தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

Go down

எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்  Empty எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

Post by முஸ்லிம் Sun Nov 27, 2011 8:00 pm

பெஷாவர்:’எனது அரசியல் கட்சியின்
வளர்ச்சிக்கு பின்னணியில் எந்த ரகசிய சக்தியும் இல்லை’ என
தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள்
கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

பெஷாவரில் நடந்த கட்சி மாநாட்டில்
கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின்
வளர்ச்சிக்கு தடைபோட முடியாது. இது இந்நாட்டில் உள்ள அனைவரது கட்சியாகும்
என இம்ரான் கான் தெரிவித்தார். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் பின்னால்
தேசவிரோத சக்திகள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார்
அவர். வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்தால் முன்னரே தேர்தல்
நடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என அவர் கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தான் பீப்பிள்ஸ்
பார்டியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாக்.வெளியுறவுத்துறை
அமைச்சருமான ஷா மஹ்மூத் குரைஷி தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியில் சேருவார் என
கருதப்படுகிறது. இதுக்குறித்து அவர் இன்று அறிக்கை வெளியிடுவார் என
தெஹ்ரீக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷா மஹ்மூத் குரைஷி இவ்வருடம்
துவக்கத்தில் அமைச்சரவையிலிருந்து விலகினார். பாகிஸ்தான் அரசியலில்
வளர்ந்துவரும் இம்ரான் கானுக்கு ஷா மஹ்மூத் குரைஷியின் வரவு பயனளிக்கும் என
அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» காந்தியின் கொள்கைகள் எனக்கு உத்வேகமளிக்கிறது-புஷ் மீது ஷூ வீசிய முன்தஸர் அல் ஸெய்தி
» அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக இம்ரான்கான் ஆர்ப்பாட்டம்!
» அரபு வசந்தம்: பாக்கிஸ்தானிலும் நடக்க இம்ரான்கான் விருப்பம்
» ருமேனியாவிலும் சி.ஐ.ஏவுக்கு ரகசிய சிறைச்சாலை
» ஆப்கானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற அமெரிக்காவிற்கு உதவ தயார்-இம்ரான்கான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum