தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலக புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிற்கு தடை

Go down

உலக புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிற்கு தடை  Empty உலக புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிற்கு தடை

Post by முஸ்லிம் Wed Oct 27, 2010 9:00 pm

உலக புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கிற்கு தடை

*உலகப் புகழ்பெற்ற வோல்கஸ்வோகன் (Volkswagen), ஹெயடல்பெர்க் சிமென்ட்
(HeidelbergCement) போன்ற மிக பெரிய ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர்
ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.*

* *

*சமிபத்தில் பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டது, முஸ்லீம்களை
பற்றி அவதூறு பரப்படுவதாகவும், முகமது நபியைப் பற்றி நாகரிகமற்ற முறையில்
விமர்சிப்பதாகவும் இதை பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதற்கு உலகம்
முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததன. ஆனால் இன்று நாகரிக நாடாகவும், முழு கல்வி
அறிவு பெற்ற ஜனநாயாக நாடாகவும் கருதப்படும் ஜெர்மனியில் உலக முழுவதும்
வியாபாரம் பரப்பியுள்ள முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை
பயன்படுத்த தடை விதித்துள்ளது.*

*இந்த நிறுவனங்களின் வியாபார கொள்கைகள், செயல்திட்ட அமைப்புகளை, இலாபம் ஈட்டும்
நடைமுறைகளை உலகில் பல முன்னணி பல்கலைகழகங்கள், கல்லூரிகள் தங்கள் பாட
திட்டத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.*

*ஜெர்மனியின் புகழ்பெற்ற பொருளாதார நாளேடான விர்ட்ஸ்சாட்ஸ்வோசே
(Wirtschaftswoche ) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சமுக வலைதளங்கள் மூலம்
ஜெர்மனிய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அவற்றின்
ரகசிய நிறுவன தகவல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளது.*

*"முன்பு மின்னஞ்சல் மூலமாக நிறுவனங்களில் பயன்படுத்தும் மென்பொருட்களில் வைரஸ்
பரப்பட்டது, ஆனால் தற்போது சமுக வலைதளங்களில் சேர்க்கப்பட்டுள்ள
நிரல்கள்(add-on applications) முலம் நிறுவனங்களின் மென்பொருளுக்கு ஆபத்து
விளைகின்றது", என்று ஜெர்மனியின் புகழ் பெற்ற ஆன்ட்டி-வைரஸ் நிறுவனம்
கேஸ்பர்ஸ்கீ (Kaspersky) தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகாரி கிரிஸ்டியன்
ஃபுச்சஸ் தெரிவித்துள்ளார்.*

*தயாரிப்பு பணிகளின் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதால் இதை தடை
செய்துள்ளதாக டைம்ளர் (Daimler) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு பன்னாட்டு
ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும்.*

*உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வலைதளத்தை 500 மில்லியன் (50 கோடி) மக்கள்
பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில்
அலுவகங்களில் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளம் இது தான். இது அலுவலக பணிகளின்
மின்னஞ்சலை விட அதிகம் பயன்படுத்தபடுகிறது.*

*ஜெர்மனியில் எடுத்த சர்வேயில் 30 சதவீத நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதால்
தயாரிப்பு பாதிக்கும் எனவும், 56 சதவீத நிறுவனங்கள் இதை பயன்படுத்துவதால்
பாதுகாப்பு தகவல்கள் திருடப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.*

*சமீபத்தில் இலண்டனில் பள்ளி குழந்தைகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதால்
ஒழுக்கக்கேடுகள் அடைவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது*

நன்றி : இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum