தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு

Go down

ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு  Empty ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு

Post by முஸ்லிம் Mon May 30, 2011 5:20 pm

ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு  Arab-League-256x170
தோஹா:சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை தேடுவதற்கான முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது. கத்தரில் நடந்த அரப் லீக்கின் கண்காணிப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

1967-ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகள் அடங்கிய ஃபலஸ்தீன் நாட்டிற்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக அரப் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஃபலஸ்தீன் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை பெறுவதற்கான தீர்மானத்தில் மாற்றமில்லை என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியதற்கு பிறகு அரப் லீக் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயாராகும் வேளையில் மத்திய ஆசியாவின் சமாதான நடவடிக்கைக்கு முடிவு ஏற்படும் என கூட்டத்திற்கு தலைமை வகித்த கத்தரின் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜஸீம் அல்தானி தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக தொடரும் ஃபலஸ்தீன் – இஸ்ரேல் தர்க்கத்திற்கு பரிகாரம் காண அமெரிக்க அதிபர் பாரக் ஒபாம முன்வைத்த நிபந்தனைகள் உள்ளிட்ட காரியங்கள் அரப் லீக்கின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நடவடிக்கை சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் என மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்திருந்தார்.நெதன்யாகுவின் அறிக்கை இஸ்ரேல் சமாதானத்தை விரும்பவில்லை என்பதை நிரூபிப்பதாக கத்தரின் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், ஃபலஸ்தீனிற்கு பூரண உறுப்பினர் அந்தஸ்து அளிக்க ஐ.நாவிடம் அரப் லீக் வலியுறுத்தும்.இதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆதரவை அரப் லீக் எதிர்பார்ப்பதாக கத்தர் நியூஸ் ஏஜன்சி கூறுகிறது.


ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10946
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum