தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எகிப்தை தொடர்ந்து சீனாவில் மக்கள் புரட்சி!

Go down

எகிப்தை தொடர்ந்து சீனாவில் மக்கள் புரட்சி!  Empty எகிப்தை தொடர்ந்து சீனாவில் மக்கள் புரட்சி!

Post by முஸ்லிம் Mon Feb 21, 2011 5:42 pm

பெய்ஜிங்: துனீசியா, எகிப்தில் தொடங்கிய மக்கள் புரட்சி இப்போது பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் தொடங்கிய இப்புரட்சி லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டமாக வலுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான சீனாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் உருவானது. ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரில் திரண்டனர். பெய்ஜிங் நகரில் மெக்டொனால்ட் விடுதிக்கு எதிரில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட இப்போராட்ட தகவலின் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு திரண்டனர். வர்த்தகப் பகுதியான வாங்புஜிங் தெருவில் ஒரு சில நிமிஷங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு காவல்துறையினர் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். மேலும் சிலரைக் கைது செய்தனர்.

சீன அரசு எதிர்ப்புக் குழு தலைவரான லியு ஜியோபோ-வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பரிசைப் பெற ஆஸ்லோ செல்லவும் அவரை அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து பெய்ஜிங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த தகவல் முதலில் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா-வில் வெளியானது. பிற்பகல் 2.10 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களில் 2 பேரை மட்டுமே ரோந்து காவல்துறையினர் கைது செய்து வேனில் கொண்டு சென்றதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல ஷாங்காய் நகரில் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டனர். யுனான் ஷோங் சாலை மற்றும் ஹன்கோ சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தை காவல்துறையினர் தடியடி கலைத்தனர். கூட்டத்திலிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். "மல்லிகைப் புரட்சி' என்று இந்த போராட்டத்துக்கு பெயரிட்டு அதற்காக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதை அரசு ஓரளவு யூகித்திருந்தது. ஆனால் அது எப்படி நடக்கும் என்பதை தீர்மானிக்கும் முன்பாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை மிரளச் செய்துவிட்டனர்.

இத்தகைய போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ய பயன்படும் இணையதளத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை அரசு தடை செய்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து செயல்படும் மற்றொரு இணையதளம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு ஒன்று திரண்டனர். சீனாவில் 45 கோடி பேரிடம் இணையதள இணைப்பு உள்ளது. 5 கோடிக்கும் அதிகமான பிளாக்-குகள் இங்குள்ளன. ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் 10 கோடி பிளாக்-குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum