தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்

2 posters

Go down

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Empty நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்

Post by Rikas Tue Jan 24, 2012 11:15 am

தூங்குவதற்கு முன்
நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Thooga

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் 41229886

இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி (மேற்கண்ட ஏதேனும் ஒன்றை கூறலாம்)
நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் 42177434

யா அல்லாஹ்! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! யா அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும் விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இன்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அவை உன் கையில்தான் உள்ளது. யா அல்லாஹ் நீயே முதல்வன் உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன் உனக்கு பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். எதுவும் உனக்குமேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். எதுவும் உனக்கு கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களை செல்வந்தர்களாக்குவாயாக! நூல்: புகாரி

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் 33810378
யா அல்லாஹ்! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். உன் பெயரால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்: புகாரி

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் 13801821

யா அல்லாஹ்! நீயே தூயவன். உன்னால்தான் எனது உடலை சாய்க்கிறேன். உன்னால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்ல அடியார்களை பாதுகாப்பதுபோல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்:முஸ்லிம்



தூங்குவதற்குமுன் ஆயத்துல் குர்ஸீயை ஓதிக்கொண்டால் விடியும்வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகாரி

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Ayathul
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். அல்குர்ஆன் 2:255

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்கு செல்லும்போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து அல்குர்ஆன் 112,113,114 அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். நூல்: புகாரி

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌاللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْوَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِوَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ



பகரா அத்தியாத்தின் கடைசி இரு வசஙனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّه ِِ وَالْمُؤْمِنُونَ كُلّ ٌ آمَنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِه ِِ وَكُتُبِه ِِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَد ٍ مِنْ رُسُلِه ِِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِير

இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். அல்குர்ஆன் 2:285



لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسا ً إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرا ً كَمَا حَمَلْتَه ُُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِه ِِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" அல்குர்ஆன் 2:286

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Atslee11

யா அல்லாஹ்! என் முகத்தைச் உனக்கு கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உனது (அருளில்) நபிக்கை வைத்து விட்டேன்.உனது (உனது தண்டணைக்கு)அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. யா அல்லாஹ்! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். நூல்: புகாரி
Rikas
Rikas
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 11
ஸ்கோர் ஸ்கோர் : 4536
Points Points : 18
வயது வயது : 42
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.amarkalamsoftware.blogspot.com

Back to top Go down

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Empty Re: நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்

Post by முஸ்லிம் Tue Jan 24, 2012 3:55 pm

அஸ்ஸலாமு அலைக்கும்

பயனுள்ள தூஆக்களை பகிர்ந்து கொண்டதற்கு ஜசாக்கல்லாஹ் சகோ. நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் 124907
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Empty Re: நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்

Post by Rikas Tue Jan 24, 2012 6:04 pm

முஸ்லிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

பயனுள்ள தூஆக்களை பகிர்ந்து கொண்டதற்கு ஜசாக்கல்லாஹ் சகோ. நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் 124907

success
Rikas
Rikas
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 11
ஸ்கோர் ஸ்கோர் : 4536
Points Points : 18
வயது வயது : 42
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.amarkalamsoftware.blogspot.com

Back to top Go down

நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன் Empty Re: நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum