தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை - அமெரிக்கா கைவிரிப்பு

Go down

நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை - அமெரிக்கா கைவிரிப்பு Empty நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை - அமெரிக்கா கைவிரிப்பு

Post by முஸ்லிம் Wed Feb 02, 2011 2:59 pm

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், "எகிப்து மக்கள் அமெரிக்கா ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை" என அமெரிக்க செனட்டர் ஜாண் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தும் ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து எட்டாவது நாளாக எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்றைய நிகழ்வில்,

* 10 லட்சம் மக்கள் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபடுவர் என முக்கிய எதிர்கட்சிகள் முன்னர் அறிவித்திருந்தன. ஆனால் எதிர்பார்த்ததை விடவும் மேலாக சுமார் 20 லட்சம் மக்கள் எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள தஹ்ரீர் ஸ்கொயர் பகுதியில் கூடினர்.

* மிகப் பிரம்மாண்டமான இப்போராட்டத்தை "எகிப்தில் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத காவியம்" என பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Dim lights

* தலைநகரில் நடக்கும் மிகப்பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, அலெக்ஸாண்டிரியா உட்பட எகிப்தின் பல முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டம் துவங்கியுள்ளது.

* மக்கள் போராட்டத்தினிடையே கொள்ளையர்களும் கிரிமினல்களும் புகுந்து விடாமல் இருக்க இராணுவம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது. இராணுவ கண்காணிப்பில் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளே வரும் போராட்டக்காரர்களை மக்களில் ஒரு பகுதியினரும் தீவிரமாக சோதித்து போராட்டத்தினுள் அனுமதிக்கின்றனர்.

* எகிப்து முழுவதும் இராணுவ ட்ரக்குகளும் டாங்குகளும் பேரணி நடக்கும் வீதிகள் தோறும் நிறைக்கப்பட்டுள்ளன.

* மக்கள் அமைதியாகவும் உறுதியாகவும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

* ஜோர்டான் அதிபர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள எகிப்து மக்கள் போடும் கோசத்தை மிகுந்த கவனத்துடன் செவிமடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

* எகிப்து எதிர்கட்சிகள் ஒன்றின் தலைவரும் போராட்டத்தை முன்னெடுப்பவர்களில் ஒருவருமான முஹம்மது எல் பராதியை அமெரிக்க தூதரக அதிகாரி சந்தித்து பேசினார்.

* ஹோஸ்னி முபாரக்குடன் எவ்வித சமரசத்துக்கும் இடமேயில்லை என எகிப்து முக்கிய எதிர்கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

* ஈரான் புரட்சியை ஒத்த மற்றொரு புரட்சி எகிப்தில் படைக்கப்படுவதாக அரசியல் கண்காணிப்பாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், எகிப்தின் தற்போதைய நிலையினைக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க செனட்டர் ஜாண் கெர்ரி, "எகிப்து மக்கள் ஹோஸ்னி முபாரக்கிற்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதாக தவறாக நினைத்துள்ளனர். முபாரக்கிற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முபாரக் ஆட்சியைக் கைமாறுவதே சரியான நடவடிக்கையாகும்" என தெரிவித்தார்.

இந்நாள் வரை ஹோஸ்னி முபாரக்கிற்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அமெரிக்க செனட்டரின் இந்த அறிவிப்பு எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாகவே கணிக்க வைக்கிறது.

அவ்வாறு ஹோஸ்னி முபாரக் மக்கள் போராட்டத்துக்குச் செவிசாய்த்து ஆட்சியை விட்டு இறங்கும் நிலையில், "இராணுவம், முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரிவு பிரதிநிதிகள்" அடங்கிய குழுவின் கையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆட்சி கைமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum