தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது

Go down

பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது  Empty பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது

Post by முஸ்லிம் Fri May 27, 2011 4:25 pm

வாஷிங்டன்:மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்துவரும் பாகிஸ்தானில் ராணுவத்தை வாபஸ் பெறப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை குறைக்க அந்நாடு கோரிக்கை விடுத்திருந்தது. அல் காயிதா தலைவர் உஸாமா பின் லேடன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் பாகிஸ்தான் இக்கோரிக்கையை முன்வைத்தது.

ஆனால், 200க்கும் அதிகமான ட்ரூப்புகள் மட்டும் வாபஸ் பெறப்படும் எனவும், சிறப்பு ராணுவ பிரிவும், உளவு பிரிவும் பாகிஸ்தானில் தொடரும் என பெண்டகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிறிய குழுவினர் மட்டுமே வாபஸ் பெறப்படுகின்றனர். ஆனால், உளவுப்பிரிவையும் வாபஸ் பெறவேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.

அப்போட்டாபாத்தில் உஸாமாவை கொலை செய்ததாக அமெரிக்கா ராணுவம் அறிவித்தது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல் என அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே உஸாமா கொலைச்செய்யப்பட்டார்(?). பழங்குடி இன மக்கள் பகுதியில் அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆளில்லா விமானத்தாக்குதல் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. உஸாமா பாகிஸ்தானில் தங்கியிருப்பது அந்நாட்டிற்கு தெரியும் என அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கான்:கனடா ராணுவம் வாபஸ் பெறுகிறது
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» அமெரிக்காவ தொடர்ந்து பிரிட்டனும் ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுகிறது
» ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum