தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு துரோகியா?

Go down

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு துரோகியா?  Empty அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு துரோகியா?

Post by முஸ்லிம் Sun May 22, 2011 2:07 pm

அமெரிக்க வெள்ளை மாளிகையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள குடியரசுக்கட்சிப் பிரமுகர்கள் அதிபர் ஒபாமாவை மிகக் காரசாரமாகச் சாடியுள்ளனர். பலஸ்தீனர்களுடனான சமாதான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முன்வருமாறு இஸ்ரேலை நிர்ப்பந்திக்க முனைவதினூடாக அவர் அமெரிக்காவின் ஆத்மார்த்த நட்பு நாடான இஸ்ரேலுக்குப் பெரும் துரோகமிழைத்துவிட்டார் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



"பலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்குமுகமாக 1967 ஆம் ஆண்டுக்குரிய பலஸ்தீன் ஆள்புல எல்லைகளை இஸ்ரேல் பலஸ்தீனர்வசம் மீளக் கையளிக்க வேண்டும்" என அண்மையில் பராக் ஒபாமா இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்தே அவர் மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார். 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும் மிச்சேல் பெச்மேன், " ஒபாமா நமது நட்பு நாடான இஸ்ரேவுக்குத் துரோகமிழைத்துவிட்டார்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், "அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டார். அவர் இஸ்ரேலை அவமதித்துள்ளதோடு சமாதானப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடிய அதன் ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு எப்போதும் பக்கபலமாக நிற்கும் என்ற அமெரிக்காவின் உறுதியான வெளிநாட்டுக் கொள்கையை ஒபாமா புறந்தள்ளிவிட்டார்" என மசெசுசெட்ஸ் பிராந்திய ஆளுநர் மிட் ரொம்னி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (19.05.2011) மத்தியகிழக்குப் பிராந்தியம் தொடர்பான தமது நிலைப்பாடு குறித்து உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா, "இஸ்ரேலுடையதும் எதிர்கால பலஸ்தீனுடையதும் ஆள்புல எல்லைகள் 1967 ஆம் ஆண்டு எல்லைகளை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் இக்கருத்தை ஏற்க மறுத்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ உடனடியாகத் தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"1967 ஆம் ஆண்டுக்கான ஆள்புல எல்லை என்பது இஸ்ரேலைப் பொறுத்தவரை பாதுகாப்பற்றது என்பதோடு, இஸ்ரேலுக்கு இழப்பு ஏற்படும் வகையில் ஒரு சுதந்திர பலஸ்தீன் தாயகம் உருவாவதை எவ்வகையிலும் தம்மால் அனுமதிக்க முடியாது" என்று நெத்தன்யாஹூ தெரிவித்திருந்தார்.

முன்னாள் மினெசோட்டா பிராந்திய ஆளுநரும் 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் வேட்பாளராகப் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுபவருமான டிம் போவ்லண்ட்டி குறிப்படுகையில், "ஒபாமாவின் கோரிக்கை தவறானது மட்டுல்ல, அபாயகரமானதும்கூட. மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் குழப்பகரமான சூழ்நிலையில், அமெரிக்கா முன்னெப்போதை விடவும் இஸ்ரேலுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெரூசலத்துக்கும் மிகப் பக்கபலமாக நிற்பது இன்றியமையாததாகும்" எனக் கருத்துரைத்துள்ளார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (20.05.2011) வொஷிங்டனில் இடம்பெற்ற இஸ்ரேலியப் பிரதமருடனான 7வது சந்திப்பின் பின்னர், 'மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொருத்தமான ஒரு தீர்வு முன்மொழிவை நோக்கி நெத்தன்யாஹூ எப்போதாவது நகரக்கூடும் என தான் ஒருபோதும் நம்பவில்லை' என அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டதாக நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum