தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உஸாமாவிற்காக பிரார்த்தனை

Go down

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உஸாமாவிற்காக பிரார்த்தனை   Empty பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உஸாமாவிற்காக பிரார்த்தனை

Post by முஸ்லிம் Thu May 12, 2011 4:59 pm

இஸ்லாமாபாத்:உஸாமா பின் லேடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தானில் முக்கிய எதிர்க்கட்சியான ஜம்மியத்துல் உலமாயே இஸ்லாம் (பஸ்லுர்ரஹ்மான் பிரிவு) உறுப்பினர் பாக்.பாராளுமன்றத்தில் அனுதாபாம் தெரிவித்தார். கட்சியின் பெயரிலேயே இந்த அனுதாப செய்தியை அவர் வெளியிட்டார்.

பாராளுமன்ற அமர்வு துவங்கிய உடனேயே ஜம்மியத்துல் உலமாயே இஸ்லாமின் உறுப்பினர் மெளலவி அஸமத்துல்லாஹ் தனது இருக்கையிலிருந்து எழுந்து உஸாமாவிற்காக பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து ஜம்மியத்துல் உலமாவின் இதர உறுப்பினர்களும், சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பிரார்த்தனை புரிந்தனர்.

உஸாமாவின் ஆன்மாவை இறைவன் காப்பாற்றுவானாக!எ ன எதிர்கட்சியினர் ஒரேகுரலில் கூறிய போதும் ஆளுங்கட்சியான பீப்பிள்ஸ் பார்டி இதில் கலந்துக் கொள்ளவில்லை. பி.பி.பிக்கு இஸ்லாத்தில் பிடிப்பில்லை என்பதற்கான ஆதாரம் தான் இந்நடவடிக்கை என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உஸாமாவிற்காக பிரார்த்தனையும், அனுதாப செய்தியும் துவங்கியவுடன் தேசிய அவையின் துணை சபாநாயகர் தலையிட்ட போதும் பலனில்லை. அனுமதியில்லாமல் பிரார்த்தனை நடத்தியது அவை சட்டங்களுக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உஸாமாவிற்காக பிரார்த்தனை   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10934
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum