தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சீனாவிலும் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்

Go down

சீனாவிலும் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்  Empty சீனாவிலும் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்

Post by முஸ்லிம் Tue Mar 01, 2011 6:36 pm

பீஜிங் : சீனாவில் நேற்று மீண்டும் "மல்லிகைப் புரட்சி' நடப்பதாக வந்த செய்தியை அடுத்து, அதை முறியடிப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் தலைநகர் பீஜிங்கில் குவிக்கப்பட்டனர். சீனாவில் கடந்த 20ம் தேதி, 200 நகரங்களில், எகிப்து, துனீசியா மற்றும் லிபியாவைப் போன்று "மல்லிகைப் புரட்சி' நடக்கும் என்று "பேஸ்புக், ட்விட்டர்" உள்ளிட்ட சமூக இணையதளங்களில் செய்திகள் உலாவந்தன.

இதையடுத்து பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நாட்டில் புரட்சி வெடிக்காமல் இருக்கும் வகையில், "பேஸ்புக், ட்விட்டர், லிங்கடின்" உள்ளிட்ட சமூக இணையதளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டன. "மல்லிகை" என்ற சொல்லே இணையத்தில் வராமல் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன், பீஜிங்கில், "வாங்பூஜிங்" (சீன மொழியில் மல்லிகை என்று அர்த்தம்) என்ற பிரபல "ஷாப்பிங்" பகுதியில் "மல்லிகைப் புரட்சி" நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம் எதுவும் நடக்கும் அறிகுறியே இல்லை. ஹாங்காங்கில், "பேஸ்புக்" மூலம் திரண்ட 25 பேர் கைகளில் பதாகைகள் ஏந்தி மல்லிகை மாலை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில்,"விடுதலை மற்றும் ஜனநாயகம்; ஒரு கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டு; அரசியல் சீர்திருத்தம் கொண்டு வா" என்பன போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

இதற்கிடையில், நேற்று காலை, இணையதளம் மூலம் சீனப் பிரதமர் வென் ஜியாபோ, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பான்மை கேள்விகள், சமூக ஸ்திரத்தன்மை பற்றியே கேட்கப்பட்டன. "கிராமப் புற - நகர்ப்புற வருவாய்களுக்கு இடையில் உள்ள பிளவைக் குறைப்பது, கிராமப்புற மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் அளிப்பது, ஊழலைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் அமைதி நிலவ, சீன அரசு செயல்படுகிறது" என்று ஜியாபோ பதிலளித்தார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum