தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?

Go down

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Empty நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?

Post by முஸ்லிம் Sat Jan 21, 2012 8:08 pm


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Bismillah_2


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...




உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....






  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?



இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...




இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...


  • இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன
    முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில்
    இருக்கின்றனர்?


  • ஏன்
    ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி
    உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே,
    இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?




குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம்
ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.






இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது
அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித
மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி
முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர். பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும்
(Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு
நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி
மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.




இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள்
லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு
சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன.
இந்த நூல்களை தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு
அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை
பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.




ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.

முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான்.



அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின்
பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல்
தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு
தெளிவாகவில்லை
--- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.


முஸ்லிம்களின் பங்களிப்பை முழுமையாக எழுதுவதற்கு மிக அதிக பக்கங்கள்
தேவைப்படும். அதனால் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பது ஒரு
பிரிவைப்பற்றிதான். இதனை அடிப்படையாக வைத்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள்
உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.




இந்த பதிவின் நோக்கம் ஒன்றுதான், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு நம்மவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுதான்.




இதனை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரியர்கள் தான் சொல்லுகிறார்கள்.




இந்த பதிவில் கணிதத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...




கணிதம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதில் பங்காற்றிய முஸ்லிம்களின்
எண்ணிக்கையும் அதிகம். இங்கு கணிதத்துறையில் முஸ்லிம்களின் மிக முக்கியமான
சில பங்களிப்புகளை மட்டும் காண்போம்...இன்ஷா அல்லாஹ்




கணிதத்தின் பிரிவுகளில் முக்கியமானவை நான்கு, அவை


  1. எண் கணிதம் (Arithmetic)
  2. அட்சர கணிதம் (Algebra)
  3. கேத்திர கணிதம் (Geometry)
  4. கோணவியல் (Trignometry)



இந்த நான்கிலும் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒவ்வொன்றாக காண்போம்.



1. எண் கணிதம் (Arithmetic):






நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Arithmetic

எண் கணிதம் என்பது எண்களைப்பற்றியும் (0 to 9), எண்ணும் முறைகளைப் (like
11, 874, 9001) பற்றியும் மற்றும் அதனைச் சார்ந்த கூட்டல் (Addition),
கழித்தல் (subtraction), பெருக்கல் (Multiplication) மற்றும் வகுத்தல்
(Division) பற்றியும் விளக்கும் கணிதத்தின் ஒரு பிரிவாகும்.




எண்கள்:




இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்கள் "0,1,2,3,4,5,6,7,8,9", இந்த எண்களுக்கு பெயர் "அரேபிய எண்கள் (Arabic Numerals)" என்பதாகும். அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்களை முதன்முதலில் ஐரோப்பிய தேசங்களுக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம்கள்தான்.




நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Text-arabic-numbers0-9




நீங்கள் தற்போதுள்ள அரபி எண்களையும், இப்போது நாம் பயன்படுத்தும்
எண்களையும் பார்த்தீர்களானால், இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை
அறிந்துக்கொள்வீர்கள். ஐரோப்பியர்கள் அரபி எண்களை எடுத்து அதில் மாற்றங்களை
செய்து தற்போதுள்ள எண்களாக மாற்றிவிட்டனர்.




இந்த "சைபர் (Cipher/Cypher, '0') " என்ற வார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அரபியில் இந்த சைபரை குறிக்க "சிபர் (Sifr)"
என்ற எண்ணை பயன்படுத்துவோம். இன்று நாம் '0' வை குறிக்க பயன்படுத்தும்
சைபர் என்ற வார்த்தை அரபியில் உள்ள சிபர் (Sifr) என்ற வார்த்தையிலிருந்து
வந்ததுதான்.




அரபியில் இருந்து வந்த எண்கள் என்பதால் ஐரோப்பியர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களுக்கு அரேபிய எண்கள்என்று பெயர் சூட்டிவிட்டனர்.




அதனாலயே இந்த எண்கள் இன்று வரையும் அரேபிய எண்கள் (Arabic Numerals) என்று அழைக்கப்படுகின்றன.




எண்ணும் முறை:




மேற்கொண்டு செல்லும்முன் இங்கே சற்று நிறுத்தி சில முக்கிய தகவல்களை பார்க்கவேண்டியது இந்த பதிவிற்கு அவசியமாகிறது.




அரேபிய எண்களுக்கு முன்னமே உலகில் எண்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவைகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்

[url=http://3.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S47HGU11wyI/AAAAAAAAASs/vmkMI410LRI/s1600-h/diff numerals.jpg]நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Diff%20numerals[/url]




  • கிரேக்கர்கள்
  • எகிப்தியர்கள்
  • ரோமானியர்கள் மற்றும்
  • ஹிந்துக்கள்



இவர்களில் ரோமானியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்கள் முறைதான் பிரபலமானது.
முதலில் ரோமானியர்களின் எண்களை பார்ப்போம். இந்த வகை எண்கள் இன்றளவும்
புழுக்கத்தில் இருக்கின்றன. நமக்கும் நன்கு அறிந்த ஒன்று.




1-I, 2-II, 3-III, 4-IV, 5-V, 6-VI ...... 10-X, 11-XI, 12-XII....




இந்த வகையான எண்களில் உள்ள மாபெரும் பிரச்சனை என்னவென்றால், மூன்று வரை
எண்களை அடையாளம் காண்பது எளிது. ஆனால் அதன் பிறகு மிகவும்
கடினமாகிவிடுகிறது, பெரிய தொகையென்றால் அவ்வளவுதான்...உதாரணத்துக்கு 323
என்ற எண்ணை எழுதவேண்டும் என்றால், ரோமானிய முறைப்படி CCC XX III (C=100,
X=10, I -1) என்று எழுதவேண்டும். இது ஒரு கடினமான முறை தான்.




மற்றுமொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், '0' நடுவில் வந்தால் மாபெரும்
குழப்பம்தான். உதாரணத்துக்கு 302 என்று எழுதவேண்டுமானால் CCCII என்று
எழுதவேண்டும். ஆனால் XXX II என்று எழுதினாலும் அதனை 302 ஆக எடுத்துக்கொள்ள
வாய்ப்புள்ளது.




ஆக, எந்த ஒரு எண்ணையும் ரோமானிய வடிவங்களால் குறிக்க முடியும் என்றாலும், அது ஒரு கடினமான கணிதமுறையாகவே இருந்தது.




அடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது
வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர்.




நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Indian_numerals_100AD




இந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.




ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹிந்துக்களின் இந்த
முறையில் '0' வை குறிக்கும் எந்த ஒரு வடிவமும் இல்லை. பின்னர்
ஹிந்துக்களால் '0' என்ற வடிவம் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லப்பட்டாலும்
அதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுவரை எந்த ஒரு சான்றுமில்லை.
குவாலியரில் கண்டுபிடிக்கப்பட்ட 876 ஆம் காலத்திய கல்வெட்டில் தான் '0'
இருந்தது (தற்போது நாம் பயன்படுத்தும் சைபர் போலல்லாமல் சிறிதாக இருந்தது),
இதுதான் முதல் தெளிவான சான்று. இதற்கு முன் என்றால் ஆர்யபட்டர் 'க (Kha)'
என்ற எழுத்தை "ஒன்றுமில்லாததை (Void/empty place)" குறிக்க பயன்படுத்தி
இருக்கிறார். உதாரணத்துக்கு 302-ஐ குறிக்க வேண்டுமானால் 3க2 என்று
பயன்படுத்தி இருக்கிறார்.




ஆக, ஹிந்துக்கள் முதலில் கண்டுபிடித்த எண்களில் '0' கிடையாது. பின்னர்
கண்டுபிடிக்கப்பட்ட சைபரையும் (0) அவர்கள் ஒரு எண்ணாக (நம்பர்ராக) கருத
இல்லை. அதனை "ஒன்றுமில்லாததை (Hindus used zero to represent a empty place
but didn't include it in the set of Numbers) " குறிக்க மட்டுமே
பயன்படுத்தினர். ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான்
எண்கள், '0' கிடையாது.




பதிவிற்கு வருவோம்....




சரி, முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். முஸ்லிம்களுக்கு
கணிதத்தில் பயன்படுத்த வடிவங்கள் தேவைப்பட்டது. ரோமானிய, கிரேக்க
மற்றும் எகிப்திய எண்கள் கடினமானதாகப்பட்டது.




ஹிந்துக்களின் எண்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. தாங்களும் ஏன்
ஒவ்வொரு எண்ணையும் குறிக்க ஒவ்வொரு வடிவத்தை பயன்படுத்த கூடாது என்றெண்ணி
தற்போதுள்ள அரேபிய எண்களை (ஹிந்துக்களின் வடிவமைப்பை பார்த்து தங்கள்
எண்களை உருவாக்கியதால், இந்த அரேபிய எண்கள் அரபி-ஹிந்து எண்கள் என்றும்
அழைக்கப்படுகின்றன) வடிவமைத்தனர்.




முஸ்லிம்கள் ஒன்றுமில்லாததை குறிக்க "சிபர் (sifr)"
என்ற வடிவத்தை பயன்படுத்தினர், ஆனால் அவர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல்
"சிபர் (sifr)" வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான்
(They added Zero in the list of Numbers).


அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது.








இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன.

அதாவது, ஒன்று முதல் ஒன்பது வரை எண்ணிவிட்டு பின்னர் "பத்து" என்றால் ஒன்று
போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம், பின்னர் பதினொன்றிலிருந்து
பத்தொம்பது வரை எண்ணி பிறகு "இருபது" என்பதை இரண்டு போட்டு பக்கத்தில்
சைபர் போடுகிறோம் அல்லவா, இதெல்லாம் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக
சேர்த்ததால் வந்ததுதான். அதுபோலவே 20, 3000, 400000 etc....

இன்றைய எண்ணும் முறைகளை எளிமையாக, நேர்த்தியாக கொண்டு வந்தது முஸ்லிம்கள்
தான் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால்
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை மிக எளிமையாக, நேர்த்தியாக
கணக்கிடப்பட்டன.



"Hindu Mathematicians in Southern India first created zero but did not recognise it as Number.
They used Zero only as a place holder when no number existed. Add 4 6,
you get 10, one in tens column and 0 in one's column. The Hindus
realised that they needed a way to indicate that there was no number in
units position.

For 400 years, that
was the only use of Zero. No one added, subracted, multiplied, or
divided it. It was only used to hold an empty place for a missing
Number. So, 2003 could be written differently than 2030 or 23.

Before 800 AD the Hindu number system migrated west into Arab world. There a brilliant Mathematician, Al-Khwarizmi, invented Zero as a Number. He realised that it has to be a number in order for the emerging system of algebric equation to work" --- Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.


முஸ்லிம்களின், சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்ட
இந்த முறைதான் இன்று நாம் கணிதத்தை எளிமையாக எடுத்து செல்ல உதவுகிறது. இது
வரலாற்றில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக புகழவும் படுகிறது.







அதுமட்டுமல்ல, "தசம பின்னல் (Decimal Fractions)" முறையை கண்டுபிடித்ததும்
முஸ்லிம்கள்தான்.உதாரணத்துக்கு,கணிதத்தில் 10/4 என்றால் 2.5 என்று
உபயோகப்படுத்துகிறோமே, இந்த தசம பின்னல் முறையை
கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.








பின்னாட்களில் முஸ்லிம்களின் அரபி கணித புத்தகங்கள் லத்தீன் மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிற்கு சென்றன. அதனை ஐரோப்பியர்கள் தங்கள்
ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்...




ஆக, எண் கணிதத்தை (Arithmetic Maths) பொறுத்தவரை நாம்தான் இன்றைய கணிதத்திற்கு முன்னோடி. இன்று இருக்ககூடிய




  • எண்களாகட்டும் (0 to 9),
  • எண்ணும் முறைகளாகட்டும் (10,30,8000...),
  • கூட்டல் போன்ற செயல்களாகட்டும்,
  • தசம பின்னல் முறைகளாகட்டும் முஸ்லிம்களின் பங்களிப்பு முதன்மையானது

இப்போது நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் யார் கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.




சிபர் (sifr) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது:




சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி
ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று
புகழப்படும் அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே.




நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? 250px-Abu_Abdullah_Muhammad_bin_Musa_al-Khwarizmi_edit

இவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.




இவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு
நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து
அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு
எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல்
மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார்.
இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி.




தசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi)
அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார்.
கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.




இந்த துறைக்கு இவர்களைத்தவிர பல முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை
தந்திருக்கின்றனர், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அறிந்து
கொள்வீர்கள்.



2. அட்சர கணிதம் (Algebra)



நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Algebra

இன்று பல துறைகளில் இன்றியமையாததாய் இருக்கும் அட்சர கணிதத்தை கொண்டு வந்தது நாம் முன்னே பார்த்த அல் கரிஷ்மி அவர்கள் தான். அட்சர கணிதத்தின் தந்தை (Father
of Algebra) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இதைப் பற்றி எழுதிய புத்தகம்
"கிதாப் அல்-ஜபர் வல் முகாபுலா (Kitab al-jabr wa-l-Muqabulaa, Book on
calculation by completion and balancing, 830 AD)". இந்த "அல்-ஜபர்" என்ற
வார்த்தைதான் "அல்ஜீப்ரா" ஆனது. அதுபோல இவருடைய பெயரை லத்தீன் மொழியில்
மாற்றம் செய்யும் போது உருவான வார்த்தை தான் "அல்காரிதம் (Algorithm)"
என்பது.

மிக அழகாக, எளிமையாக, நேர்த்தியாக, பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய வாதத்தை
விளக்கினார். இவருடைய இந்த பணி கணிதத்தில் ஒரு மாபெரும் புரட்சி. சதுக்கம்
(Square) மற்றும் வர்க்கமூலங்களை (Square root) மிக அழகாக பயன்படுத்தி
காட்டினார்.

இவர் மட்டுமல்லாமல் இந்த துறையில் சாதித்த முஸ்லிம்கள் பலர், இவர்கள் அல்- கரிஷ்மி அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. சரித்திரம் பின்வரும் கணித மேதைகளையும் மிக அதிகமாகவே புகழ்கிறது.

  • சிறந்த புலவராக அறியப்பட்ட ஓமர் கையாம் (Omar Khayyam) அவர்கள் ஒரு மிகச்சிறந்த கணிதமேதையும் ஆவார்.
  • அபுல் கமில் (Abul Kamil) அவர்கள்
  • அபு பக்கர் கார்கி (Abu Bakr Karkhi) அவர்கள் என்று ஏராளமானோர்...

இவர்கள் அனைவரும் அல்-கரிஷ்மி அவர்களின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அட்சர
கணிதத்தை மேலும் பளபளப்பாக்கினர். இவர்களுடைய நூல்கள் இன்றளவும்
பாதுகாக்கப்பட்டு, கணிதத்துறையில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இன்றைய அட்சர கணிதத்தை முழுமையாக கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என்றால் அது
மிகையாகாது.



3. கேத்திர கணிதம் (Geometry)


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Geometry

கணிதத்தின் மற்ற துறைகளைப் போலவே கேத்திர கணிதத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது.

முஸ்லிம்களுக்கு முன்னே இதில் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள்,
பிரமீட்களை கேத்திர கணித முறையை பயன்படுத்தி கட்டியவர்கள் அவர்கள்.
அதுபோலவே கிரேக்கர்களும் இந்த துறையில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த
துறையில் சிறந்து விளங்கிய யுக்லிட் (Euclid) அவர்கள் ஒரு கிரேக்கர்.

முஸ்லிம்கள் இந்த துறையில் ஆற்றிய ஒரு பெரிய பங்களிப்பாக உலகம் பார்ப்பது,
அவர்கள் அந்த கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை அரபியில் மொழிபெயர்த்து
அந்த நூல்களை அழிய விடாமல் காத்தது தான். மொழிபெயர்ப்பு என்றால்
சாதாரணமில்லை. இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களால் மட்டுமே செய்ய
முடியும். கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை மொழி
பெயர்க்குமளவு முஸ்லிம்கள் கணித அறிவை கொண்டிருந்தனர்.

முஸ்லிம்கள் அந்த நூல்களை மொழிபெயர்க்க காரணம், அவற்றை தங்கள் மொழியில்
புரிந்துக்கொண்டு மேலும் இந்த துறையில் முன்னேற்றங்களை கொண்டுவரவேண்டும்
என்பதற்காகத்தான்.

முஸ்லிம்கள் அரபியில் மொழி பெயர்த்த இந்த நூல்கள்தான் பின்னர், அரபியில்
இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்கள்
அதனை எடுத்துக்கொண்டனர். ஆக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை என்றால்
கிரேக்க மற்றும் எகிப்திய நூல்கள் அழிந்துபோயிருக்கும். இது ஒரு சிறப்பான
பணியாக கணித துறையில் பாராட்டப்படுகிறது.

மொழி பெயர்த்து தங்களுடைய பங்களிப்பை இந்த பிரிவில்
காட்டியது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் தங்களின் தனி முத்திரையையும் இந்த
பிரிவில் பதித்தனர். பல புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.

"It had a large
number of, geometrical problems for the fundamental construction
of plane geometry to the constructions of the corners of a regular
polyhedron on the circumscribed sphere of special interest is the fact
that a number of these problems are solved by a single span of the
compass, a condition which we find for the first time here."
--- H.Suter
இந்த துறையில் முஸ்லிம்களின் பணியானது கிரேக்கர்கள் மற்றும் ஹிந்துக்களின்
பணியை விட மிக மேன்மையானதாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள்
குறிப்பிடுகின்றனர் (Muslims were much in advance of Hindus and Greeks in the development and use of geometry).

கேத்திர கணிதத்தில் "பை (Pi)" என்ற சொல்லுக்கு தசம பின்னல் (Decimal
Fractions) முறைப்படி ஒன்பது எண்களைக்கொண்டு விடையளித்தவர் நாம் முன்னே
பார்த்த அல்-கசி (Al-Kashi) அவர்கள்.

"In 1424 Al-Kashi published a treatise on circumference, in which he
calculated "pi", the ratio of a circle's circumference to its diameter,
to nine decimal places. Nearly two hundred years would pass before
another mathematician surpassed this achievement"
முஸ்லிம்கள், எண்ணற்ற நூல்களை இந்த பிரிவில் எழுதினர், அவை முஸ்லிம்களின் கணித அறிவுக்கு மற்றுமொரு சான்று.

இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்

  • முஹம்மது, ஹசன் மற்றும் அஹ்மத் சகோதரர்கள்
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi)
  • தபித் பின் குர்ரா (Thabit bin qurra)
  • அல்-இஸ்பாஹனி (Al-Isfahani)


4. கோணவியல் (Trigonometry






நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Trignometry

கோணவியல், பல்வேறு பொருள்களுக்குண்டான தூரத்தை அளக்க பயன்படும் கணிதத்தின்
ஒரு பிரிவு. முஸ்லிம்களுக்கு முன்னால் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள்,
கிரேக்கர்கள், ஹிந்துக்கள் என்று பலரும் இந்த பிரிவைப்பற்றி அறிந்து
வைத்திருந்தனர். ஆனால் நாம் இப்போது அறிந்திருப்பது போல அது கணிதத்தின் ஒரு
பிரிவு கிடையாது. வான சாஸ்த்திரத்தில் ஒரு பகுதியாகவே அறியப்பட்டிருந்தது.

முதன் முதலில் கோணவியலை வான சாஸ்த்திரத்தில் இருந்து பிரித்து அதனை
கணிதத்தின் ஒரு பிரிவாக கையாண்டது முஸ்லிம்கள்தான். இதனை செய்தவர் நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi), இவர் தான் இன்று நாம் பயன்படுத்தக்கூடிய உருண்டை கோல கோணவியலை (Spherical Trigonometry) தற்போதைய நிலைக்கு உருவாக்கியவர். அதனாலயே இவர் கோணவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

கோணவியலில் பல புதுமைகளை புகுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான்.

"It was after this development in Islamic mathematics that the first real trigonometry emerged" --- E. S. Kennedy

  • சமதள கோணவியலை (Plane Trigonometry) உருவாக்கியதும் நாம்தான்.
  • சைன் மற்றும் கோசைன் (Sine and Cosine tables) குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிட்டது முஸ்லிம்கள்தான்.
  • டேஜன்ட் டேபல்ஸ் (Tangent tables) முறையை முதலில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான்....

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கோணவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இன்றைய கோணவியலுக்கு வழிகாட்டி..

இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்

  • அல் கரிஷ்மி (Al-Khwarizmi)
  • அல் பதானி (Al-Battani)
  • ஜபிர் பின் ஆபியா (Jabir bin Afiah)
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • அபுல் ஹசன் கொஷியர் (Abul Hasan Koshiar)
  • அபு ரய்ஹன் பிருணி (Abu Rayhan Biruni)
  • தகி அல்-டின் (Taqi Al-din)
  • ஜம்ஷெட் அல்-கசி (Jamshed al-Kashi)
  • ஓமர் கையாம் (Omar Khayyam)


இப்படிப்பட்ட
மேதைகளை தான் இஸ்லாமிய உலகம் கணிதத் துறைக்கு கொடுத்தது. அவர்கள்,
அவர்களது காலத்தில் கணிதத்தில் முன்னோடிகளாக இருந்தது மட்டுமில்லாமல்
இன்றைய பல கணித முறைகளுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. ஐரோப்பிய உலகம்
இவர்களது நூல்களை பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை மொழிபெயர்த்து கொண்டு,
தங்களது ஆராய்ச்சிகளை இவர்களது உதவியைக் கொண்டு முன்னேற்றி சென்றது.



"சமீபத்திய ஆராய்ச்சிகள் நாம் அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளுக்கு கடன் பட்டிருப்பதாக கூறுகின்றன. நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இன்றைய கணிதத்தின் பல அற்புதமான எண்ணங்களை 16,17,18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதமேதைகள் கண்டுபிடித்ததாக, அவையெல்லாம் நிச்சயமாக அரேபிய/இஸ்லாமிய
எண்ணங்கள் என்று இப்போது தெரிய வருகின்றன. பல கோணங்களிலும், இன்று நாம்
படிக்கக்கூடிய கணித முறைகளின் பாணி, கிரேக்கர்களின் கணித பாணியை விட
அரேபிய/இஸ்லாமிய
கணித முறைகளையே மிகவும் ஒத்துவருகிறது" --- John J.O'Conner and Edmund
F.Robertson, The MacTutor History of Mathematics


"Recent research paints a new picture of the debt that we owe to Arabic/Islamic mathematics. Certainly
many of the ideas which were previously thought to have been brilliant
new conceptions due to European mathematicians of the sixteenth,
seventeenth and eighteenth centuries are now known to have been
developed by Arabic/Islamic mathematicians
around four centuries
earlier. In many respects the mathematics studied today is far closer in
style to that of the Arabic/Islamic contribution than to that of the
Greeks"
--- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics

ஆக,
கீத் டெவ்ளின் (Keith Devlin) அவர்கள் சொன்னது போல, முஸ்லிம்களின்
பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்பது
தெளிவாகவில்லை.


அப்படிப்பட்ட தாக்கத்தை முஸ்லிம்கள் கணிதத்துறையில் ஏற்படுத்தியுள்ளனர். இதனை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

மற்றொன்றையும்
நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின் இந்த சாதனைகள் இஸ்லாத்தை சுற்றியே
வந்துள்ளன. உதாரணத்துக்கு பிறையை கணக்கிட தொடங்கியே வான சாஸ்த்திரத்தில்
சிறந்து விளங்கினர்.


அவர்களுக்கு
பெரும் ஊக்கமாய் இருந்தது குரான். சற்று சிந்தித்து பாருங்கள், நான் மேலே
குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லோரும் குரான் அருளப்பட்ட காலத்திற்கு
பிந்தியவர்கள் தான். குரான் அருளப்படுவதற்கு முந்தைய அரேபியர்களின் நிலையை
நினைத்துப் பாருங்கள். இந்த தலைக்கீழ் நிலைமைக்கு காரணம் இஸ்லாம்.


இங்கே
நான் குறிப்பிட்டுள்ளவை மிகச் சிறிதே. நீங்கள் அறிவியலின் எந்த ஒரு
முக்கிய துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்,
அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. நீங்கள் ஆராய்ந்து
பார்த்தீர்களானால் உணர்ந்து கொள்வீர்கள். வியப்பின் எல்லைக்கு செல்வீர்கள்.


இதையெல்லாம்
ஏன் நம் சகோதரர்கள் பள்ளிகளில் படிப்பதில்லை? ஏன் சில தகவல்கள்
திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன? இறைவனே எல்லாம் அறிந்தவன்.




  • நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?



இனி இதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருக்காது...ஆம் பதினேழாம்நூற்றாண்டு முதல் பத்தொம்பதாம் நூற்றாண்டு
வரை, சுமார் 300 ஆண்டுகள் நமக்கு இருண்ட காலம்தான். இதற்கு பல காரணங்களை
சொல்லலாம். ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற காலங்களை சந்தித்து தான்
வந்துள்ளன.


தற்போது நிலைமை மிக வேகமாக மாறிக்கொண்டு வருகின்றது. உதாரணத்துக்கு, நான்
தனித்துவம் பெற்றுள்ள துறையில் (VLSI design, Semiconductor Physics) அதிக
அளவிலான ஆய்வுக்கட்டுரைகள் முஸ்லிம்களால் சமர்பிக்கப்படுகின்றன.
அல்ஹம்துலில்லாஹ்.

அறிவியலின் பல்வேறு துறைகளிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்க ஏக இறைவன் உதவுவானாக...ஆமீன்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:



1. Br.Shabir Ally - President, Islamic Information & Dawah Centre International, Toronto, Canada.

References:
1. Tamil translations of Mathematical terms taken from online Tamil dictionary site, tamildictdotcom.
2. Islam: A thousand years of Faith and Power - Jonathan Bloom and Sheila Blair.
3.ARAMCO and Its World: Arabia And The Middle East - Edited by Ismail I. Nawwab, Peter C. Speers & Paul F. Hoye.
4. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America
5. Arabic Mathematics: Forgotten Brilliance? - MacTutor History of Mathematics.
6. Arabic-Hindu numerals - Encyclopedia Brittanica
7. Origin of the Arabic Numerals: A natural history of numbers - Adel S.Bishtawi
8. Marvels of Math: Fascinating reads and Awesome Activities - Kendall F.Haven
9. Muslims Contribution to Mathematics - Shirali Kadyrov.
10. Al-Khwarizmi Biography - Biography base.
11. Muslims Contributions - Net Muslims


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Empty நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? - II

Post by முஸ்லிம் Sat Jan 21, 2012 8:32 pm

நான் முன்னமே கூறியது போல்,
அறிவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பை பார்த்தோமானால் வியப்பின் உச்சிக்கே
சென்றுவிடுவோம். அவர்களுடைய அறிவியல் சார்ந்த எண்ணங்கள் அற்புதமானவை,
ஆச்சர்யமூட்டுபவை, அசாதாரணமானவை.

"Muslim scientists have made all discoveries of the current age" --- Prof.George Saliba, Arabic and Islamic Studies, University of Columbia.
இந்த பதிவில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது, அறிவியலின் ஒரு
குறிப்பிட்ட துறையைப் பற்றியல்ல. அதாவது, நாம் அறிவியலின் இந்த துறையில்
என்ன செய்தோம், அந்த துறையில் என்ன செய்தோம் என்பது பற்றியல்ல. இதையெல்லாம்
விட முக்கியமானது, அடிப்படையானது.


அது, அறிவியலை அணுகும் முறை (The scientific Method).


அதாவது, நாம் ஒன்றை
கண்டுபிடிக்க/ஆராய முயல்கிறோமென்றால் அதனை எப்படி அணுகவேண்டும், என்னென்ன
செய்யவேண்டும் என்று படிப்படியாக விளக்குவதுதான் அறிவியலை அணுகும் முறை.
"The scientific method is a way to ask and answer scientific questions by making observations and doing experiments"
உதாரணத்துக்கு, நாம் ஒரு பரீட்சை எழுத போகிறோமென்றால் என்னென்ன செய்வோம்,
முதலில்
பரீட்சைக்கு தேவையான புத்தங்களை தேடிப் படிப்போம், பின்னர் தேர்வுக்கு
தேவையான பொருள்களை தயார் செய்வோம், தேர்வுக்கு செல்வோம், படித்ததை பதிவு
செய்வோம், பதிவு செய்யும்போது அதிக மதிப்பெண்/சுலபமாக உள்ள கேள்விகளுக்கு
முதலில் பதில் எழுதுவோம், பதிவு செய்தபிறகு ஒன்றுக்கு பல முறை எழுதியதை
திருப்பிப் பார்ப்போம், கடைசியாக சமர்ப்பிப்போம்.


ஆக, தேர்வில் நல்ல மதிப்பெண்களை
பெற வேண்டுமென்றால் நாம் மேல பார்த்தவையெல்லாம் அவசியம் தேவை. இதுதான்
அணுகும் முறை. என்னதான் நாம் நன்கு படிப்பவராக இருந்தாலும் தேர்வை
அணுக தெரியவில்லையென்றால் அது நாம் எதிர்ப்பார்த்த முடிவைத் தராது. இதனால்
தான் பல கல்விக்கூடங்களும் எப்படி தேர்வை அணுகுவது என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றன.


ஒரு தேர்வுக்கே இப்படியென்றால்
அறிவியலை எடுத்தோம், கவுத்தோம்மென்று அணுகிவிட முடியாது. அப்படி செய்தால்
அது நல்ல முடிவையும் கொடுக்காது.


முஸ்லிம்கள் இங்கு தான் சிறந்து விளங்கினார்கள். உலகிற்கு முதன்முதலில் அறிவியலை எப்படி அணுகவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக சொல்லி கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான். எப்படி அணுகினால் நல்ல முடிவை (Result) பெறலாம் என்று விளக்கியவர்கள் முஸ்லிம்கள்தான்.


முஸ்லிம்களின் இந்த கண்டுபிடிப்பை அறிவியலாளர்கள் மனதார பாராட்டுகின்றனர். இதனாலேயே நவீன அறிவியலுக்கு முஸ்லிம்கள்தான் அடிக்கோளிட்டவர்கள் என்றும் புகழ்கின்றனர்.


முஸ்லிம்கள் அறிவியலை அணுகிய
இந்த முறையைத்தான் ஐரோப்பியர்கள் பின்னர் எடுத்துக்கொண்டனர். இன்று நாம்
பயன்படுத்தக்கூடிய அணுகும் முறைகளும் கிட்டத்தட்ட அன்றைய கால முஸ்லிம்கள்
பயன்படுத்தியது போன்றுதான் உள்ளது.


இன்று நாம் அறிவியலை அணுக பின்பற்றும் முறைகள் பின்வருபவை...



1. நாம் எதைப்பற்றி ஆராய எண்ணுகிறோமோ அதைப்பற்றிய கேள்விகளை நம்மையே கேட்டுகொள்வது. (Ask a Question)


உதாரணத்துக்கு,

  • இது என்ன?
  • நான் ஏன் இதை செய்ய வேண்டும்?
  • எப்படி செய்ய வேண்டும்?
  • இது எங்கே பயன்படும்?
  • எப்போது பயன்படும்?
இப்படி இதுபோன்ற கேள்விகளை நமக்குள்ளே கேட்டுக்கொள்வது.




2. அடுத்தது, நாம் நமக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு ஆராய்ந்து விடை காண முயல்வது (Do Background Research)




இது ஒரு முக்கியமான பகுதி, இங்கு பலவற்றை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்,




உதாரணத்துக்கு,


  • நாம் ஆராய்கின்ற ஒன்று ஏற்கனவே ஆராயப்பட்டதா? அல்லது புதிதா?
  • அப்படி ஏற்கனவே ஆராயப்பட்ட ஒன்று என்றால் அது ஏன் தோல்வியுற்றது? அல்லது அதில் நாம் புதிதாக என்ன சேர்க்கலாம்?
இப்படி நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்வது இரண்டாவது படி.





3. கிடைத்த பதில்களை கொண்டு ஒரு தோராயக்கருத்தை உருவாக்குவது. (Construct a Hypothesis).




"தோராயக்கருத்தை உருவாக்குவது" என்றால் இது இப்படித்தான் வேலை செய்யும் என்று நமக்குள்ளே தோராயமாக கணக்கிடுவது.

"A Hypothesis is an educated guess about how things work"
உதாரணத்துக்கு,
நான் இதை செய்தால் பிறகு இப்படி நடக்கலாம் (If _____[I do this] _____, then _____[this]_____ will happen) என்று கணக்கிடுவது.
நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Overview_scientific_method2


4. பின்னர் நம்முடைய தோராயக்கருத்தை செய்முறை மூலம் பரிசோதனை செய்வது (Test Your Hypothesis by doing an Experiment).


நம் பரிசோதனை முடிவுகள் நம் தோராயக்கருத்தை எந்த அளவு ஒத்துபோகின்றன என்று கணக்கிடுவது. பின்னர் மேலும் மேலும் பல பரிசோதனைகள் செய்வது.


5. அடுத்தது, பரிசோதனைகளின் முடிவுகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது (Analyse Your data and Draw conclusion)


செய்முறைகளின்
முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரி வருகின்றனவா? அப்படி வந்தால் அவை
நம் தோராயக்கருத்தோடு ஒத்துபோகின்றனவா? என்று ஆராய்வது.


அப்படி பரிசோதனை முடிவுகள் நம்
கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்றால் வேறொரு தோராயக்கருத்தை முன்வைத்து
மறுபடியும் மேல பார்த்த முறைகளை பின்பற்றுவது.


பரிசோதனை முடிவுகள் நம் கருத்தோடு ஒத்து வந்துவிட்டால் வெவ்வேறு புதிய முறைகளைக்கொண்டு மேலும் பரிசோதிப்பது.


அப்படியும் சரியென்றால், நாம் கொண்டுவந்த முடிவுகளை கொண்டு ஒரு முடிவை எட்டுவது.



6. கடைசியாக,நம்முடைய முடிவுகளை அறிவியல் கூட்டங்களிலோ
அல்லது அறிவியல் இதழ்களிலோ பிரசுரிப்பது/வெளியுடுவது...(Communicate your
results by publishing your report in a scientific Journal or in a
Scientific meeting)


இவைதான் நாம் இன்று பயன்படுத்தும்
அறிவியல் அணுகுமுறைகள். இப்படி நேர்த்தியாக நம் ஆராய்ச்சியை மேற்கொண்டால்
நாம் பெறும் பயன்களும் தெளிவானதாக இருக்கும். இந்த முறைகளை பின்பற்றிவரும்
அறிவியல் ஆராய்ச்சிகளைத்தான் இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது.


கிரேக்கர்கள் அறிவியலில்
குறிப்பிடத்தக்க செயல்களை செய்திருந்தாலும் அவற்றை இன்றைய அறிவியலாளர்கள்,
நவீன அறிவியலில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் (Today's Scientists call
Greek period as pre-scientific).


இவற்றுக்கு அவர்கள் கூறும்
காரணங்கள், கிரேக்கர்கள் என்ன தான் புதிய முறைகளை யோசித்திருந்தாலும்
அவற்றை தெளிவாக நடைமுறை படுத்தவில்லை. அதற்கு காரணம் அவர்கள் அறிவியலுக்கான
அணுகுமுறைகளை பின்பற்றவில்லை. மேலும் அவர்களுக்கு இதுப்பற்றிய
யோசனையும் கிடையாது என்பதுதான்.


கிரேக்கர்கள் நேர்த்தியான
அணுகுமுறைகளை பின்பற்றாதானாலேயே அவர்களுடைய பல எண்ணங்கள் பின்னர்
அறிவியலுக்கு ஒத்துவராதவை என்று விலக்கப்பட்டதாக அறிவியலாளர்கள்
கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் இங்குதான் தனித்து நின்றனர். அவர்களுடைய எண்ணங்களை அவர்கள் செயல் முறைப்படுத்திய விதம்தான் இன்றைய அறிவியலுக்கு முன்னோடி.
நாம் மேலே கண்ட அறிவியல் அணுகுமுறைகளை உலகிற்கு தெள்ளத்தெளிவாக எடுத்து
கூறியதும் அவர்கள்தான்.இந்த அடிப்படையை உலகிற்கு முதன்முதலில்
அறிமுகப்படுத்தியதால்தான் முஸ்லிம்களை இன்றைய அறிவியல் உலகம் வானார
புகழ்கிறது. இந்த அடிப்படை தான் பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகவும் இருந்தது/இருக்கிறது.


முஸ்லிம்களின் பெரும்பாலான
ஆய்வுகள் நன்கு சிந்திக்கப்பட்டு, வரைமுறைகள் வகுக்கப்பட்டு, கவனமாக
கண்காணிக்கப்பட்டு, பல செய்முறைகள் செய்யப்பட்டு, முடிவுகள் நன்கு
ஆராயப்பட்டு, ஆராயப்பட்ட முடிவுகள் தெளிவாக புத்தகங்களில் எழுதப்பட்டு
வெளிவந்தன.



இதிலுள்ள மிகப் பெரும் பயன்
என்னவென்றால், அவர்களுடைய நூல்களை எதிர்காலத்தில் படிப்பவர்கள்,
முஸ்லிம்கள் செய்த செய்முறைகளை தாங்களும் செய்து அவர்களுடைய ஆய்வுகளை
சரிபார்த்துக் கொள்ளலாம்
, அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில் தங்களுடைய ஆய்வுகளை இந்த நூல்களை அடிப்படையாக கொண்டு முன்னேற்றி செல்லலாம்.


இதனாலேயே நவீன அறிவியல் முஸ்லிம்களிடத்திலிருந்து தான் துவங்கியது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
"இன்றைய
நம் அறிவியல், அரேபியர்களுக்கு பட்டிருக்கும் கடனென்பது அவர்களுடைய
அதிசயத்தக்க கண்டுபிடிப்புகளிலோ அல்லது புரட்சிகர கோட்பாடுகளிலோ இல்லை,
அதைவிட மேலாக அரேபிய கலாச்சாரத்துக்கே மிகவும் கடன்பட்டுள்ளது.
கிரேக்கர்கள் கோட்பாடுகளை முறைப்படுத்தினார்கள், பரவலாக்கினார்கள். ஆனால்
அவற்றை முறையான ஆய்வோ, கண்காணிப்போ, பரிசோதனைகளோ கொண்டு
உறுதி செய்வதெல்லாம் அவர்களுக்கு அந்நியமானது.
அந்த புத்துணர்ச்சியையும், முறைகளையும் ஐரோப்பிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது அரேபியர்கள்தான்" --- (Extract from original quote of) Robert Briffault in his book The Making of Humanity.
"The
debt of our science to that of the Arabs does not consist in startling
discoveries or revolutionary theories; science owes a great deal more to
Arab culture, it owes its existence.
The
ancient world was, as we saw, pre- scientific. The astronomy and
mathematics of the Greeks were a foreign importation never thoroughly
acclimatized in Greek culture. The Greeks systematized, generalized and
theorized, but the patient ways of investigation, the accumulation of
positive knowledge, the minute methods of science, detailed and
prolonged observation, experimental inquiry, were altogether alien to
the Greek temperament....
What we call science arose in Europe
as a result of a new spirit of inquiry, of new methods of
investigation, of the method of experiment, observation, measurement, of
the development of mathematics in a form unknown to the Greeks. That
spirit and those methods were introduced into the European world by the
Arabs."
--- Robert Briffault in his book The Making of Humanity.

முஸ்லிம்களின் ஆய்வுகளுக்கு பெரும் உதவியை இருந்தது அவர்களுடைய ஒரு புரட்சிகர எண்ணம்தான், அது கணிதத்தை அறிவியலில் முழுமையாக பயன்படுத்தியது. இந்த ஒரு எண்ணம்தான் அறிவியல் அணுகுமுறைகளை அவர்கள் உருவாக்க காரணமாய் இருந்தது. சாதகமான முடிவுகளை எட்டவும் துணையாய் இருந்தது.


இரு உதாரணங்களை மேற்கோள் காட்டினால் முஸ்லிம்களின் அறிவியல் அணுகுமுறைகள் எப்படி இருந்தன என்பதை விளக்கி விடலாம்.


1. ஒளியியல் (Optics)


இயற்பியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான இதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? 8
இந்த
துறையில் சிறந்து விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் அபு அலி அல் ஹசன்
இப்ன் அல் ஹசன் இப்ன் அல் ஹய்தம் (Abu Ali Al Hasan Ibn Al Hasan Ibn Al
Haytham, 965 - 1039) அவர்கள். உலகின் முதல் விஞ்ஞானி என்றும், ஒளிவியலின்
தந்தை என்றும், நவீன அறிவியல் இவரிடமிருந்து தான் துவங்கியது என்றும்
அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
"உலகின் முதல் விஞ்ஞானி இப்ன் அல் ஹய்தம் அவர்கள்" --- Bradley Steffens.
Ibn Al Haytham is the First Scientist --- Bradley Steffens.
நாம்
ஒரு பொருளை பார்க்கிறோமென்றால் அதற்கு காரணம், அந்த பொருளில் இருந்து
வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்களை எட்டுவதுதான் என்பதை கண்டுபிடித்தவர் இப்ன்
அல் ஹய்தம் தான். இது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு.


ஏனென்றால் அன்றைய உலகம் எப்படி
நம்பிக்கொண்டிருந்தது என்றால், நாம் ஒரு பொருளை பார்க்கிறோமென்றால் அதற்கு
காரணம், நம் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் அந்த
பொருளை எட்டுவதுதான் என்பது.


இது அறிவியலுக்கு புறம்பானது. ஆக, Ptolemy, Euclid மற்றும் Aristotle போன்றவர்களுடைய எண்ணங்களை உடைத்தெறிந்தார்.


அவர் அந்த முடிவை எட்ட அணுகியமுறை தான் இன்றைய அணுகுமுறைகளுக்கு முன்னோடி.


முதலில், அவர் தன்னைத் தானே கேட்டுக்கொண்ட கேள்விகள் (Ask a Question) இவைதான்...



  • கண்களில் இருந்து
    ஒளிக்கதிர்கள் சென்று பொருளை அடைவதால் நாம் பார்க்கிறோமென்றால், நாம்
    பார்க்க கூடிய அனைத்தும் ஒரே விளைவைத்தானே தரவேண்டும்? ஆனால் நாம் சூரியனை
    பார்க்கும்போது கண் எரிச்சல் வருகிறது, அதே சமயம் ஒரு எரியும்
    மெழுகுவர்த்தியை பார்க்கும்போது கண் எரிச்சல் ஏற்படுவது இல்லையே. இது ஏன்?


  • கண்களில் இருந்து
    ஒளிக்கதிர்கள் சென்று பொருளை அடைவதால் நாம் பார்க்கிறோமென்றால்,
    இரவில் தூரத்தில் இருக்கும் பொருள்களை நாம் எப்படி பார்க்கமுடிகிறது?
    எடுத்துக்காட்டாக, நாம் நிலவை பார்க்கிறோமென்றால் நம் கண்களில் இருந்து
    ஒளிக்கதிர்கள் அவ்வளவு தூரமா பயணம் செய்கின்றன?
நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? From+eyes+to+subjectநாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? From+subject+to+eyes


இதுப்போன்ற கேள்விகளை தமக்குள்
கேட்டுக்கொண்டு, அதற்கான பதில்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு (Doing
Background research), அந்த பதில்களை வைத்து ஒரு தோராயக்கருத்தை
உருவாக்கிக்கொண்டார் (Construct a Hypothesis).


அவருடைய தோராயக்கணக்கு இதுதான்,

  • கிரேக்கர்களின் ஒளி சம்பந்தமான புரிந்துணர்வு அறிவியலுக்கு ஒத்துவராது,
  • நாம் ஒரு பொருளை காண்கிறோமென்றால் நிச்சயமாக நம் கண்களில் இருந்து அந்த பொருளுக்கு செல்லும் ஒளிக்கதிர்களால் அல்ல,
  • அந்த பொருளில் இருந்து நம் கண்களுக்கு வரும் ஒளிக்கதிர்களால் தான்.


அடுத்து, அவருடைய தோராயக்கருத்தை
உறுதி செய்ய செய்முறைகளில் இறங்கினார் (Test your Hypothesis by doing a
Experiment). பலவிதமான செய்முறைகளை கையாண்டார். இங்கு தான் கணிதத்தை
பயன்படுத்தினார். ஒவ்வொரு செய்முறைகளின் முடிவையும் குறிப்பெடுத்து,
அடுத்தடுத்த பரிசோதனைகளின் முடிவுகளும் சரியாக, ஒரேச்சீராக வருகின்றனவா
என்று கவனித்தார் (Analyse Your data and Draw conclusion).


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Ibn-al-haytham-00


பின்னர் அவர் பின்பற்றிய அனைத்து
முறைகளையும், உத்திகளையும், முடிவுகளையும் தெள்ளத்தெளிவாக எழுதி வைத்தார்.
ஒளியியல் பற்றி அவர் எழுதிய நூல், கிதாப் அல் மனாசிர் (Kitab Al Manazir, Book of Optics) என்பதாகும்.


இன்றும் இவருடைய நூலை படிப்பவர்கள் அவர் கையாண்ட செய்முறைகளை தாங்களும் செய்து பார்த்து முடிவுகளை உறுதிப்படுத்தி கொள்ளலாம். இதுதான் அன்றைய/இன்றைய அறியலாளர்களை திக்குமுக்காட செய்தது/செய்கிறது.


இப்படி ஒரு தெளிவான அணுகுமுறைதான்
ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். இந்த தெளிவான அணுகுமுறை தான் இன்று நாம்
பார்க்க கூடிய அனைத்து அறிவியல் மாற்றங்களுக்கும் காரணம்.


இதுமட்டுமல்ல, இப்ன் அல் ஹய்தம்
அவர்கள், ஒளிவியலின் பல்வேறு அங்கங்களையும் ஆராய்ந்து பல்வேறு செய்முறைகள்
செய்து பதிவேற்றினார். உதாரணத்துக்கு



  • ஒளி நேர்க்கோட்டில் பயணம் மேற்கொள்கிறது என்பதாகட்டும்,
  • ஒளிவியலின் முக்கிய அங்கங்களான பிரதிபளிப்பு (Refection), ஒளிவிலகல் (Refraction) ஆகட்டும்.
நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Reflection_graphic


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Light-refraction


என ஒளிவியலின் பல்வேறு அங்கங்களையும், செய்முறைகளுக்கும் கணிதமுறைக்கும் உட்படுத்தி முடிவுகளை கொண்டுவந்தார்.


இவர் துவக்கிவைத்த இந்த அறிவியல்
அணுகுமுறையை பல்வேறு முஸ்லிம் விஞ்ஞானிகளும் பல்வேறு
துறைகளில் பின்பற்றினர், தெளிவான முடிவுகளை கொண்டுவந்தனர். அவர்களில்
சிலர்,



  • அபு மூஸா ஜபீர் இப்ன் ஹய்யான் அல் அஸ்டி (Abu Musa Jabir Ibn Hayyan Al Azdi,), வேதியியல் (Chemistry),
  • முஹம்மது அல் புஹாரி (Muhammed Al Bukhari), வரலாறு மற்றும் ஹதித்களை தொகுத்த முறை (Histroy and compilation of Hadith),
  • அல் கிண்டி (Al-Kindi), புவி விஞ்ஞானம் (Earth Sciences).
  • அபு அலி இப்ன் சினா (Abu Ali Ibn Sina), மருத்துவம் (Medicine)
  • அல் பிருணி (Al Biruni), வானசாஸ்த்திரம் மற்றும் இயந்திரவியல் (Astronomy and Mechanics)
  • அப்டல் மாலிக் இப்ன் ஜுஹ்ர் (Abdal Malik Ibn Juhr), அறுவை சிகிச்சை (surgery)
  • இப்ன் கல்துன் (Ibn Khaldun), சமூக அறிவியல் (Social Science)


இப்படி முஸ்லிம்கள் அறிவியலில் சிறந்து விளங்கியதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் அறிவியலை அணுகிய முறை தான்.
"என்னை பொறுத்தவரை, அறிவியல் அணுகுமுறை தான், மனித குலத்தால் கண்டுபிடிக்கப் பட்டதிலேயே மிகச் சிறந்த யுக்தி.
வேறெந்த யுக்தியின் மூலமாகவும் அகிலம் எப்படி வேலை செய்கிறது என்றோ அல்லது
வேறு பல எப்படி வேலை செய்கின்றன என்றோ சொல்ல முடியாது. அதனால், நீங்கள்
அடுத்த முறை பயணம் மேற்க்கொள்ளும்போதோ அல்லது கைப்பேசியில் பேசும்போதோ
அல்லது தீவிரமான நோய்க்கு மருத்துவம் பார்க்கும்போதோ, இப்ன் அல் ஹய்தம்,
இப்ன் சினா, அல் பிருணி மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்களை நினைவில்
கொள்ளுங்கள். அவர்களால் அனைத்திற்கும் பதில் சொல்ல முடியாமல்
போயிருக்கலாம், ஆனால் நிச்சயமாக எப்படி சரியான கேள்வியை கேட்பது என்று நமக்கு கற்றுக் கொடுத்தது அவர்கள்தான்"
--- (Extract from the speech of) Prof. Jim Alkhalili, Department of Physics, University of Surrey.
"The Scientific Method, is I believe, the single most important idea the human race is ever come up with.
There is no other strategy that tells us how to find out how the
universe works and other things. So the next time you travel or you use a
mobile phone, or you get vaccinated against a deadly disease, remember
Ibn Al Haytham, Ibn sina, Al Biruni and countless other Islamic scholars
who struggled to make sense of the universe using crude mirrors and
astrolabes, they didn't get all the right answers, but they did teach us how to ask the right question"
--- Prof. Jim Alkhalili, Department of Physics, University of Surrey.
இதுவரை
நாம் மேலே பார்த்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சர்யத்தையும், வியப்பையும்
தந்திருக்குமானால், இப்போது நான் சொல்லப்போகும் மற்றொரு வியப்பான
தகவலுக்கும் தயாராகி கொள்ளுங்கள்.


2. புவிச்சுற்றளவு (Circumference of Earth)


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? 220px-Al-Biruni_Afghan_stamp
புவிச் சுற்றளவை முதன் முதலில் துல்லியமாக கணக்கிட்டது அல்-பிருணி (973-1048) அவர்கள்.


அவர் கணக்கிட்டு சொன்ன எண்ணுக்கும் இன்றைய எண்ணுக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?


ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான் ( < 1%).



  • இன்றைய ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவரும் புவிச்சுற்றளவு: 24,859.82 மைல்கள் (40,008 Kms).
  • அல்-பிருணி அவர்கள் கணக்கிட்ட புவிச்சுற்றளவு: 24,778.24 மைல்கள் (39,876.7 Kms).


அல்-பிருணி அவர்கள் இதனை கணக்கிட
கையாண்ட அறிவியல் அணுகுமுறைகளும், யுக்திகளும், கருவிகளும், கணிதத்தை (He
used Algebra and Trigonometry to find out the circumference of Earth)
வான சாஸ்த்திரத்தில் உபயோகப்படுத்திய நேர்த்தியும் என்னை மிகவும் வியப்பில்
ஆழ்த்தின.

அல்-பிருணி அவர்கள் பூமியை ஒரு பூரணமான உருண்டை (He assumed Earth as a
perfect Sphere) என்றே எண்ணினார், இன்று நம்மிடம் இருக்கக்கூடிய தகவலின்
படி, பூமி உருண்டை தானென்றாலும், அது அதன் பூமத்திய ரேகையில் (Equator)
சிறிது விரிவதாக அறிகிறோம் (Today, We know that Earth bulges out at its
Equator). அதனால் தான் அவரது கண்டுபிடிப்பிற்கும் இன்றைய
கண்டுபிடிப்பிற்கும் ஒரு சிறு வித்தியாசம்.

இங்கு நிச்சயமாக உங்களுக்கு ஒரு குழப்பம் வந்திருக்கும், என்ன...பூமி
உருண்டை என்று முஸ்லிம்கள் நினைத்தனரா? கலீலியோ (சுமார் 500 ஆண்டுகளுக்கு
பின்னர்) தானே பூமி உருண்டை என்று சொன்னதாக படித்திருக்கிறோம்?

உண்மைதான், ஆனால் இதைப்பற்றி நான் இன்னும் தெளிவாக ஆராயவில்லை. இப்போதைய
என்னுடைய எண்ணம் என்னவென்றால் கலீலியோ அவர்கள் உலகம் உருண்டை என்பதற்கு
முஸ்லிம்களை விட வலிமையான ஆதாரங்களை முன்வைத்தார் என்பது. முஸ்லிம்கள் பூமி
உருண்டை என்று சொன்னது அவர்களது ஒரு ஆராய்ச்சியை வைத்துதான்.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Al-biruni+artrolabe


இறைவன் நாடினால், எதிர்காலத்தில்
துறை வாரியாக எழுதும்போது அல்-பிருணி அவர்கள் பயன்படுத்திய யுக்திகளை
பற்றியும், கருவிகளை பற்றியும், பூமி உருண்டை என்று எப்படி எண்ணினார்
என்பது பற்றியும் விவரிக்கிறேன்.


அல்-பிருணி அவர்கள் துல்லியமாக புவிச்சுற்றளவை கணக்கிட காரணம் அவர் அறிவியலை அணுகிய முறைதான்.


இதையெல்லாம் பற்றி பேசும்போது
நாம் ஒன்றை நிச்சயமாக மறக்கக்கூடாது. அது, இஸ்லாமிய அறிஞர்களின் இந்த
சாதனைகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருந்தது இறைவேதமும், நபிமொழியும் தான்.
ஆராய்ந்து, சிந்தித்து செயல்படுங்கள் என்ற இறைவரிகளும், சீனாவிற்கு
சென்றாவது கல்வியை தேடிக்கொள்ளுங்கள் என்பது போன்ற நபி மொழிகளும்தான்.


இந்த தொடரில் நாம் பார்த்த
அனைத்து விஞ்ஞானிகளும் இறைநேசர்கள், நல்லடியார்கள். எந்த அளவிற்கு என்றால்,
ஆய்வுக்காக மலை உச்சியில் ஆய்வுக்கூடம் அமைத்தாலும், அதில் ஒரு சிறிய
மசூதி தனியே இருக்குமாறு பார்த்துக்கொண்டவர்கள்.



முஸ்லிகளின் இந்த ஆய்வுகளுக்கு
பின்னணியில் குர்ஆனும், சுன்னாவும் இருந்ததாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள்
தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.



  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?


இனி இதுப்போன்ற கேள்விகளை நம் முஸ்லிமல்லாத சில சகோதரர்கள் கேட்டு அவர்களது நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.



  • இஸ்லாமிய அறிஞர்களின்
    பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்ற
    சந்தேகம் வருமளவு கணிதத்தில் சாதனைகள் புரிந்தவர்கள் முஸ்லிம்கள்.



  • இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருக்கக்கூடிய அறிவியல் அணுகுமுறைகளை உலகிற்கு கற்பித்தவர்கள் முஸ்லிம்கள்.


  • இன்ஷா அல்லாஹ், இறைவன் வாய்ப்பளித்தால் இந்த இடத்தை எதிர்க்காலத்தில் மேலும் நீடிப்போம்...

"நவீன
அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra),
அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து
வந்தவைதான், இவைகள் அவர்களது
கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன.அல்ஜீப்ரா
இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள்
இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC
"Its
legacy is tangible, with terms like algebra, algorithm and alkali all
being Arabic in origin and at the very heart of modern science - there
would be no modern mathematics or physics without algebra, no computers
without algorithms and no chemistry without alkalis"
--- BBC

இந்த பதிவை முடிப்பதற்கு முன் ஒரு
சிறு தகவல்...இஸ்லாமிய ஆட்சி 1492 ல் ஸ்பெயினில் வீழ்ந்தபிறகு, 1499 ல்
ஸ்பெயினில் இருந்த நூலகங்களில் இருந்த அரபியில் எழுதப்படிருந்த பெரும்பாலான
புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அவை லட்சகணக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆக, எத்தனை வெளிவராத அறிவியல் உண்மைகள் அப்போது அழிக்க பட்டனவோ, இறைவனே
அறிவான்.



இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி நல்குவானாக...ஆமின்

இறைவனே எல்லாம் அறிந்தவன்....


My Sincere Thanks to:

1. Br.Shabir Ally - President, Islamic Information & Dawah Centre International, Toronto, Canada.
2. Science Buddies.
3. British Broadcasting Corporation (BBC).

References:

1. Tamil meanings for scientific terms taken from online Tamil dictionary site - tamildictdotcom
2. The Scientific Method - Science Buddies.
3. Islam and Science - A three series BBC documentary broadcasted on Jan, 2009.
4. Islam: A thousand years of faith and power: Jonathan Bloom and Sheila Blair.
5. Lost history: The enduring legacy of Muslim Scientists, Thinkers and Artists - Michael H.Morgan
6. Ibn Al-Haytham: First scientist - Bradley Steffens.
7. Al Biruni: Master Astronomer and Muslim Scholar of the Eleventh century - Bill Scheppler
8. Circumference of Earth Information taken from aboutdotcom.
9. All discoveries are made by Muslim Scientists - Daily Times dated Nov 6, 2007.
10. Science in Medieval Islam - Wikipedia
11. Muslims Contributions - Net Muslims
12. Ibn Al Haytham: Scientist who first explained optics and the Laws of refraction - Suite101 dated Nov 24,2009.

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹ்மத் அ
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Empty நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? - III

Post by முஸ்லிம் Sat Jan 21, 2012 8:37 pm

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?
- III






  • குர்ஆனில் ஏகப்பட்ட அறிவியல் உண்மைகள் வைத்திருக்கும்
    உங்களிடம் ஏன் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நிகழவில்லை?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த தொடர் பதிவுகள். (நான் மேலே குறிப்பிட்டுள்ள
வாசகம் நல்லடியார் (http://athusaridotblogspotdotcom) அவர்களது தளத்தில் ஒரு
சகோதரர் கேட்டது)


இந்த பதிவிற்கு தேவைப்படும் என்பதால் மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு முன்னோட்டம்,
இதை நாம் மேலே பார்த்த கேள்விக்கு பதிலாகவும் கொள்ளலாம்.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?



  • முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகள் இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும்
    என்ற சந்தேகம் வருமளவு கணிதத்தில் சாதனைகள் புரிந்தவர்கள் முஸ்லிம்கள்.



  • இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருக்கக்கூடிய கண்டுபிடிப்பான
    அறிவியல் அணுகுமுறைகளை
    (The Scientific Method) உலகிற்கு கற்பித்தவர்கள் முஸ்லிம்கள்.




இந்த பட்டியலை இந்த பதிவின் மூலம் மேலும் நீட்டிப்போம், இன்ஷா அல்லாஹ். இந்த பதிவில்
நாம் பார்க்கப்போகின்ற துறை வேதியியல் (Chemistry).


வேதியியல் (Chemistry):


முதல் செய்தி முதலில், இன்றைய வேதியியலை ஒரு அறிவியலாக கிட்டத்தட்ட முழுமையாக உருவாக்கியது
முஸ்லிம்கள்தான்.


"வேதியியலை ஒரு அறிவியலாக ஏறக்குறைய முழுமையாக உருவாக்கியது முஸ்லிம்கள்தான்"
--- Will Durant in his book "The Story of Civilization".

"Chemistry as a science was almost created by the Muslims" --- Will Durant
in his book "The Story of Civilization"

உடுத்தும் உடையிலிருந்து உட்கொள்ளும் மருந்து வரை முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த துறையில்
முஸ்லிம்களின் பங்கு முதன்மையானது.

இன்று இந்த துறையில் பயன்படுத்தப்படும் பல யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் முஸ்லிம்கள்தான்.
இந்த துறையைப் பற்றி பார்க்கும் போது நிச்சயம் ஐரோப்பியர்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கு செய்த
அநீதியை குறிப்பிட்டாக வேண்டும்.


வேதியியலை பற்றி படிப்பவர்கள் நிச்சயம் "AlChemy" என்ற வார்த்தைக்கு குறுக்கே வருவார்கள்.



  • "Alchemy" என்றால் என்ன?
  • இதற்கும் "Chemistry"கும் என்ன வித்தியாசம்?


வித்தியாசம் என்னவென்று விளக்குவது சுலபம்தான். அதாவது, ஐரோப்பியர்களின் பார்வையில்,
"Alchemy" என்றால் பதினேழாம் நூற்றாண்டுவரை உள்ள வேதியியல். இன்னும் தெளிவாக சொல்ல
வேண்டுமானால் இரண்டாம் தர, மூன்றாம் தர வேதியியல்.

"Chemistry" என்பது தற்காலத்திய, முதல் தர நவீன வேதியியல். அவ்வளவுதான்.


இந்த "Alchemy" யிலேயே, கிரேக்க "Alchemy", இஸ்லாமிய "Alchemy" என்ற பிரிவினை வேறு.
கிரேக்கர்களின் "Alchemy" முற்றிலும் காலம் கடந்த ஒன்றாம், முஸ்லிம்களின் "Alchemy"
இன்றைய நவீன வேதியியலுக்கு உறுதுணையாக இருந்த ஒன்றாம். சுருக்கமாக சொல்லப்போனால் இரண்டாம் தர வேதியியலான "AlChemy" முஸ்லிம்களுடையது, முதல்தர வேதியியலான
"Chemistry" ஐரோப்பியர்களுடையது. இது நிச்சயமாக பாரபட்சமான ஒன்று.


"Alchemy" என்ற சொல்லானது "Chemia (கிமியா)" என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது.
இந்த அரபி வார்த்தை எகிப்தியர் மற்றும் கிரேக்கர்களிடமிருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு
"தனிமங்களின் தன்மையை மாற்றுதல் (Transmutation of Elements)" என்று பொருள் (Some others
have the opinion that "Chemia" in Greek means Black).

அரேபியர்கள் எப்போதும் போல் "அல்" என்ற வார்த்தையை முன்னே சேர்த்து "Alchemia" என்று
அழைக்க ஆரம்பித்தனர். இந்த "அல்" என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் "the" என்ற வார்த்தையைப் பொருளாகக் கொள்ளலாம்.

ஐரோப்பியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் இந்த "Alchemia" என்ற வார்த்தையிலிருந்து "Chemia"
என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு "chemistry" என்ற வார்த்தையை கொண்டுவந்தனர். அதுமட்டுமல்லாமல்
அதற்கு முந்தைய வேதியியலை குறிக்க "Alchemy" என்ற வார்த்தையையும் உருவாக்கினர்.

இங்குதான் நீங்கள் ஒன்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். ஐரோப்பியர்கள் "Alchemia" என்ற
வார்த்தையை மொழிப்பெயர்க்கும்போது "AlChemy" என்று மொழிப்பெயர்த்தனர், அதுமட்டுமல்லாமல்
"chemistry" என்ற ஒரு புது வார்த்தையையும் உருவாக்கினர்.

ஒரே சொல்லுக்கு இரண்டு வார்த்தைகளா? "AlChemia" என்பது "The Chemistry" (chemia means
"chemistry" and Al means "the") என்றுதானே மாறியிருக்க வேண்டும், ஏன் Alchemy என்று
மொழிப்பெயர்த்தார்கள்? ஏன் இரண்டு சொற்களை உருவாக்கி ஒன்று முஸ்லிம்கள் வரையிலானது,
மற்றொன்று நவீனமானது என்று பிரிக்கவேண்டும்.

என்ன உள்நோக்கம்?

முஸ்லிம்கள் கணிதத்தை குறிக்க கூடத்தான் "Al-Riyadiyat" என்ற சொல்லைப்
பயன்படுத்தினர். அதற்காக "Al-Riyadiyat" என்பது முஸ்லிம்களுக்கானது, "Mathematics"
என்பது ஐரோப்பியர்களுக்கானது என்றா பிரித்து விட்டார்கள்? எல்லாவற்றையும் கணிதம் என்ற
பொது பிரிவின் கீழ்தானே கொண்டு வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் மாறித்தானே வருகிறது. அதற்காக
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த துறைக்கு ஒவ்வொரு பெயர் வைக்கமுடியுமா என்ன?


இஸ்லாமிய வேதியியலை பற்றி பார்க்கும் முன் ஒரு முக்கிய விஷயத்தை எழுப்ப வேண்டியது அவசியமாகிறது.
அது "Chemistry" என்று பயன்படுத்துவதற்கு பதிலாக "Alchemy" என்று பயன்படுத்துவது பற்றியது.
இது மிக அதிக மக்களை முட்டாளாக்கக் கூடிய வரலாற்று பிழைக்கு மற்றுமொரு
சான்று. இந்த மக்களுக்கு, சில அறிஞர்கள் வரலாற்றை தவறாக காட்ட
எந்த அளவிற்கும் இறங்குவார்கள் என்பது பற்றிய புரிதல் கிடையாது. இஸ்லாமிய அறிவியல்
சார்பான தகவல்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் --- Foundation for Science
Technology and Civilization, In its release "Review on Muslim Contribution to Chemistry",
Page Number: 2.

"Before addressing the subject of Islamic Chemistry, however, one crucial matter
needs to be raised. It concerns the use of the word Alchemy instead of Chemistry.
This is another instance of Historic corruption fooling so many who
have so perception of the depths some scholarship can descend to
in order to convey distorted images of aspects of history, such as that of Islamic
Science" --- Foundation for Science Technology and Civilization, In its
release "Review on Muslim Contribution to Chemistry", Page Number: 2.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் மொழிப்பெயர்ப்பில் செய்த பிழையை பின்னர் வந்தவர்களும்
பின்பற்றினர். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. முன்புபோல "Alchemy" மற்றும் "chemistry"யை
வித்தியாசமாக பார்க்காமல் ஒன்றாகவே பார்க்கத் துவங்கியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான
முன்னேற்றம். அல்ஹம்துலில்லாஹ்...

இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமென்றால், நாம் வேதியியலில் நம்முடைய
பங்களிப்பை பற்றி கூறும்போது, யாரும் வந்து "இல்லை இல்லை, உங்களுடைய பங்களிப்பு "Alchemy"
யில் தான், "chemistry" யில் இல்லை" என்று சொன்னால் அவர்களுக்கு தெளிவாக பதிலளிக்க
வேண்டும் என்பதற்க்காகத்தான்.

நவீன வேதியியல் என்பது முஸ்லிம்களிடமிருந்து தான் ஆரம்பித்தது. அதற்கு இன்றளவும் நாம்
பயன்படுத்தக்கூடிய வேதியியல் உக்திகள் தான் சான்று. இன்ஷா அல்லாஹ், அதைத்தான்
மேற்கொண்டு பார்க்கப்போகிறோம்.


1. இன்று அறிவியலில் இன்றியமையாததாய் இருக்கக்கூடிய ஒரு சொல் "அல்கலி
(Alkali)", இது வேதியியலில் பல்வேறு துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அல்கலி
என்ற வார்த்தை, அல்காலி (Al-Qaly) என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது தான். அல்காலி
என்பதற்கு சாம்பல் என்று பொருள். ஒரு வகை செடிகளை எரித்து அதனுடைய சாம்பலில் இருந்து
அல்கலி உருவாக்கப்பட்டதால் இதற்கு இப்படியொரு பெயர். "Alkaline" (eg. Alkaline Battery)
என்றெல்லாம் தினமும் பார்க்கிறோமல்லவா அதெல்லாம் அல்கலி என்பதிலிருந்து வந்ததுதான்.

சரி, இந்த அல்கலி என்ற பொருளால் என்ன உபயோகம்?,

இது இல்லையென்றால் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இல்லை.


"அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC

"There would be no Chemistry without Alkali" --- BBC

இந்த அல்கலி, தண்ணீரில் கரையக்கூடிய தன்மை உடையது. உதாரணத்துக்கு, இது சோப்பு
மற்றும் வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. எண்ணிப் பாருங்கள்,
நாம் சோப்பை உபயோகப்படுத்தும் போது கரைகிறதல்லவா, அது இந்த அல்கலியால் தான். அதுமட்டுமல்லாமல்,
இந்த அல்கலியானது கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய தன்மை உடையது.


An Alkali is a base that is Soluble in water and fights against Bacteria.

ஆக, இந்த அல்கலி என்ற இன்றியமையாத பொருளை முழுமையாக, மனித குலத்திற்கு உபயோகப்படும்
அளவிற்கு கொண்டு வந்தது முஸ்லிம்கள்தான்.


2. இன்று நாம் பயன்படுத்தக்கூடிய சோப்பு இருக்கிறதல்லவா? இதனுடைய பார்முலாவை
உலகிற்கு சொன்னவர்கள் நாம்தான்.

உலகில் முதன்முதலில் சோப்பு எப்படி உருவாக்க வேண்டும் என்ற செயல் விவரிப்பு (Description),
முஸ்லிம்களுடைய பனிரெண்டாம் நூற்றாண்டு நூல்களில் காணக் கிடைக்கிறது.


அதாவது, இன்றைய சோப்பு எப்படி தயாரிக்கப் படுகிறது என்றால், sodium or potassium
salts, common oils or fats, alkaline solution, aromatics என்று இவையனைத்தையும் கலந்து
தயாரிக்கப்படுகிறது.இந்த முறை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்றால் முஸ்லிம்களிடமிருந்து
தான்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், சோப்பு என்றால் கட்டி வடிவிலானது (Bar or solid)
மற்றும் திரவம் என்று இருவகையையும் சேர்ந்துக் கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு ஷாம்பூ
(shampoo) மற்றும் திடமான சோப்புக்கள் (Bar Soap).

முஸ்லிம்கள் அல்கலி தயாரிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்ததால் அதையும், (சோப்புக்கு
வழுக்கும் தன்மையை கொடுக்கக்கூடிய Vegetable) எண்ணையையும், வாசனையைக் கொடுக்ககூடிய
வாசனை திரவியங்களையும் (Aromatics), Potassium Hydroxide போன்றவற்றையும் சேர்த்து இன்றைய சோப்பு
தாயாரிக்கும் பார்முலாவை உருவாக்கினர். Bar Soap மற்றும் Shampoo என்று இரண்டையும்
உருவாக்கினர்.

ஒரு நகரத்தில் மட்டும் சுமார் 27 தரமான சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்ததாக
வரலாறு குறிப்பிடுகிறது. அப்போது மற்ற நகரங்களை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஆக, இன்று நாம் உபயோகிக்கக்கூடிய சோப்புகளை உலகிற்கு முதன்முதலில் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான்.


3. வேதியியலில் முக்கிய செயலாக்கங்கலான (Chemical Processes),



  • Pure Distillation (சுத்திகரிப்பு)
  • Dry Distillation (வறண்ட சுத்திகரிப்பு)
  • Steam Distillation (நீராவி சுத்திகரிப்பு)
  • Purification and Water Purification.
  • Oxidation
  • Ceration
  • Lavage
  • liquefaction
  • sublimation
  • Crystallisation
  • Evaporation
  • Filtration


என்று இவற்றை கண்டுபிடித்தது மற்றும் நேர்த்தி படுத்தியது (Mastery) முஸ்லிம்கள்
தான்.

"...developed in the hands of the Arabs into a widespread, organized passion
for research which led them to the invention of distillation, sublimation,
filtration...
" --- Robert Briffault in his book "The Making
of Humanity"


அவர்களின் ஆராய்ச்சி திறமைக்கு ஒரு சிறு உதாரணமாக இந்த சுத்திகரிப்பு (Pure Distillation)
உக்தியை எடுத்துக்கொள்வோம்.




  • சுத்திகரிப்பு என்றால் நீராவியாக்கி பின்னர் குளிர்விப்பது என்று அர்த்தம்.
  • Distillation is a process of Vaporaization and subsequent Condensation, as
    for Purification or concentration.



அவர்கள் வாசனை திரவியங்களை உருவாக்கிய முறையைப் பார்ப்போம்.
இதற்கு என்ன செய்தார்களென்றால், ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொண்டு, அதன்
மேல்பக்கத்தை ஒரு வளைந்த கண்ணாடி குழாயில் சொருகிவிட்டனர். குழாயின் மற்றொரு
முனையை மற்றுமொரு குடுவையின் உள்ளே விட்டுவிட்டனர்.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Distillation



இப்போது ரோஜா இதழ்களை அந்த குடுவையில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அதன் மேல்பக்கத்தை வளைந்த
குழாய் மூலம் மூடிவிட்டனர். பின்னர் குடுவையை சூடுபடுத்த துவங்கினர். அப்போது உருவாகும்
நீராவி, மேல்பக்கத்தில் உள்ள வளைந்த குழாயின் மூலம் கீழே உள்ள குடுவையை வந்து
அடையும். இப்போது அந்த நீராவி குளிர்ந்து தண்ணீரானவுடன் நுகர்ந்து பார்த்தோமானால் அதில்
ரோஜா மணம் கமழும். கிட்டத்தட்ட ஒரு ரோஜா வாசனை (Rose Cent) திரவியம் ரெடி.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Alembic



இந்த கருவிக்கு பெயர் "அளம்பிக்" என்பதாகும் (Alembic). நிச்சயம் நாம் இதை எங்கோ பார்த்த
ஞாபகம் வரும். எனக்கு பள்ளி காலங்களில் பார்த்ததாக ஞாபகம். இந்த அலம்பிக்கை பல்வேறு
பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களுடைய இப்படிப்பட்ட ஆய்வு முறைகள் தான் பின்னர் வந்த பலரையும் ஆச்சர்யத்தில்
ஆழ்த்தின. கிரேக்க, எகிப்திய முறைகள் போன்றதல்ல அவர்களுடைய முறை, மாறாக நன்கு
செய்முறைகள் செய்யப்பட்டு ஆராயப்பட்டவை (The Scientific Method). இன்றளவும் அவர்களுடைய
கண்டுபிடிப்புகள் நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு அவர்கள் அறிவியலை அணுகிய முறைதான்
காரணம் (The Secret behind Muslims' scientific Success is SCIENTIFIC METHOD).


நாம் மேலே பார்த்த "Steam Distillation" உக்தியை பயன்படுத்தி மண்ணெண்ணையை
கண்டுபிடித்தனர்.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Picture1





  • "Crude Oil" லிருந்து பெட்ரோலை கொண்டு வந்தார்கள்.
  • பெட்ரோலை முதலில் சுத்திகரித்து காட்டியதும் அவர்கள்தான்.
  • "Water Purification" உக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்குவது எப்படி என்று
    புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.


இப்படியாக பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தாங்கள்
பயன்படுத்திய கருவிகளை எப்படி உருவாக்குவது என்று விளக்கி புத்தகங்கள் எழுதி உள்ளனர்.
நிச்சயமாக இது ஒரு அற்புத பண்பு. தங்களுக்கு பின் வருபவர்கள் தாங்கள் என்ன செய்தோம்
என்பதை தெளிவாக, எளிதாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி செய்த பண்பான
செயல்.

நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சொன்னது போன்று, இதையெல்லாம் படிக்கப் படிக்க வியப்புதான்
மிஞ்சுகிறது. அல்ஹம்துலில்லாஹ்,எல்லாப் புகழும் இறைவனுக்கே...
ஆக,பல்வேறு முக்கிய வேதியியல் செயலாக்கங்களை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்தான்.




4. இன்றைய வேதியியலின் மிக முக்கிய பொருள்களான (Chemical Substances),


  • Ethanol
  • Lead Carbonate
  • Silver Nitrate
  • Potassium
  • Acetic Acid
  • Citric Acid
  • Nitric Acid
  • Sulphuric Acid
  • Hydro Chloric Acid
  • Tartaric Acid
  • Arsenic
  • Antimony........etc.,


என்று இதுபோல பலவற்றை முதன் முதலில் தனிமைப்படுத்தியது (Isolate) முஸ்லிம்கள்தான்.

5. கண்ணாடியின் வண்ணத்தை மாற்றிக் காட்டி புரட்சியை ஏற்ப்படுத்தியவர்கள்
அவர்கள். இதற்கு அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தது அவர்கள் கண்டுபிடித்த "Manganese
Salts" போன்ற வேதிப் பொருட்கள்.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Glass






கண்ணாடிகள் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான். இதற்கு பல
மாடிகள் உயரமுள்ள உலைகலங்களை (Several Storeys high Industrial furnaces) பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பலவிதமான நிறமிகள் (Pigments), சாயங்கள் (Dye), நிறங்களை (Colours) உருவாக்கினார்கள்.
இவைகளை பயன்படுத்தி கட்டிடங்களுக்கு அற்புதமான அழகு சேர்த்தார்கள். (They developed
several Colours, Pigments and Dyes using new alkalis and metals like lead and tin).

அதுமட்டுமல்லாமல், எழுத பயன்படுத்தப்படும் "மை"யில் (INK) பல வித மாற்றங்களை கொண்டுவந்தார்கள்.
பிரகாசமாய் இருக்கக்கூடியது, நீண்ட நாட்கள் நிலைக்கக்கூடியது, வண்ண மைகள் என்று
பல...

பின்ன இருக்காதா என்ன?, இந்த "Fountain Pen (Ink pen)" இருக்கிறதே, இதை கண்டுபிடித்தவர்கள்
அவர்கள் தானே...



6. நாம் மேலே பார்த்தவையெல்லாம் விட முக்கியமானது இது. வேதியியலை
பற்றி பார்க்கும்போது "Periodic Table" ளை பார்க்காமல் கட்டுரைகள் முற்றுப்பெறாது.
இன்றைய வேதியியலின் சென்டர் இதுதான்.


நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Periodic-table


இந்த "Periodic Table" உருவாக்குவதில் முதல் முயற்சியை கையாண்டவர்கள் முஸ்லிம்கள்தான்.
அவர்கள் தான் இதற்கு அடிப்படையை போட்டவர்கள்.

ஒரே தன்மையை உடைய வேதிப்பொருட்களை ஒவ்வொரு பகுதியாக பிரித்து வைப்பதுதான் "Periodic Table".
கிரேக்கர்களும் பிரித்து வைத்திருந்தார்கள், எப்படியென்றால் காற்று, நிலம், நெருப்பு
மற்றும் நீர் என்று. இது தத்துவ ரீதியாகத்தான் ஒத்துவருமே தவிர அறிவியல் ரீதியாக
பெருமளவு ஒத்துவராது.

ஆனால் முஸ்லிம்கள் என்ன செய்தார்களென்றால், இன்று எப்படி தனிமங்கள் பிரிக்கப்படுகின்றனவோ
அப்படி பிரித்தார்கள்.

உதாரணத்துக்கு, அவர்களிடம் உள்ள வேதிப்பொருட்களை எடுத்துக்கொண்டு, இவை தண்ணீரில்
கரையக்கூடியவை (Chemical Salts), இவை எரியக்கூடியவை, இவை வளையக்கூடியவை (metals) என்று
சுமார் ஆறு பிரிவாக பிரித்தார்கள்.

அவர்கள் அப்படிப் பிரித்த அந்த உக்திதான் இன்றைய "Periodic Table"லுக்கு அடிப்படை.

"I think with Al-Razi we start to see the first classification which really leads
on to further experimentation, the first step which allows people to start doing
rational work and so he really lies at the start of formal chemistry
which ultimately leads to periodic table" --- Dr.Andrea Sella, Chemist, University
College London.

ஆம், அவர்கள் செய்த அனைத்தும் சரி என்று சொல்லிவிடமுடியாது, இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராத
பலவற்றை முயன்றிருக்கிறார்கள்.ஆனால் முயன்றிருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.


7. முடிவாக இந்த துறையில் சிறந்து விளங்கிய சில முக்கிய அறிஞர்களை
பார்த்துவிடுவோம். இவர்கள் தான் நாம் மேல பார்த்த கண்டுபிடிப்புகளுக்கு மற்றும் வேதியியல்
முன்னேற்றங்களுக்கு காரணம்.


  • Jabir Ibn Hayyan (Father of Chemistry, Popularly known as Geber)
  • Muhammed Ibn Jakariya Al Razi
  • Ibn Sina (Popularly known as Avicenna)
  • Al-Kindi
  • Al-Biruni
  • Al-Khaldun
  • Al-Majriti
  • Nasir Al-Din Al-Tusi
  • Massawayh Al-Maridini
  • Ibn Al-Wafid
  • Ibn Badis
  • Abu'l-Qasim
  • Al Damir Al-Jildaki
  • Al-Tughra'i


மொத்தத்தில், எப்படி முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் கணிதத்துறை எப்படி இருந்திருக்கும்
என்ற சந்தேகம் வருகிறதோ, அதுபோல முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய வேதியியல்
எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகமும் வருகிறது.

"ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய உலகானது, கண்டுபிடிப்புகளும்
புதுமைகளும் நிகழ்த்தப்பட்ட பொற்காலம்" --- Claire Gemson, Glascow Science Centre

"...Golden age of Discovery and Innovation, which took place in the Islamic world
between seventh and 17th centuries" --- Claire Gemson, Glascow Science Centre

இவையெல்லாம் மறக்கப்/மறைக்கப்பட்டிருக்கின்றன.

"இஸ்லாமைப் பற்றி நிறைய தவறான எண்ணங்கள் மேற்குலகில் இருப்பது போன்று, இஸ்லாமிய
உலகிற்கு நம் கலாச்சாரமும், நாகரிகமும் பட்டிருக்கக்கூடிய கடன் பற்றிய அறியாமையும்
அதிகமாக இருக்கிறது. நம் வரலாறு தான் இந்த தோல்விக்கு காரணம். மத்திய ஆசியாவிலிருந்து
அட்லாண்டிக் கடற்கரைகள் வரையிலான இஸ்லாமிய உலகானது, அறிஞர்களையும் கல்வியாளர்களையும்
உருவாக்கிய ஒன்றாக இருந்தது. ஆனால் நாம் இஸ்லாமை மேற்குலகின் எதிரியாக, அந்நிய
கலாச்சாரமாக, சமுதாயமாக, நம்பிக்கை முறையாக பார்க்கிறபடியால் அதனுடைய அற்புதமான
பங்களிப்பை அலட்சியபடுத்தவோ அல்லது அழிக்கவோ முற்பட்டுவிட்டோம்"
--- இளவரசர் சார்லஸ்

"If there is much misunderstanding in the West about the nature of Islam, there
is also much ignorance about the debt our own culture and civilisation owe to the
Islamic world. It is a failure, which stems, I think, from the straight-jacket of
history, which we have inherited. The medieval Islamic world, from central Asia
to the shores of the
Atlantic
, was a world where scholars and men of learning flourished. But because we have
tended to see Islam as the enemy of the West, as an alien culture, society, and
system of belief, we have tended to ignore or erase its great relevance to our own
history." --- Prince Charles at a speech in Oxford University.

எவ்வளவு நாள் தான் உண்மையை மறைக்க முடியும்? வரலாறு மாற்றி எழுதப்படும் நாட்கள் தொலைவில்
இல்லை, இன்ஷா அல்லாஹ். ஏனென்றால் இன்று இதைப்பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று
வலியுறுத்தி வருகின்றனர்.

நாம் மேலே பார்த்தவை முஸ்லிம்களின் பங்களிப்பில் மிகச்சிறிதே. சில முக்கியமான தகவல்கள் ரொம்ப டெக்னிகலாக
இருப்பதால் தவிர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு,


  • Muslims Determined Weights of many bodies,
  • Muslims defined Chemical combinations as a union of Elements together,
    about ten centuries before John Dalton,

  • Muslims defined Law of conservation of Mass long before it was
    defined in Europe, noting that a body of matter is able to change but can't disappear,
  • Mastery of Sublimation etc.


பல தகவல்கள் பதிவின் நீளம் கருதி விடப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் இந்த பதிவை
அடிப்படையாகக் கொண்டு உங்கள் ஆய்வை தொடங்குங்கள்...

ஒரு நிமிஷம், முடிப்பதற்கு முன் இரு முக்கிய தகவல்கள், ஒன்று, இன்று நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இந்த காபி இருக்கிறதே, இதை
உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களும் முஸ்லிம்கள்தான். அரபி வார்த்தையான "al-qahwa"
தான் பின்னர் துருக்கி மொழியில் "Kahve" என்று மாறி, பின்னர் அவர்கள் மூலமாக இத்தாலி
வந்து " caffé " என்று மாறி பின்னர் ஆங்கிலத்தில் "Coffee" என்று மாறியது.


இரண்டு, ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
முஸ்லிம்கள் பறப்பதற்குரிய இயந்திரத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். அவர்கள்
உருவாக்கிய இயந்திரத்தைக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து சுமார் பத்து
நிமிடங்கள் வரை பறந்திருக்கிறார்கள். என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மைதான். பாக்தாத்
சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த இயந்திரத்தை உருவாக்கியவர் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.
இது பற்றிய விரிவான விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் "Muslims' Machineries
and Instruments" என்ற தலைப்பின் கீழ் பார்ப்போம்.

இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச் செய்வானாக... ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


My Sincere Thanks To: 1. Br.Shabir Ally - President, Islamic Information
and Dawah Centre International, Toronto, Canada. 2. British Broadcasting Corporation
(BBC) 3. Muslim Heritage Website 4. Foundation for Science Technology and Civilisation
(FSTC), Manchester, United Kingdom. 5. Wikipedia

References: 1. Tamil Translation of Chemical terms taken from online
tamil dictionary site, tamildictdotcom 2. Islam: A thousand years of Faith and Power
- Jonathan Bloom and Sheila Blair. 3. Islam and Science - A Three series BBC documentary
broadcasted on Jan,2009. 4. A review on Muslim Contribution to Chemistry - FSTC,
UK 5. 1001 inventions mark Islam's role in Science - Claire Gemson, Glascow
Science Centre. 6. How Islamic Inventors Changed the World - The Independent, Science
section, dated 11th March 2006. 7. How Islam Influenced Science - Macksood Aftab.
8. The Advent of Scientific Chemistry - Salim T S Al-Hassani and Mohammed Abattouy.
9. Origin of the name "Chemistry" - Bradley University Site. 10. Chemistry - Egypt
State Information Service. 11. Al-Chemy - Chamber's Encyclopedia, Vol I. 12. Islamic
Alchemy: The History of Chemistry - Martyn Shuttleworth. 13. Soaps and Detergents
- The Soap and Detergent Assocation (SDA). 14. Soaps, Alkali, Alembic, Al, Inventions
in Medieval Islam, Alchemy - Wikipedia 15. Makers of Chemistry: E.J.Holmyard.
16. History Of Chemistry - chemistrydotaboutdotcom 17.Inventions in Medieval Islam
- Wapedia-wiki


உங்கள் சகோதரன், ஆஷிக் அஹ்மத் அ.

Source: - http://www.ethirkkural.com
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? Empty Re: நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum