தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிரி-பலஸ்தீன் தலைவர்கள் குற்றச்சாட்டு

Go down

நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிரி-பலஸ்தீன் தலைவர்கள் குற்றச்சாட்டு  Empty நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிரி-பலஸ்தீன் தலைவர்கள் குற்றச்சாட்டு

Post by முஸ்லிம் Thu May 26, 2011 3:33 pm

ராமல்லா:இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிராக உள்ளார் என பலஸ்தீன் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 1967-ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாக கொண்டு பலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமைதி நிறுவப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பலஸ்தீன் தலைவர்கள் நெதன்யாகு மீது குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்க காங்கிரஸில் உரை நிகழ்த்திய நெதன்யாகு, நல்லிணக்கத்திற்கும், அமைதி புனரமைக்கப்படவும் தயார் என தெரிவித்தார்.

ஆனால், மேலும் தடைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை நெதன்யாகு மேற்கொண்டுள்ளதாக பலஸ்தீன் அதாரிட்டி அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர் நபீல் அபூ ருதைனா கூறியுள்ளார். சமாதானத்தை புனரமைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியும் நெதன்யாகுவின் வார்த்தைகளில் இடம் பெறவில்லை.

முன்பு கூறியதை மீண்டும் தெரிவித்துள்ளார் என நபீல் குற்றம் சாட்டுகிறார். பிராந்தியத்தின் சமாதானத்தில் இஸ்ரேல் பங்குசேராது என்பதை தான் நெதன்யாகுவின் பேச்சிலிருந்து தெளிவாகிறது என பலஸ்தீன் மத்தியஸ்தர் ஸாஇப் எரகாத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் அகதிகள் சொந்தநாட்டிற்கு திரும்பி வரக்கூடாது. எல்லைகளில் இஸ்ரேல் ராணுவம் நீடிக்கும், குடியேற்றம் அதிகரிப்பது தொடரும், பலஸ்தீனர்களை நிராயுத பாணிகளாக மாற்றுவோம் ஆகிய காரியங்களில் தான் நெதன்யாகு கவனம் செலுத்துகிறார் என எரகாத் சுட்டிக்காட்டுகிறார்.

பலஸ்தீனர்களுக்கு இடையே ஐக்கிய ஒப்பந்தம் உருவாக்கியதை விமர்சிக்கும் நெதன்யாகுவின் வார்த்தைகளை அங்கீகரிக்க இயலாது. ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப் படுத்துவோம் என ஹமாஸ் தலைவர் ஸமி அபு ஸுஹ்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பலஸ்தீன் நாட்டிற்கு செப்டம்பர் மாதம் ஐ.நாவில் அங்கீகாரம் கிடைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து மஹ்மூத் அப்பாஸ் பி.எல்.ஒ, பத்ஹ் தலைவர்களுடன் நேற்று சந்திப்பை நடத்தினார். இஸ்ரேலுடனான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாமல் பலஸ்தீன் நாட்டிற்கான முயற்சிகளை ஆதரிக்கமாட்டோம் என ஒபாமா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.


நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிரி-பலஸ்தீன் தலைவர்கள் குற்றச்சாட்டு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum