தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை

Go down

தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை  Empty தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை

Post by முஸ்லிம் Thu Dec 29, 2011 7:36 pm

தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை  Hormuz-270x170

டெஹ்ரான்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது தடைகளை திணித்தால் வளைகுடா நாடுகளின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி வழியான ஹோர்முஸ் கடல் பகுதியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் துணை அதிபர் அலி ராஹிமி இந்த எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு விடுத்துள்ளார்.இச்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா வெளியிட்டுள்ளது.

கடல்வழியை மூடுவது எளிதானது என ஈரான்
கடற்படை தலைமைத்தளபதி அட்மிரல் ஹபீபுல்லாஹ் ஸயரி கூறினார்.ஹோர்முஸ் கடல்
வழி அருகே ஈரான் கடற்படை போர் ஒத்திகை நடத்தியபிறகு இந்த அறிவிப்பு
வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா பகுதியில் எண்ணெய்
உற்பத்திச்செய்யும் நாடுகளான பஹ்ரைன், குவைத், சவூதி அரேபியா, யு.ஏ.இ,
கத்தர் ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் கடல் வழியை
நாடுகின்றன.உலகிலேயே கடல் வழியிலான எண்ணெய் வர்த்தகத்தின் 40 சதவீதமும்
ஹோர்முஸ் வழியாகத்தான் நடைபெறுகிறது.ஆகையால் இப்பாதையை மூடினால் பெரும்
எண்ணெய் நெருக்கடி உருவாகும்.

அணுஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம் சாட்டி
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஈரானின் எண்ணெய் துறை மீது தடையை
ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில் ஈரானும் கடும்
நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகியுள்ளது.கடற்படை ஒத்திகை என்பது ஈரான்
வழக்கமாக நடத்துவதுதான் என்றாலும், இம்முறை ராணுவத்தின் சக்தியை
பிரகடனப்படுத்தும்விதமாக இந்த ஒத்திகை அமைந்தது.


தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் எண்ணெய்விலை உயரும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
» இஸ்ரேலை நிர்மூலமாக்கி விடுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை!
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை
» கோலான்குன்றுகளை மீட்போம்-இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum