தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உஸாமாவின் கடைசி நிமிடங்கள்

Go down

உஸாமாவின் கடைசி நிமிடங்கள்  Empty உஸாமாவின் கடைசி நிமிடங்கள்

Post by முஸ்லிம் Tue May 03, 2011 6:18 pm

இஸ்லாமாபாத்:அமெரிக்காவை குலை நடுங்கவைத்த அல்காயிதா இயக்க போராளி உஸாமாவின் கடைசி நிமிடங்களைக் குறித்த செய்திகளை செய்தி சேனல்களும், செய்தி ஏஜன்சிகளும் வெளியிட்டுள்ளன. ஆனால் இச்செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இஸ்லாமாபாத்திலிருந்து வடக்கே 61 கி.மீ தொலைவிலுள்ள அப்போதாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு அருகே உள்ளூர் நேரம் 8.30 மணிக்கு உஸாமா பின் லேடன் கொல்லப்பட்டார்.

பத்து மாதங்களாக நீண்ட முயற்சியின் இறுதியில் 40 நிமிடங்கள் நடந்த போராட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிரவைத்த போராளியை அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் கொலை செய்தனர். உலக வர்த்தகமைய தாக்குதலுக்கு பிறகு தலைமறைவாக வாழ்ந்த உஸாமா இருக்கும் ரகசிய இடத்தை அவரது தூதர்களின் நடவடிக்கையை கண்காணித்து அமெரிக்கா கண்டறிந்தது. இணையதளம், தொலைபேசி வசதிகள் இல்லாமலேயே வாழ்ந்த உஸாமா வெளியுலகை தனது தூதர்கள் மூலமாகவே தொடர்பு கொண்டார்.

ஏப்ரல் 29-ஆம் தேதி 8.20 மணிக்கு தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 40 நிமிடங்கள் நீண்ட ஹெலிகாப்டர் தாக்குதலில் உஸாமா கொல்லப்பட்டார். உஸாமாவை உயிரோடு பிடிப்பதற்கு அமெரிக்க ராணுவம் முயன்றதாம். ஆனால், உஸாமாவின் மெய்க்காப்பாளர்கள் எதிர்த்து போராடியதால் அவர் வசித்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாம். எதிர் தாக்குதலில் ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் சேதமடைந்துள்ளது.

உஸாமா வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005-ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. வெளியேயிருந்து உள்ளே செல்ல இரண்டு பரிசோதனை வாயில்களை தாண்டிச்செல்லவேண்டும்.

தாக்குதல் துவங்கியபொழுது கிராமவாசிகளிடம் விளக்கை அணைத்துவிட்டு வீட்டிற்குள் செல்லுமாறு ராணுவம் உத்தரவிட்டது. இரண்டு மணிநேரம் அப்பிரதேசத்தில் போர்க்கள சூழல் நிலவியது. உஸாமாவை அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் கொலை செய்த பிறகு அப்பிரதேசத்தின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொண்டது.

உஸாமாவின் கடைசி நிமிடங்கள்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்
» உஸாமாவின் புதிய டேப்பும் போலி
» அமெரிக்கா:உஸாமாவின் சகோதரன் என கூறி சீக்கியருக்கு அடி-உதை
» உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum