தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக இம்ரான்கான் ஆர்ப்பாட்டம்!

Go down

அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக இம்ரான்கான் ஆர்ப்பாட்டம்!  Empty அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக இம்ரான்கான் ஆர்ப்பாட்டம்!

Post by முஸ்லிம் Mon Apr 25, 2011 3:30 pm

பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள வடக்கு வசீரிஸ்தான், தெற்கு வசீரிஸ்தான் ஆகிய பகுதிகளில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிகளும் பொதுமக்களும் பலியாகின்றனர். இது பாகிஸ்தான் மக்களிடையே கோப அலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் 25பேர் பலியானார்கள். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று கோரி பாகிஸ்தானின் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும் தெஹ்ரிகே இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், அமெரிக்க ஏவுகணை தாக்குதலை எதிர்த்து 2 நாள் போராட்டம் நடத்தினார்.

இம்ரான்கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் செல்லும் நெடுஞ்சாலையில் பெஷாவரில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இம்ரான்கான் "அப்பாவிகளை அமெரிக்கா கொல்வதை நிறுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று அறிவித்தார். மேலும் பாகிஸ்தான் தலீபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த, தான் உதவ தயாராக உள்ளதாகவும் அறிவித்தார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10940
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க இராணுவத்தை விட இந்திய இராணுவம் சக்திவாய்ந்ததா? கேட்கிறார் இம்ரான்கான்
» கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக் மக்கள் வழக்கு பதிவு
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» யூத ஆக்கிரமிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்: ஜெரூசலம் அதிர்ந்தது
» அரபு வசந்தம்: பாக்கிஸ்தானிலும் நடக்க இம்ரான்கான் விருப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum