். அமெரிக்கப் படையினரின் காவலில் அஜீஸ் இருந்தபோது அவருக்கு பலமுறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதமும் ஏற்பட்டது. தடியை ஊன்றியபடிதான் அவர் பலமுறை கோர்ட்டுக்கு வந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.

வாடிகன் தலையிடுகிறது

இதற்கிடையே, தாரிக் அஜீஸை தூக்கிலிடக் கூடாது என்று வாட்டிகன் சிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தண்டனையை தடுத்து நிறுத்தப் போவதாக அது கூறியுள்ளது.

இதுகுறித்து வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பெடரிகோ லம்பார்டி கூறுகையில், இந்த தண்டனை நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் வாட்டிகன் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவது வழக்கம். அந்த அடிப்படையில் அஜீஸைக் காக்கவும் வாட்டிகன் முயற்சிக்கும் என்றார்.

இதற்கிடையே, அஜீஸின் வழக்கறிஞர் பதீ இஸ்ஸாத் ஆரிப் ஜோர்டான் தலைநகர் அம்மானில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக் போரின்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதிலிருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் அஜீஸுக்குத் தண்டனை கொடுத்துள்ளனர்.

இது மிகவும் அநியாயமான தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளமுடியாதது. அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து வருகிறோம் என்றார்.

1991ம் ஆண்டு குவைத்துக்குள் ஈராக் ஊடுறுவியபோது அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுக்கத் தயாரானது. இதையடுத்து அமெரிக்கா விரைந்த அஜீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கரிடம் பேசினார். அப்போது ஈராக் தரப்பு வாதங்களை துணிச்சலுடன் முன்வைத்தார். இருப்பினும் வளைகுடாப் போரைத் தவிர்க்க முடியவில்லை.

பின்னர் 2003ம் ஆண்டு ஈராக்குக்குள் அமெரிக்கா ஊடுறுவ முயன்றபோது அதற்கு முன்பாக போப்பாண்டவரை வாட்டிகன் சென்று சந்தித்தார் அஜீஸ். வாட்டிகனின் உதவியைக் கோரினார். ஆனாலும் அமெரிக்கா தனது போர் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது அஜீஸ் துணைப் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீஸ் அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்பீல் மனு நிராகரிக்கப்பட்டால் அதன் பின்னர் 30 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஈராக் அதிபர் மாலிக்கி கையெழுத்திட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தண்டனை நிறைவேற்றப்படும்.

ஈராக் அரசுக்கு அஜீஸ் மகன் கண்டனம்

தனது தந்தைக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மிகவும் அநீதியான செயல் என்று அஜீஸின் மகன் ஜியாத் அஜீஸ் கூறியுள்ளார். தற்போது அவர் ஜோர்டானில் தங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது தந்தை குற்றவாளி இல்லை. மாறாக, பலகடவாக்கப்பட்டவர். அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. ஈராக் அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தண்டனயை அளித்துள்ளது என்றார்.

சதாம் ஆட்சியைச் சேர்ந்த 9 முக்கியப் புள்ளிகள் இன்னும் அமெரிக்கப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுல்தான் ஹஷீம் அல் தெயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10946
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் வெளிநாட்டை சேர்ந்த வலது சாரி நிறுவனம் -சி.பி.ஐ
» குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!
» பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-சி.பி.ஐ
» சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை
» ஹதீஸா கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவ வீரனுக்கு சிறைத் தண்டனை வழங்ககூடாது – நீதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum