தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

Go down

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை Empty முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

Post by முஸ்லிம் Sun Nov 07, 2010 4:19 pm

சகோதர சகோதரிகளே, இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது  உண்டாகட்டுமாக! 



தலைப்பை படித்தவுடன் முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது பற்றி இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். இதில் அரசாங்க கல்லூரிகளின் சலுகைகள் பற்றி, நம்மவர்கள் அதில் கவனம் செலுத்தாதது பற்றியும் விரிவாக காணலாம். சமீபத்தில் நான் படித்த செய்தி இந்த பதிவு எழுதுவதற்கு உந்தியது. 
அந்த செய்தி: அரசு கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 







2010-11-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்.சி. போன்ற முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து கட்டணம் ரத்து தொடர்பான கருத்துருவை கல்லூரி கல்வி இயக்குனர் அரசிடம் சமர்ப்பித்தார். 



இதை பரீசிலனை செய்த பின் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2010-11-ம் கல்வியாண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. 



இத்தகவலை அரசு முதன்மை செயலாளர் கணேசன் தெரிவித்தார். 







நன்றி: ததஜ இணையதளம் 


இன்றைய சமுதாய நிலை: 


இன்று முஸ்லீம்களிடேயே பரவலாக காணப்படும் ஒரு வருந்தத்தக்க விஷயம் தங்களுடைய மகன்/மகள் தனியார் கல்லூரியில் படித்தால் தான் தங்களுக்கு கவுரவம் என்று நினைக்கின்றனர். 



ஆனால் உன்மை என்ன? 


தனியார் கல்லூரியில் படித்தால் படிப்புக்கு பல ஆயிரங்கள் / லட்சங்கள் செலவு செய்தது போக கல்லூரி கட்டட விரிவாக்க கட்டணம், கனிப்பொறி கட்டணம், ஆய்வறை (Laboratory) கட்டணம், என்று சொல்லி சில கல்லூரிகள் வசூல் செய்து விடுகின்றனர். பொறியியல் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர்கள் கலந்துரையாடலுக்கு (Counseling) அழைக்கப்படுவதால் அவர்கள் மட்டும் அரசு கல்லூரியில் சேர விரும்புகின்றனர். மேற்படிப்பு படிக்கும் சில முஸ்லீம் மாணவர்கள் கூட தங்களின் திறமையின் அடிப்படையில் IIT, IIM, அரசு கல்லூரிகளில் சேர விருப்பம் காட்டாததும், அதனுடைய அறிவு மாணவர்களிடம் இல்லாததும், பெற்றோர்களும், குடும்பத்திலுள்ள படித்தவர்களும் அதற்கு வழிகாட்டாததும் வருந்தத்தக்கதே. 10% இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியா முழுவதும் இறைவனின் அருளால் கிடைத்தாலும், அதை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நம் சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவதும் நம் இயக்கங்களின் மீதும், சமூக ஆர்வலர்கள் மீதும், நம் சமுதாய மக்கள் மீதும் கடமை என்பதை மறந்து விடாதீர்.




அண்ணா பல்கலைக்கழகம், சென்னை




இந்திய தொழில்நுட்ப நிறுவணம், சென்னை

  
சமீபத்தில் எடுத்த கருத்து கணிப்பு: 



மொத்தம் இந்தியாவில் 15 ஐஐடிகளில் உள்ள 9500 இடங்களுக்கு 13,104 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதில் 2,357 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (முஸ்லிம்களையும் சேர்ந்து). 



ஐஐடி-டில் முஸ்லிம்களையும் சேர்த்து பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு உள்ளது. அதாவது 2565 இடங்கள் பிற்பட்ட வகுப்பினருக்கு உள்ளது ஆனால் தேர்வானதோ 2,357 பேர் மட்டுமே. 



இடஒதுக்கீடு மூலம் நமக்கு கிடைக்கும் இடங்களின் 200 இடங்களுக்கு மேல் வீணாக போகின்றது. 



நன்றி : ததஜ இணையதளம் 


சமுதாய இயக்கங்களே, முதலில் அரசாங்க பள்ளிகளில், கல்லூரிகளில், IIT, IIM போன்ற நிறுவணங்களில் சேர்ந்து படிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆதாயங்களை/பயன்களை சமுதாய மக்களுக்கு எடுத்துரையுங்கள். குடும்பத்தில் படித்த மூத்தவர்கள்/ சமூக ஆர்வலர்கள் இதை அனைவருக்கும் புரிய வையுங்கள். 



நம்மிடம் பொருள் (செல்வம்) இருக்கிறது என்பதற்காக வீண் விரயம் செய்வதும் நமக்கு தடுக்கப்பட்டுள்ளது. 



உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31). 



உண்மையில் அரசாங்க கல்லூரியில் படிப்பது கேவலம் இல்லை, மாறாக நன்றாக படிக்கும் மாணவர்களே அரசாங்க கல்லூரியில் சேர முடியுமென்பதே நிதர்சனமான உண்மை. ஆக இளநிலை படிக்க இருக்கும் மாணவர்கள் பள்ளியிலும், முதுநிலை படிக்க இருக்கும் மாணவர்கள் இளநிலையிலும் நன்மதிப்பை பெற்றால் தான் அரசாங்க கல்லூரியிலும் சேர முடியும். 



இதில் வேதனை தரும் செய்தி என்னெவென்றால் நம் சகோதர சகோதரிகள் பலர் நன்மதிப்பை பெற்றிருந்தும் அரசு கல்லூரியில் சேராமல் நம் சமுதாய கல்லூரியாக (பெரும்பாலும் தனியார் கல்லூரியாக) பார்த்து சேர்ந்து படிப்பது நம் சமுதாயத்தில் வாடிக்கையாகி விட்டது. இதனால் நமக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் வேறு ஒருவர் படிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு (தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கு) ஆகும் சிலவை பற்றியோ, அரசாங்க கல்லூரியில் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியோ நாம் இன்னும் அறியாமல் இருப்பது வருந்த்தத்தக்கதே. அரசாங்க கல்லூரியில் படிப்பதால் கிடக்கும் பலன்கள்: 



1. குறைந்த கட்டணம் 
2. அனைவருக்கும் உதவித்தொகை 
3. குடும்பத்தில் முதல் பட்டதாரியென்றால் அதற்கும் உதவித்தொகை 
4. பேருந்துக்கென்று கட்டணம் வசூலிக்காமல் அரசாங்க பேருந்தில் செல்வதற்கு குறைந்த கட்டண பாஸ். 
5. மேற்படிப்பு (M.A., M.Sc) போன்ற படிப்புகளுக்கு கல்வி கட்டணம் ரத்து 
6. IIT, IIM போன்ற நிறுவணங்களில் படித்தவுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் வேலை. 
7. நன்றாக பாடங்களை சொல்லி தரக்கூடிய ஆசிரியர்கள். (தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பழைய மாணவர்களே ஆசிரியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது) 



மேலே சொன்னவைகள் அனைத்தும் மிகவும் சொற்பமே. நம் சமுதாய மக்கள் பலருடைய எண்ணம், நாம் தான் படிக்கவில்லை என்ன சிலவு ஆனாலும் நம் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். தவறில்லை ஆனால் அரசாங்கள் நமக்கு கொடுக்கும் உரிமைகளை (கல்வி திட்டங்களை) நாம் அறியாமல் நம் குழந்தை படித்தால் போதும் என்று நாம் பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறோம். நாம் படிக்கும் மாணவராக இருந்தாலும், வழிகாட்டும் பெற்றோராக இருந்தாலும், அல்லது காப்பாளராக இருந்தாலும் நமக்குரிய கடமைகளை (கல்வி விஷயத்தில்) தெரிந்து கொள்வது அனைவரின் மீதும் கடமை. 



நாம் மாணவராக இருந்தால்: 


1. அரசாங்க கல்லூரியில் படிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அறிய முயற்சி செய்வதோடு அரசாங்க கல்லூரியில் சேர நல்ல மதிப்பெண்களையும், அதில் சேருவதற்காக நடத்தும் நுழைவுத்தேர்வுகளை பற்றி அறியவும் முயற்சி செய்ய வேண்டும். 



2. அரசாங்க கல்லூரியில் நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அதற்கு விண்ணப்பம் வாங்கி சரியான சமயத்தில் (விண்ணப்பிக்க கடைசி தேதியை அறிந்து) சமர்ப்பிக்க முயற்சி செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரியில் விண்ணப்பித்தல் நல்லது. 



3. பொறியியல் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் IIT நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று அந்த கல்லூரிகளில் சேர முயற்சி செய்ய வேண்டும். 



4. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் IIT, மற்றும் IIM நடத்தும் நுழைவுத் தேர்விகளில் வெற்றி பெற்று IIT மற்றும் IIM இலும் மற்றும் புகழ்வாய்ந்த/பெயர்பெற்ற நிறுவணங்களில் (Reputed Institution) சேர முயற்சி செய்ய வேண்டும். 



நாம் பெற்றோர்களாக / காப்பாளராக இருந்தால்: 



நாம் பெற்றோர்களாகவோ அல்லது காப்பளாரகவோ (Guardian) இருந்தால் மேலே சொன்ன விஷயங்களை அறிவதோடு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். மேலே சொல்லப்பட்ட விஷயத்தை பற்றிய அறிவு/தெளிவு உங்கள் மகன்/மகளுக்கு இல்லாமல் இருக்கலாம். நீங்கள் சிரத்தையெடுத்து உங்கள் மகன்/மகளை ஊக்குவித்து அவர்கள் அரசாங்க கல்லூரிகளில் சேர உதவ வேண்டும். உதாரணத்திற்கு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், அல்லது தரமான மையம் எதுவென்று தெரியாமல் இருக்கலாம் அல்லது தேர்வுக்கான புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களுக்கு உறுதுணையாக ஊன்றுகோளாக நாம் இருக்க வேண்டும். நீங்கள் படித்தவராக இருந்தால் அவர்களின் பாட சந்தேகங்கள், கல்லூரியில் சேர்வது சம்பந்தமாக ஆலோசனைகள், நுழைவுத்தேர்வு சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்குவதில் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வு செம்மை பெற உதவுங்கள். 



பெரும்பாலான நம் சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நுழைவுத் தேர்வின் அவசியம், நுழைவுத் தேர்வின் விபரங்கள், அரசாங்க கல்லூரியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள், IIT, IIM பற்றிய விபரங்கள் தெரியாமல் இருப்பதும் நம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே. ஆகையால் நீங்கள் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல் இதைப் போன்ற விஷயங்களை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை Empty Re: முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

Post by முஸ்லிம் Sun Nov 07, 2010 4:26 pm




பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு மேற்படிப்பு ப்அடிக்க இருக்கும் மாணவர்கள் பயப்படுவது, படிப்புக்கு அதிகம் சிலவாகுமே, ஆதலால் நாம் படிப்பை இதோடு நிறுத்துக் கொள்வோம் என்று முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எண்ணம் தவிடுபொடியாகும்படி அரசாங்கமே இலவசமாக படிப்புதவித் தொகை அளித்து உலக தரத்தில் ஒரு உயர்வான கல்வியையும் வழங்குகிறது. ஆனால் இது பெருமாலான மக்களுக்கும், கிராம வாழ் மாணாக்கர்களுக்கும் தெரியவில்லை என்பதே வருத்தமான விஷயமாகும்.

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

இந்தியாவில் 8 இடங்களில் உள்ள IIT, 20 இடங்களில் உள்ள NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (http://www.tntj.net/மாணவர்-பகுதி/கல்வி-வழிகாட்டி/தேர்வில்-அதிக-மதிப்பெண்/) இணையதளத்தில் உள்ளது.

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்:


ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட State Bank of India கிளைகள் (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,

மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15

-எஸ்.சி்த்தீக் எம்டெக்

நன்றி : ததஜ இணையதளம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை Empty Re: முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

Post by முஸ்லிம் Sun Nov 07, 2010 4:38 pm

பெற்றோரும் கல்வியும்


என் மகன்/மகள் 10 ஆவது படிக்கிறான்(ள்), 12 ஆவது படிக்கிறான்(ள்). அவன்(ள்) இஷ்டத்திற்கு விட்டுட்டேன், அவன்(ள்) என்ன படிக்குனும்னு ஆசைப்படுறானோ(ளோ) அதையே படிக்கட்டும்னு நம்ம பெற்றோர்கள் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இது அவர்கள் கல்வி கற்காததால் வந்த பிரச்சனை. கல்வி கற்காமல் போனதற்கு நாம் அவர்களை குறை கூற முடியாது. ஆனால் இது பற்றி கல்வி கற்றவர்களிடம் ஆலோசனைக் கேட்கலாம். இது கேட்காமல் போனால் பிள்ளைகளை சரியான பாதைக்கு வழிகாட்டாமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் ஆகிவிடுவர்.



சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்ற நபிமொழியில் உலகக் கல்வியின் அவசியத்தை நாம் அறியலாம்.



நம் சிறிது வயது குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு மார்க்கக் கல்வியோடு, இவ்வுலகக் கல்வியை வழங்குவது பெற்றோர்களுடைய கடமை. அதை நிறைவேற்றத் தவறும் போதோ அல்லது அவன் படிப்பில் கவனம் செலுத்தத் தவறும் போதோ அவனை கண்டிக்காமல் “அவனுக்கு படிப்பு ஏற மாட்டேங்குது, அவன் என்னத்த பண்ணுவான்” என்று பெற்றோர்களே பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்குவது பல இடங்களில் நடக்கிறது. 1990 வரை பிள்ளைகள் படிக்காவிட்டால் அவர்களை அடித்து “நன்றாக படிக்க வேண்டும் இல்லையென்றால் நீ வீட்டில் இருக்க கூடாது” என்று மிரட்டி படிக்க வைத்து விடுவர். ஆனால் இன்றோ பல இடங்களில், மேலே சொன்னது போல் குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதற்கு பெற்றோர்களும் காரணம் ஆகிவிடுகின்றனர். சில பெற்றோர்களுக்கு செல்லத்துக்கும், பாசத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.



தங்களுடைய குழந்தைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள், விளையாட்டிலா? படிப்பிலா? படிப்பில் ஆர்வம் என்றால் எதை விரும்பி படிக்கிறார்கள் அல்லது எது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூர்மையாக கவனித்து சரியான பாதையில் குழந்தைகள் பயனிக்க பெற்றோர்கள் உதவ வேண்டும். விளையாட்டில் என்றால், எந்த விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.


குழந்தைகளுடைய அன்றாட வருகை பள்ளியில் சரியாக இருக்கிறதா?


ஒழுக்கத்தில் குழந்தைகள் எப்படி சிறந்து விளங்குகிறார்கள்?


யாருடன் நட்பாக இருக்கிறார்கள்?

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார்கள்?


பொது மேடைகளில், அல்லது வகுப்பறையில் கூச்ச சுபாவத்தோடு இருக்கிறார்களா? அல்லது தைரியமாக Group Discussion போன்றவகளில் கூச்சம் இல்லாமல் பேசுகிறார்களா?


ஆங்கில அறிவு எப்படி இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.


பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விரும்புவதையே தன் குழந்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு தன் குழந்தை இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்படும் பெற்றோர்கள், குழந்தைகள் அந்த படிப்பை விருப்பப்பட்டு படிப்பார்களா? என்று யோசிப்பதில்லை. அதை பிள்ளைகளிடம் கலந்தாலோசிப்பதுமில்லை. சில குழந்தைகளுக்கு கணிதம் சரியாக வராது, அந்த குழந்தைகளை இஞ்சினியரிங் படிக்க வைத்தால் குறைந்தது ஆறு அரியரோடு நான்கு வருடத்தை கஷடப்பட்டு முடிக்கலாம். முடித்தது மட்டுமல்லாமல் பிடிக்காமலே படித்ததனால் அதன் பிறகு வேலையையும் பிடிக்காமலே செய்வான். இதனால் அவனுடைய எதிர்காலம் வீணாவதோடு அவனுடைய மனமும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படும். குழந்தைகள் எதை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அதைப் பற்றி பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்தாலோசித்து எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும். தங்களுக்கு அதை பற்றிய ஞானம் இல்லாத போது படித்த குடும்ப சொந்தங்களிடம், குடும்ப நண்பர்களிடம் கேட்டு அதன்படி செயல்படுத்த வேண்டும்.



நாங்கள் தான் படிக்கவில்லை, கஷ்டப்படுகிறோம், அதனால் எங்கள் பிள்ளையை படிக்க வைக்கிறேன் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு அத்தோடு தங்களுடைய வேலை முடிவதில்லை, அவனை, அவனுடைய செயல்களை கவனித்து, கணிவோடு அவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒரு நல்ல மனிதராக உருவாக்கும் வரை பெற்றோர்களின் கவனம் பிள்ளைகளின் மீது இருக்க வேண்டும். சில இடங்களில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் வேண்டுவதை கொடுத்தால் தான் பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று பிளாக் மெயில் செய்கின்றனர். உதாரணத்திற்கு, +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் எனக்கு பைக் வாங்கி தருவீர்களா? மொபைல் வாங்கி தருவீர்களா? என்று பிள்ளைகள் பெற்றோரிடம் கோரிக்கையாக வைக்காமல் பிளாக் மெயில் போல் கேட்கின்றனர். இதனால் படிக்கின்ற வயதில் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த தவறுவதோடு தவறான பாதைக்கும் செல்கின்றனர்.



+2 வில் நன்றாக படிக்கும் பலர் கல்லூரி சேர்ந்ததும் சரியாக படிப்பதில்லை. ஏன் என்று பெற்றோர்கள் யோசிப்பதில்லை. பிள்ளைகள் படிக்க கடினமாக இருக்கிறது என்று சொல்வதை பெற்றோர்கள் நம்பாமல் எதனால் படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டது என்று யோசிக்க வேண்டும். Video Game, I-pod, PSP, Play Station, போன்றவைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலத்தை மனதில் கொண்டு கேட்கின்ற பொருட்களை எல்லாம் வாங்கி கொடுக்காமல் தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.



குறிப்பு: பெரும்பாலான இடங்களில் ஆண்பாலை குறிக்கும் விதமாக விவரிக்கப்பட்டாலும், இருபாலாருக்கும் (மாணவ/மாணவியருக்கும்) இந்த கட்டுரை பொருந்தும்.



நன்றி : http://hajaashraf.blogspot.com/
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை Empty Re: முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை!
» எகிப்து:அவசர நிலை இன்று வாபஸ்
» தங்கம் & வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை
» மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு
» வஹ்ததே இஸ்லாமியின் உறுப்பினர்கள் கைது முஸ்லீம் இயக்கங்களை ஒடுக்கும் சதி : அதாவுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum