தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்

Go down

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்  Empty எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்

Post by முஸ்லிம் Sat Jan 01, 2011 7:26 pm

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்  3இணையத்தில் தமிழில் டைப் செய்வது என்பது இன்னும் முழுமை பெறாத விசயமாகவே இருக்கிறது. பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் NHM Writer உபயோகித்து தமிழில் டைப் செய்து வருகிறார்கள். NHM Writer உபயோகித்து எங்கு வேண்டுமானாலும் தமிழில் டைப் செய்யலாம்.

எளிமை காரணமாக அதிகமானோர் Google Transliteration மூலம் தமிழில் டைப் செய்து காப்பி செய்து வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்வார்கள். பின்னூட்டம் இடும் போதோ, சாட் (Chat) செய்யும் போதோ இப்படி காப்பி பேஸ்ட் செய்வது கடின வேலையாக இருக்கும். தட்ஸ்தமிழ், தமிழிஷ், நக்கீரன் போன்ற தளங்கள் தங்கள் பின்னூட்ட பெட்டியில் Google Transileration ஒருங்கிணைத்து உள்ளார்கள். அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நேரடியாக அங்கே தமிழில் நம் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.

ஆனால் பிளாக்கர், வோர்ட்பிரஸ் வலைப்பூக்கள், தினமலர், ஜிமெயில் சாட்டிங் போன்ற தளங்களில் நேரடியா தமிழில் டைப் செய்ய இயலாது. எனது இந்த பிளாக்கின் "தேடுங்கள்" பகுதியில் கூட நீங்கள் தமிழில் நேரடியாக டைப் செய்து தேட முடியாது. இது போன்ற தருணங்களில் வேறு எங்காவது தமிழில் டைப் செய்து பேஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த சிக்கலை போக்க Google எந்த தளத்திலும் தமிழில் டைப் செய்வதற்காக ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒரு சிறிய ஜாவாஸ்கிரிப்ட் நிரலை உங்கள் இணைய உலாவியின் Bookmark டூல்பாரிலோ, Favorites லோ இணைத்து கொள்ள வேண்டும். வேண்டுமென்ற போது அதனை கிளிக் செய்து எல்லா இணையத்தளங்களிலும் தமிழில் டைப் செய்யலாம்.

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்  1

இத்தனை எப்படி நிறுவது என்பதை பற்றி அறிய கூகுளின் இந்த உதவி பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே படங்களுடன் மிகவும் எளிமையாக விளக்கி உள்ளார்கள். பெரும்பாலான இணைய உலாவிகளில் எப்படி நிறுவுவது என்பது பற்றிய விளக்கம் அங்கு உண்டு.

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்  2
அதனை நிறுவி கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இணைய பக்கத்தில் இருக்கும் போது அங்கு தமிழில் டைப் செய்ய விரும்பினால் நீங்கள் நிறுவிய [அ Type in Tamil] பட்டையை கிளிக் செய்து Transliteration Enable செய்து கொள்ளுங்கள். வேண்டுமென்ற இடங்களில் தமிழில் டைப் செய்து கலக்குங்கள். இனிமேல் நீங்கள் கூகிள் ஜிமெயில் சாட்டிங்கில் தமிழில் அடுத்தவருடன் எளிதாக தமிழில் டைப் செய்து உரையாடலாம்.

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்  3குறிப்பு : இந்த முறை பிளாக்கர் இடுகைகளுக்கு கீழே இடம் பெறும் பின்னூட்ட பெட்டிகளில் வேலை செய்வதில்லை. தனிப்பக்கத்தில் திறக்கும் பின்னூட்ட பக்கங்களில் வேலை செய்கிறது.


நன்றி : தமிழ்நுட்பம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum