தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயார் - சையத் ஸலாஹூத்தீன்

Go down

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயார் - சையத் ஸலாஹூத்தீன்  Empty முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயார் - சையத் ஸலாஹூத்தீன்

Post by முஸ்லிம் Mon May 30, 2011 4:54 pm

காஷ்மீர் சம்பந்தமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைமை கமாண்டர் சையத் சலாஹூத்தீன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.சென்னையிலிருந்து வெளிவரும் தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.சையத் சலாஹூத்தீன் ஒருங்கிணைந்த ஜிஹாத் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது - காஷ்மீர் பிரச்னையில் சம்பந்தப்பட்ட இந்தியா,பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரிகள் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் தீர்வு காண முடியும். இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 155 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.1989 க்கு முன்னர் நாங்கள் ஜனநாயக ரீதியாக போராடினோம். ஆனால் நாங்கள் 1987 ஆம் ஆண்டு கலந்து கொண்ட தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றன. தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸூம் இந்தத் தேர்தலில் நாங்கள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்காக வன்முறைகளில் ஈடுபட்டனர். ஷராய்பாலா என்ற நகரில் உள்ள தேர்தல் வாக்குமையத்திற்கு வந்த பரூக் அப்துல்லா வாக்குப்பெட்டிகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார். இந்த முறைகேடான தேர்தலினால் காஷ்மீரில் ஜனநாயகத்தை அரசு புதைத்து விட்டது. என்னை எதிர்த்துப் போட்டியிட்ட முஹியுத்தீன் ஷாவுடைய குடும்பத்தினரும் எனக்காக வாக்களித்திருந்தனர். ஆனால் நான் கைது செய்யப்பட்டு ஹிரா நகர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். எனக்காக வேலை செய்த யாசின் மாலிக் உட்பட பலர் சித்ரவதைகளுக்கு ஆளாகினர்.

( இந்தத் தேர்தலில் முஹம்மத் யூசுப் ஷா என்ற பெயரில் போட்டியிட்ட ஸலாஹூத்தீன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது). மேலும் ஸலாஹூத்தீன் கூறுகையில் ” இந்த முறைகேடான ஜனநாயகத்தால் எதனை அடைந்து விட முடியும் என தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டு ஸலாஹூத்தீன் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிக்கு சென்று ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரும்வரை எங்களின் ஆயுதப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ள அவர் தற்போது தேர்தல் பாதைக்கு வரும் எண்ணம் சிறிதளவும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய பெயரை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்துள்ள தேடப்படும் பட்டியலில் இணைத்துள்ளது பற்றி குறிப்பிடும்போது ஆசாத் காஷ்மீர் என்பது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதிதான் அது வேறு நாட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சிலர் இந்தியாவிலே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முசப்பராபாத் தங்களின் அடிப்படை முகாந்திரமாக இருந்தாலும் இங்கு எந்தவித பயிற்சியும் கொடுப்பதில்லை என்றும் இந்திய பகுதியில் உள்ள காஷ்மீரில்தான் நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அஹ்லே ஹதீஸ் என்ற அமைப்பைச் சார்ந்த மௌலான சௌகத் அஹ்மத் ஷா கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என ஸலாஹூத்தீன் குறிப்பிட்டார். இவ்வாறான கொலைகளை யார் செய்தாலும் அது மனிதத்தன்மையற்றது என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவோரை தவறாக சித்தரித்து அறிக்கை விடுப்பதால் இந்தக் கொலையில் ஈடுபட்டோரை கண்டுபிடிப்பதற்காக ஒருங்கிணைந்த ஜிஹாத் கவுன்சிலும் முயற்சி செய்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அணுசக்தி:பேச்சுவார்த்தைக்கு தயார் – அஹ்மத் நஜாத்
» ஆப்கானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற அமெரிக்காவிற்கு உதவ தயார்-இம்ரான்கான்
» பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்
» மெஹ்தி ஹஸனுக்கு சிகிட்சை அளிக்க தயார் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum