தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பிரிட்டனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோ ஃபோபியா

Go down

 பிரிட்டனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோ ஃபோபியா  Empty பிரிட்டனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோ ஃபோபியா

Post by முஸ்லிம் Sat Jan 22, 2011 2:54 pm

பிரிட்டன் முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாக மாறிவிட்டதாக பிரிட்டனின் முதலாவது முஸ்லிம் பெண் அமைச்சர் ஸயீதா வர்ஸி கருதுகின்றார்.

பிரதமர் டேவிட் கமெரூனின் கன்ஸவர்டிவ் கடசியின் இணைத்தலைவரும் அமைச்சருமான ஸயீதா கருத்துரைக்கையில், பிரித்தானிய சமூகத்தில் மத சகிப்புத்தன்மை படிப்படியாகக் குறைந்து வரும் ஒருவகைப் போக்கு நிலவுவதாக எச்சரித்துள்ளார்.

இரவு விருந்துபசார வைபவங்களில் மக்கள், முஸ்லிம் விரோதப் போக்கு, இனவெறி குறித்தெல்லாம் பகிரங்கமான கதையாடல்களை நிகழ்த்துமளவுக்கு பிரிட்டனில் இவ்விடயம் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தைப் பின்பற்றும் அனைவரையும் 'மிதவாதி' என்றோ 'தீவிரவாதி' என்றோ அடையாளப்படுத்துகின்ற போக்கை அவர் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். இத்தகைய கருத்துப் போக்கே மக்கள் மத்தியில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்து மத சகிப்புத் தன்மையை அறவே தகர்த்தெறிந்து, முஸ்லிம்கள் பற்றிய பிழையான புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, சமூக பகிஷ்கரிப்புக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும். ஆனால், அத்தகையவர்களின் செயற்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முழு மொத்த முஸ்லிம் சமூகமும் பழிவாங்கப்படும் நிலை முற்றாக நீங்க வேண்டும் என்று அமைச்சர் ஸயீதா தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாம் பற்றிய பிழையான பிரதிபிம்பம் கட்டமைக்கப்படுவதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய துரதிருஷ்டவசமான போக்கை மாற்றியமைப்பது என்பது சமூகமும், சமயத் தலைவர்களும் மட்டுமின்றி அரசாங்கமும் முனைப்போடு செயற்படுவதன் மூலமே சாத்தியமாகும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

"இதற்கு முன்பும் நாம் இத்தகைய சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். எனவே, ஒரே தேச மக்கள் என்ற வகையில் இதுபோன்ற நெருக்கடிகளை ஒருங்கிணைந்து எதிர்த்து வெல்வது சாத்தியம்" என்பதில் தாம் உறுதியோடு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது பிரிட்டனில் 2.9 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த சனத்தொகையில் இது 4.6 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum