தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மோடியின் பங்கினை வெளிப்படுத்திய அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!

Go down

மோடியின் பங்கினை வெளிப்படுத்திய அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!  Empty மோடியின் பங்கினை வெளிப்படுத்திய அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!

Post by முஸ்லிம் Mon Apr 25, 2011 3:32 pm

2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து குஜராத்தில் அரசு பரிவாரங்களின் துணையுடன் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில், அம்மாநில பாஜக முதல்வர் நரேந்திர மோடியின் பங்கினை உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் இனக்கலவரத்தில், அம்மாநில பாஜக முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து, அப்போது குஜராத் மாநில உளவுத்துறையில் டி.சி.பி - யாக இருந்த அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

"கலவரத்தில் முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும், ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகாரிகள் அமைத்துக் கொடுக்கவேண்டும் எனவும் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மோடி உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்பு புலனாய்வுக்குழு இந்த உண்மையை மூடி மறைக்கிறது" என உச்ச நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் சஞ்சீவ் பட்டிற்கும் அவரின் குடும்பத்திற்கும் பல்வேறு வகையில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டுமெனவும் அவர் பிப்ரவரி 14, மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 13 என மூன்று முறை குஜராத் அரசின் உள்துறை பொறுப்பை வகிக்கும் கூடுதல் முதன்மை செயலாளர் பல்வந்த் சிங்கிற்குக் கடிதம் சமர்ப்பித்துள்ளார். இருப்பினும் இதுவரை அவரின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருப்பதோடு, ரிசர்வ் காவல்படை பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருக்கும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வாகனத்தையும் மோடி அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.

குஜராத் மாநில உளவுத்துறையும், அஹ்மதாபாத் நகர காவல்துறையும், "சஞ்சீவ் பட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும். அவரின் உயிருக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் காரணமாக 11 நபர்கள் கொண்ட ஆயுத படை பாதுகாப்பு அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அளிக்கவேண்டும்" என அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குஜராத் அரசு பட்டின் பாதுகாப்புக்காக இதுவரை எதுவும் செய்வதற்கு முன்வரவில்லை.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சொராஹ்புதீன் வழக்குத் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்
»  விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
» மோடியின் சத்பாவனா உண்ணாவிரதம்(?)
» காஸ்ஸாவிற்கு புறப்பட்ட மலேசியா கப்பலை தாக்குவோம்-இஸ்ரேல் மிரட்டல்
» காங்கிரசை எதிர்த்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்: ஹசாரே மிரட்டல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum