தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்

Go down

உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்  Empty உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்

Post by முஸ்லிம் Mon May 30, 2011 5:17 pm

மெக்கா: அமெரிக்காவின் காவல் துறையை சேர்ந்த டெர்ரி ப்ரூக் இஸ்லாத்தை தழுவிய பின் முதல் முறையாக உம்ராவை நிறைவேற்றினார். சவுதியில் உள்ள முக்கிய நகரமான மதீனாவில் அவர் தன்னுடைய தொழுகையை நிறைவேற்றும் சமயத்தில் சவுதியின் தினப்பத்திரிக்கையான ஒகாஜ் செய்தியாளர்களின் கண்ணில் சிக்கிய அவருக்காக அவர் தன்னுடைய தொழுகை முடிந்து வரும் வரை காத்திருந்து அவரை பேட்டி எடுத்தனர் சவுதியை சேர்ந்த செய்தியாளர்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெர்ரி ப்ரூக் (முஸ்தபா அப்துல்லா) தான் இஸ்லாத்தை தழுவிய அற்புதத்தை பின்வருமாறு நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

2003-ஆம் வருடம் அமெரிக்காவின் படைவீரரான டெர்ரி ப்ரூக் இராணுவ மெய்க்காப்பாளராக பதவி பிரமாணம் புரிந்து அதிகம் சிறப்பு பெயர் பெற்றிராத குவாண்டனமோ சிறைக்கு காவல்காரராக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட அவருக்கு அவரை பீதியடைய செய்யும் அளவுக்கு திடுக்கிடும் பல விஷயங்கள் காத்து இருந்தது என்றும், முஸ்லிம்களின் வீடு என்று சொல்லும் அளவுக்கு தாலிபான் மற்றும் அல்-கொய்தாவை சேர்ந்த பலர் அங்கு இருப்பதைக் கண்டு முதலில் வேலை செய்ய அஞ்சிய ப்ரூக், அவர் பல வித விஷ ஜந்துக்களுடன் வேலை பார்க்கப் போவதாக எண்ணும் அளவுக்கு அவருடன் வெறுப்பை மட்டுமே கொண்டு அங்கு பணிக்கு சேர்ந்ததாக தெரிவித்தார்.

பின்னர் சில நாட்களில் மொரோக்கவை சேர்ந்த அஹமத் அல் ரஷ்தி என்பவருடனும் மற்றும் சில முஸ்லிம்களுடனும் நட்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், , தினமும் இரவு வேளைகளில் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைக்கு வெளியில் இருந்து இஸ்லாத்தைப் பற்றி கேட்டறிந்ததாகவும், தான் இஸ்லாத்தை தழுவியது என்றும் மறக்க முடியாது ஒன்று என்றும், டிசம்பர் 2003-ஆம் ஆண்டு காலை 12.49 மணி (நாடு இரவு) அளவில் நான் இஸ்லாத்தை தழுவினேன். என்னை சுற்றி அமர்ந்து இருந்த என்னுடைய சக தோழர்களும் என்னை முஸ்தபா முஸ்தபா என்று அழைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையை உறையை செய்த நிமிடம் என்றும்.

பின்னர் முஸ்தபா என்ற என் பெயருடன் அப்துல்லா என்றும் சேர்த்துக் கொண்டதன் பின் முஸ்தபா அப்துல்லா என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டேன். என்னுடைய வாழ்க்கைக்கு சரியான வழி கடவுள் “அல் ரஷீதி (சிறை எண் 590–ல் இருந்த )” மூலமாகத் தான் கிடைக்க செய்தார். இது வரை கண்டிராத குவாண்டனமோ சிறைக்கு என்னை மாற்றம் செய்வதை அறிந்து வேதனைக்கு உள்ளான எனக்கு அங்கு தான் என் வாழ்க்கை இருந்தது தெரியாமல் போய் இருந்தது. குவாண்டனமோ போகும் வரை கடவுள் மீது நம்பிக்கை இல்லாத எனக்கு அந்த சிறையில் தான் நான் இஸ்லாத்தை தழுவும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையையும், ஒப்பற்ற நேர் வழியையும் பெற முடிந்தது.

நானும் என்னுடன் இருந்த மற்ற சில காவலர்களும் இஸ்லாத்தை படித்ததற்க்காவும், இஸ்லாத்தை தழுவதற்கு எதிராகவும் அமெரிக்காவின் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டோம், பின்னர் இராணுவத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டோம். இப்பொழது நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு என்னைப் பற்றியும், நான் இஸ்லாத்தை தழுவிய அனுபவத்தைப் பற்றியும் புத்தகம் எழுதி கொண்டு இருப்பதாகவும், சிறையில் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும், அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடத்தப்படுவதை பற்றியும் வருத்தப்பட்டார்.

உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹதீஸா கூட்டுப் படுகொலை: அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
» அத்னானின் உறுதிக்கு முன்னால் இஸ்ரேல் மண்டியிட்டது
» 1948 ஃபலஸ்தீன் இனப் படுகொலைப் பற்றி உண்மையை வெளிக்கொணரும் முன்னாள் இஸ்ரேல் வீரர்
» பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது
» அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு துரோகியா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum