தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்

Go down

இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்  Empty இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்

Post by முஸ்லிம் Fri Mar 04, 2011 5:04 pm

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் சிறைப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீனப் பெண்மணி ஸம்ஹா ஹிஜாஸ் கொலைக் குற்றத்திற்காகத் தண்டனை அனுபவித்துவரும் யூதப் பெண் கைதிகளோடு ஒரே சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என மண்டேலா எனப்படும் சிறைக் கைதிகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அஸ்கலான் ஜெயிலில் உள்ள தன்னுடைய சகோதரர் யாஸிரைச் சந்திப்பதற்காகச் செல்லும்போது கைத்தொலைபேசி ஒன்றை எடுத்துச் சென்றமைக்காக 08. 02. 2011 அன்று ஸம்ஹா இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என மேற்படி அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் புதைனா தக்மக் தெரிவித்துள்ளார். இத்தகைய ஒரு கைதியை கொலைக் குற்றவாளிகளோடு ஒன்றாக அடைத்து வைத்திருப்பது சர்வதேச சட்டவரம்புகளை மீறிய செயலாகும். இப்படிச் சின்னச் சின்னக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்டு இஸ்ரேலியச் சிறைகளில் வாடும் ஏராளமான பலஸ்தீனப் பெண்மணிகளும் சிறுவர்களும் உள்ளனர் எனினும், அவர்களைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் அவ்வப்போது மிக அரிதாகவே வெளிவருகின்றன.

ஸம்ஹாவின் இரண்டு சகோதரர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ளனர். அவர்களுள் யாஸிர் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் அடுத்த சகோதரர் ஹாஷிமுக்கு 10 ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10946
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 10 வருடகாலம் இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்கள்!
»  இஸ்ரேலியச் சிறையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்
» ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்
» பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்
» மலேகான்:காணாமல் போன 3 முஸ்லிம் இளைஞர்களை தேடி கண்ணீரில் வாடும் குடும்பங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum