தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்

Go down

லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்  Empty லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்

Post by முஸ்லிம் Fri Dec 23, 2011 8:52 pm

புதுடெல்லி:லோக்பால் மசோதாவில் சில திருத்தங்களை செய்து புதிய லோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

முன்னதாக லோக்பால் சட்ட பெஞ்ச்களில் 50
சதவீத இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் என்றும். அதே நேரத்தில்
இதில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு
பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், லோக் ஜன்சக்தி தலைவர்
ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்தி
வைக்கப்பட்டது.

லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடு அளித்த பிறகே லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று
கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து லாலுவும் சரத் யாதவும்
வலியுறுத்தினார்.

அதே போல லோக்பாலில் எல்லா
சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவும் கோரிக்கை
விடுத்துள்ளார்.

இதையடுத்து இன்று பிற்பகலில் நாடாளுமன்ற
விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல்
செய்தார். அதில், லோக்பால் பெஞ்ச்களில் சிறுபான்மையினருக்கும் இட
ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.




லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11116
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்
» முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி
» மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை
» லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பஸ்வான் வலியுறுத்தல்
» இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் : இமாம்ஸ் கவுன்சில்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum