தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும் பட்டினி மாறாதது ஏன்? – உச்சநீதிமன்றம் கோபமான கேள்வி

Go down

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும் பட்டினி மாறாதது ஏன்? – உச்சநீதிமன்றம் கோபமான கேள்வி   Empty இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும் பட்டினி மாறாதது ஏன்? – உச்சநீதிமன்றம் கோபமான கேள்வி

Post by முஸ்லிம் Fri Apr 22, 2011 5:00 pm

புதுடெல்லி:’தேசம் பொருளாதாரத் துறையில் முன்னேறுவதாக பெருமையடிக்கும் பொழுது கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதும், பெரும்பாலோர் பட்டினியால் மரணிப்பதும் ஏன்?’ என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை கண்டறிவதற்காக மத்திய அரசும், திட்டக் கமிஷனும் ஏற்றுக்கொண்டுள்ள அளவுகோல்களை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

உண்மையாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் மறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டி மனித உரிமை அமைப்பான மக்கள் சிவில் உரிமைக்கழகம்(பி.யு.சி.எல்) சமர்ப்பித்த பொதுநல வழக்கை தொடர்ந்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்சநீதிமன்றம் இத்தகையதொரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொது வினியோக திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடைபெறுவதாக மக்கள் உரிமைக்கான சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தியா உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதாக கூறிக்கொள்ளும் இவ்வருடத்தில் கூட வறுமை அதிகமான மாவட்டங்களில் அதிகளவில் தானியங்களை விநியோகிக்காதது ஏன்?என நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விஷயத்தில் மத்திய அரசும், திட்டக்கமிஷனும் வருகிற மே 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு இந்தியாவை உருவாக்குவதற்காக அல்ல நீங்கள் முயலவேண்டியது. ஏழைகளின் இந்தியாவும், பணக்காரர்களின் இந்தியாவும் உருவாக அனுமதிக்காதீர்கள். எல்லோருடைய பட்டினியையும் மாற்றுவதற்கு முயலவேண்டும் என உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறியது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், பொது வினியோக திட்டத்தை சீரமைப்பதற்காக அரசு மேற்கொண்ட முயற்சியால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை பெருமளவில் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார். அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள்; “இந்தியாவை சக்திவாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அமோக விளைச்சல் ஏற்பட்டு கிடங்குகளில் உணவு தானியங்கள் நிரம்பி வழிவதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறபோது என்ன பிரயோஜனம்? பட்டினியால் ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கும்போது, நாட்டில் தேவையான உணவுபொருட்கள் இருப்பில் உள்ளதாக அரசு கூறுவதன் தர்க்க நியாயம் என்ன? என்று புரியவில்லை.

ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருவதாக நீங்கள் கூறுவதற்கு என்ன அர்த்தம்? ஊட்டச்சத்து குறைபாடு முழுமையாக நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் 36 சதவீதம் என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது? இதற்கு திட்ட கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது 2011-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக நிர்ணயித்து இருப்பது திகைப்பை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்கள், இந்த சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும், அதற்கு ஏற்ப கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து உள்ளன.

ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிநபர் வருவாய் மாறுபடும்போது எந்த அடிப்படையில் 36 சதவீதம் என்ற அளவை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது? நகர்ப் புறங்களில் தனி நபர் வருமானம் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் என்றும், கிராமங்களில் 11 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் கூட இந்த வருவாய் போதாத நிலையில், எப்படி இந்த குறைந்த அளவு தொகையை வறுமைக்கோட்டிற்கான அடிப்படையாக நிர்ணயம் செய்தீர்கள்? இது குறித்து திட்ட கமிஷன் துணை தலைவர் ஒரு வாரத்திற்குள் விளக்கமான ஒருங்கிணைந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.” என்றனர்.

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் எத்தனை சதவீதம் என்பது குறித்தும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படியும், மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும் பட்டினி மாறாதது ஏன்? – உச்சநீதிமன்றம் கோபமான கேள்வி   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் நாஸர் மஃதனி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையிலடைக்கின்றீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி
» கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்
» பொருளாதார நெருக்கடி: ஐரோப்பிய யூனியனின் திட்டத்திற்கு பின்னடைவு
» பொருளாதார நெருக்கடி:ஐரோப்பாவில் தற்கொலை அதிகரிப்பு
» இந்தியாவின் 8 மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum