தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லிபியாவில் போர்: கடாபி மாளிகை தரைமட்டமானது

Go down

லிபியாவில் போர்: கடாபி மாளிகை தரைமட்டமானது  Empty லிபியாவில் போர்: கடாபி மாளிகை தரைமட்டமானது

Post by முஸ்லிம் Tue Mar 22, 2011 4:25 pm

அமெரிக்க, இங்கிலாந்து கூட்டுப்படையினரின் விமானத்தாக்குதலில் லிபிய அதிபர் முஅம்மர் கடாபியின் மாளிகை தரமட்டமானது.


துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க நாடான லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. மக்களின் போராட்டத்தை ஒடுக்க கடாபி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார்.

மக்கள் புரட்சி படையினர், லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசி உள்பட 4 நகரங்களைக் கைப்பற்றி இருந்தனர். அவற்றை மீட்க கடுமையான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வீச்சின் மூலம் நகரங்களைக் கைப்பற்றிய ராணுவம் அடுத்த படியாக பெங்காசியைக் குறிவைத்தது. அங்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டும் கடாபி கேட்கவில்லை.

அதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று லிபியா நாட்டு மக்களைக் காப்பாற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் கூட்டு படைகள் நேற்று அதிகாலை ராணுவ தாக்குதலைத் தொடங்கின. பிரான்சு ஜெட் போர் விமானங்கள் பெங்காசி நகரில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து முதன் முதலில் குண்டு வீசி தாக்குதலைத் தொடங்கி வைத்தன.


அதேபோன்று அமெரிக்காவின் கூட்டு படைகள் திரிபோலி, மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகளை வீசின. அதில் போர் விமானங்கள் தீப்பிடித்து எரிந்தன.

கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்து வந்த அவரது அடுக்கு மாடி வீட்டைக் குறி வைத்து ஏவுகணைகளை வீசி தாக்கினர். அதில் கட்டிடம் தகர்ந்து தரைமட்டமானது. முன்னதாக கடாபியைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கக் கூட்டுப்படையினரின் தாக்குதலில் பலர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. அமெரிக்க தாக்குதலிலிருந்து கடாபியைக் காப்பாற்ற அவரது ஆதரவாளர்கள் மனித கேடயமாக இருந்து செயல்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தீவிரவாதத்தின் மீதான போர் எண்ணை வள நாட்டை கைப்பற்றுவதற்கே – பிரிட்டன் போர் எதிர்ப்பு பிரச்சாரக் குழு
» கடாபி உடல் அடக்கம்!
» அமெரிக்க அதிபர் மாளிகை மீது குண்டு வீச்சு
» அமெரிக்கர்களை சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்ய ரகசிய குழு ஆணையிட முடியும் – வெள்ளை மாளிகை
» எண்ணெய்க்கு தடை: மனரீதியான போர் – ஈரான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum